search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பரங்குன்றத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள்
    X

    ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.

    திருப்பரங்குன்றத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள்

    • ரூ.2 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • திருப்பரங்குன்றத்தில் மேம்பாலம் அருகே, நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறினார்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாகமலை புதுக்கோட்டை, கரடிப்பட்டி, மேலக்குயில் குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.2 கோடி மதிப்பில் சாலை, நிழற்குடை உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் ராஜன் செல்லப்பா கூறியதாவது:-

    சென்னையில் மழையால் பொதுமக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். ஆனால் முதல்-அமைச்சர் பீகார் சென்றுள்ளார். இந்த அரசு அமைந்து 2 ஆண்டுகளில் தற்போது வரை எந்தவித மக்கள் நல திட்ட பணி களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

    இவர்கள் ஒதுக்கீடு செய்தது அனைத்தும் கலைஞர் நூலகம், கலைஞர் நினைவு சின்னம், கலைஞர் கோட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்காகவே. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கி வைத்த பல்வேறு திட்ட பணிகளை தான் தற்போது முதல்-அமைச்சர் திறந்து வைத்துள்ளார்.

    மதுரையில் வைகை கரை சாலை, சுற்றுச்சாலை, மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு. ஆனால் தி.மு.க. அரசு திட்ட ப்பணிகள் எதையும் செய்யாததால் சென்னை மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்படுகிறது.

    மதுக்க டைகளை மூடுவதாக மக்கள் மத்தியில் தெரிவித்து விட்டு அதிக வியாபாரம் இல்லாத மதுக் கடைகளை மட்டுமே மூடியுள்ளனர். திருப்பரங்குன்றத்தில் மேம்பாலம் அருகே, பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

    வருகிற 2026-ல் எய்ம்ஸ் மருத்துவமனை, நாகமலை புதுக்கோட்டை, வடபழஞ்சியில் தொழில் நுட்ப பூங்கா உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் வரவுள்ளது.

    நடிகர் விஜய் தற்போது நலத்திட்ட உதவிகள் செய்ததை அடுத்து அவர் அரசியலுக்கு வரலாம் என பல தெரிவிக்கின்றனர். எந்த நடிகர் வேண்டு மானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை போல நிலைத்து மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கக்கூடிய நடிகர்கள் இதுவரை வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் சந்திரன், மேலக்குயில்குடி நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×