என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Friendship Scheme"

    • அரசு பள்ளியில் காவலர்-மாணவர் நல்லுறவு திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • மேலூர் டி.எஸ்.பி. தொடங்கி வைத்தார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்-காவலர் நல்லுறவு திட்ட தொடக்க விழா மற்றும் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்லியஸ் ரெபோனி மற்றும் மேலூர் கல்வி மாவட்ட அலுவலர் முத்துலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினர். போலீஸ் துணை சூப்பிரண்டு பேசுகையில், காவலர்-மாணவர் நல்லுறவு திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் 40 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மேலூர் வட்டாரத்தில் மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மேலூர் இருபாலர் மேல்நிலை பள்ளி, கொட்டாம்பட்டி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 3 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

    இந்த பள்ளிகளில் 8, 9-ம் வகுப்பு படிக்கும் 25 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, வாரந்தோறும் சட்டம் சார்ந்த பயிற்சி வகுப்புகள் ேபாலீசாரால் வழங்கப்பட உள்ளது என்றார். நிகழ்ச்சியின் முடிவில் தலைமை ஆசிரியர் முனியாண்டி நன்றி கூறினார்.

    ×