என் மலர்
மதுரை
- 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ வீரர் மீது போக்சோ வழக்கு போடப்பட்டுள்ளது.
- சகோதரரின் பராமரிப்பில் உள்ளார்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயதுடைய சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரை இழந்த மாணவி, தற்போது சகோதர ரின் பராமரிப்பில் உள்ளார்.
சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் கார்த்திகேயன் (வயது 44) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாக கூறப்படு கிறது. இதுகுறித்து சிறுமி குடும்பத்தினரிடம் தெரி வித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசா ரணை நடத்தி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் ராணுவ வீரர் கார்த்திகேயன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- ஆடுகளை திருடும் கும்பலால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- விவசாயிகள் பொருளாதார அளவில் பாதிப்பை சந்திக்கின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம், கள்ளிக்குடி, பேரையூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் ஏரா ளமானோர் ஆடுகள் வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மை காலமாக ஆடுகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தற்போது திருடர்கள் ஆடுகளை திருடி வருகின்றனர்.
கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான் பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமாரி (50). சம்ப வத்தன்று இவர் தனது ஆடுகளை தோட்டத்தில் கட்டியிருந்தார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் 2 ஆடுகளை திருடிச்சென்றனர்.
இதேபோல் அதே பகுதியை சேர்ந்த தம்மைய நாயக்கர் என்பவருக்கு சொந்தமான ஒரு ஆடு திருடு ேபானது. கள்ளிக் குடியை அடுத்துள்ள கே.வெள்ளாகுளம் கிராமத்தில் முத்தையா என்பவருக்கு சொந்தமான 5 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக மேற்கண்ட பகுதிகளில் ஆடுகள் திருட்டு சம்பவம் அதிகரித்து வருகிறது.
இதனால் விவசாயிகள் பொருளாதார அளவில் பாதிப்பை சந்திக்கின்றனர். எனவே ஆடு திருடும் நபர்களை பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீசா ருக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குதிரைகள் எப்போதும் மனிதர்களோடு நெருங்கிப்பழகும் சமூக விலங்காகும்.
- இதுவரை பராமரிப்பின்றி சாலைகளில் விடப்பட்ட 100 குதிரைகளை காப்பாற்றியுள்ளேன்.
மதுரை:
மதுரை அவனியாபுரம் காவிரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன், சுயதொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மணிமேகலை. அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியின் மகன் சண்முகசுந்தர் (வயது 24). மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ. படித்துள்ள இவர், சரஸ்வதி நாடார் கல்லூரியில் எம்.ஏ. ஆங்கிலம் பயின்றார்.
சிறுவயது முதலே கால்நடைகள், செல்லப்பிராணிகள் வளர்ப்பில் அதிக ஆர்வம் கொண்ட இவர் காலப்போக்கில் அதனுடன் ஒன்ற தொடங்கினார். முதலில் மகனின் நடவடிக்கைகளை பெற்றோர் வெறுத்த போதிலும் நாளடைவில் அவர்களும் மகனுக்கு ஆதரவு அளித்து வந்தனர். அதன் பலனாக தனது வீட்டில் நாய், கோழி உள்ளிட்டவைகளையும் வளர்த்தார்.
கற்றது கையளவு, கல்லாதது உலகளவு என்பதற்கேற்ப எம்.ஏ. ஆங்கிலத்துடன் படிப்பை நிறுத்தாமல், அடுத்தகட்டமாக சட்டம் படிக்க விரும்பினார். இதற்காக சிவகங்கையில் செயல்பட்டு வரும் தனியார் சட்டக்கல்லூரியில் எல்.எல்.பி. படிப்பில் சேர்ந்தார். ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல நம்முடைய தேர்வாக இருப்பது இருசக்கர வாகனம், பேருந்து உள்ளிட்டவைதான்.
ஆனால் சண்முகசுந்தர் தேர்வு செய்ததோ குதிரை. கேட்கவே சற்று வினோதமாக இருந்தாலும் அதுதான் உண்மை. ஆம், தினமும் வீட்டில் இருந்து கல்லூரிக்கு குதிரையில் தான் பயணம் செய்து வருகிறார். இதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பே ஆசை ஆசையாய் வாங்கி வளர்த்த குதிரையை தற்போது ஒரு வாகனமாக பயன்படுத்த தொடங்கியுள்ளார்.
இதுபற்றி சண்முகசுந்தர் கூறுகையில், சிறு வயதில் இருந்தே வளர்ப்பு பிராணிகளான நாய்கள், ஆடு, மாடுகள் மீது ஆர்வம் ஏற்பட்டது. குதிரை வளர்க்க ஆசைப்பட்டு கிடைத்த வேலைகளை பார்த்து ரூ.75 ஆயிரம் சேமித்து குதிரை ஒன்றை வாங்கி வளர்த்தேன்.
குதிரைகள் எப்போதும் மனிதர்களோடு நெருங்கிப்பழகும் சமூக விலங்காகும். அதன் மூலம் பல அனுபவங்கள் கிடைக்கின்றன. குதிரை சவாரி செய்தால் மன அழுத்தம் குறையும். மேலும் மன தைரியமும் அதிகரிக்கும். பண்டைய மன்னர்கள் பெரும்பாலும் குதிரைப்படையை வைத்திருக்க காரணமும் இதுவேதான்.
கால்நடை மருத்துவர்கள் மூலம் குதிரை பராமரிப்பு குறித்து அறிந்துகொண்டேன். இதன்மூலம் இதுவரை பராமரிப்பின்றி சாலைகளில் விடப்பட்ட 100 குதிரைகளை காப்பாற்றியுள்ளேன். சாலையோரங்களில் அடிபட்டு கிடக்கும் கால்நடைகளை மீட்டு உரிய சிகிச்சை கிடைக்கச் செய்துள்ளேன். கபடி, கிரிக்கெட் போல குதிரையேற்றத்தையும் பரவலாக்க வேண்டும்.
குதிரைகள் பயன்பாட்டை அதிகரித்தால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கலாம். மேலை நாடுகளில் சில கிராமங்களில் இப்படி வாகனப் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து குதிரையை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் அழியும் நிலையில் உள்ள குதிரை இனத்தை நாம் பாதுகாக்கலாம்.
குதிரைக்கு தீவனமாக கோதுமை, கானப்பயறு, சுண்டல் தோல், நவதானியம், பெல்லட், குச்சி, கூஷா, தவிடு, கம்பு, கேழ்வரகு, பச்சரிசி போன்றவற்றை அளித்து வருகிறேன். நாள் ஒன்றுக்கு ரூ.400 வரை செலவாகும். தினமும் குதிரையில் 10 கி.மீ. தூரம் பயணம் செய்வேன். இதன் மூலம் மன தைரியம் அதிகரிக்கிறது. மேலும் மன அழுத்தமும் குறைகிறது. சாலையில் என்னை ஆச்சரியத்தோடு பார்ப்பவர்கள் ஆர்வமாக விசாரிக்கிறார்கள் என்றார்.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். சாலையில் திரியும் குதிரைகளுக்கெல்லாம் வாழ்வளிக்கிறேன் என்கிறார் சண்முகசுந்தர்.
- ரெயில் மோதி இறந்த 2 பேரும் 30 வயதுக்குள்ளானவர்களாக இருக்கலாம் என தெரிகிறது.
- 2 பேரின் முகமும் சிதைந்த நிலையில் இருப்பதால் அவர்களை உடனடியாக அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம்:
மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் மூலக்கரை சுரங்கப்பாதை ரெயில் தண்டவாள பகுதியில் இன்று அதிகாலை 2 வாலிபர்களின் உடல் சிதறி கிடந்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் மதுரை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிதறி கிடந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ரெயில் மோதி இறந்த 2 பேரும் 30 வயதுக்குள்ளானவர்களாக இருக்கலாம் என தெரிகிறது. வெள்ளை நிற சட்டையும், ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்திருந்த அவர்களின் விவரம் குறித்த எந்த ஆவணங்களும் கிடைக்கவில்லை. அவர்களது சட்டை பையில் இருந்த துண்டு சீட்டில் செல்போன் எண் இருந்தது. அதனை தொடர்பு கொள்ள முயன்றபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
2 பேரும் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது ரெயில் படியில் நின்று பயணம் செய்யும்போது 2 பேரும் தவறி விழுந்து இறந்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 பேரின் முகமும் சிதைந்த நிலையில் இருப்பதால் அவர்களை உடனடியாக அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து நடந்த பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
- குளக்கரை மற்றும் படிக்கட்டுகள் சேதம் அடைந்து உள்ளன.
- இக்கோவிலில் சுயம்பு மூர்த்தியாக சிவன் காட்சி அளிக்கிறார்.
மதுரை செல்லூரில் பிரசித்தி பெற்ற திருவாப்புடையார் கோவில் உள்ளது. திருஞான சம்பந்தரால் போற்றப்பட்ட கோவிலில் பழமையான கோவில் ஆகும். திருவிழா மற்றும் விசேஷ நாட்களிலும், திருவிழா நாட்களி லும் இங்கு அதிகமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இக்கோவிலில் சுயம்பு மூர்த்தியாக சிவன் காட்சி அளிக்கிறார். கோவிலுக்குள் உள்ள தீர்த்த குளத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பக்தர்கள் பயன்படுத்தி வந்தனர். முன்பு அந்த தீர்த்த குளம் நீர் நிரம்பி காணப்பட்டது.
ஆனால் காலப்போக்கில் உரிய பராமரிப்பு இல்லாமல் போனதால் குளத்தில் செடிகொடிகள் வளர்ந்து, முட்புதர்கள் நிறைந்து தற்போது தண்ணீரின்றி குளம் வறண்டு காணப்படுகிறது.
குளக்கரை மற்றும் படிக்கட்டுகள் சேதம் அடைந்து உள்ளன. அமாவாசை நாட்களில் இந்த குளக்கரையில் முன்னோர்களுக்கு பக்தர்கள் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆனால் தற்போது இந்த தீர்த்த குளத்தை பக்தர்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால் அவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகம் திருவாப்புடையார் கோவில் குளத்தை தூர்வாரி தண்ணீர் நிரப்பிடவும், சிதிலமடைந்த படிக்கட்டுகளை சீரமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- அப்போதைய கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
- மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக்கொணடு அதற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஏற்க முடியாது.
மதுரை:
திருநெல்வேலியைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவர் கல்வித்துறை தொடர்பான ஒரு வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவு முறையாக செயல்படுத்தப்படவில்லை. இதையடுத்து உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என 2020ம் ஆண்டு ஞானப்பிரகாசம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அப்போதைய கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதைய கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
அப்போது, நீதிமன்ற உத்தரவை ஏன் நிறைவேற்றவில்லை? என அவர்களிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி கடும் அதிருப்தி தெரிவித்தார். நீதிபதி கூறியதாவது:-
ஒரு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டபிறகுதான் எது சரி? எது தவறு? என ஆலோசனை நடத்தி உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. அந்த உத்தரவுகளை அமல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது. ஆனால் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளை முறையாக அமல்படுத்துவதில்லை.
எனவே, இதுபோன்ற வழக்குகளில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத ஒரு அதிகாரியையாவது சிறைக்கு அனுப்ப வேண்டும். அப்போதுதான் சரியாக இருக்கும்.
நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால் அது தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும். மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக்கொணடு அதற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஏற்க முடியாது.
இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.
- 10, 12-ம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
- முடிவில், மதுரை நாடார் உறவின் முறை பொதுச் செயலாளர் வி.பி.மணி நன்றி கூறினார்.
மதுரை
மதுரை நாடார் உறவின் முறை சார்பில் பெருந்த–லைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாளை முன் னிட்டு கல்வி மேற்படிப்பு ஊக்கத்தொகை வழங்கும் விழா ம.நா.உ.சுப்புராஜ நாடார் கிருஷ்ணம்மாள் மன்றத்தில் நடைபெற்றது. விழாவுக்கு மதுரை நாடார் உறவின்முறை துணைத் தலைவர் ஆர்.முத்தரசு தலைமை தாங்கினார்.
பொதுச்செயலாளர் எஸ்.கே.மோகன் வரவேற் றார். ஜெயராஜ் நாடார் மேல் நிலைப்பள்ளி கே.பி.எஸ்.வி.டி. மாணவர் விடுதி செயலாளர் ப.குமார், பாரத பெருந்தலைவர் காமராஜர் அறநிலைய தலைவர் ஜெமினி எஸ்.பால்பாண்டி–யன், துணைத்தலைவர் எம்.எஸ்.சோமசுந்தரம், பொதுச் செயலாளர் கே.பி.எம்.எம்.காசிமணி, டி.பாலசுப்பிரம–ணியன்,
ஜெயராஜ் அன்னபாக்கி–யம் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி இணைச் செயலாளர் ஒய்.சூசை அநா் தோணி ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். தனியார் தொலைக்காட்சி புகழ் பட்டிமன்ற நடுவர் அவனி மாடசாமி சிறப்புரையாற்றி–னார்.
சாக்ஸ் எம்.ஏ.வி.எம்.எம். பொறியியல் கல்லூரி செயலாளர் ஜி.கணேசன் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 450 மதிப்பெண்க–ளுக்கு மேல் பெற்ற 25 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரமும்,
12-ம் வகுப்பு பொதுத் ேதர்வில் 500 மதிப்பெண்க–ளுக்கு மேல் பெற்ற 61 மாணவ, மாணவிகளுக்கு ரூ.6 லட்சத்து 10 ஆயிரமும் என மொத்தம் ரூ.7 லட்சத்து 35 ஆயிரம் கல்வி மேற்ப–டிப்பு ஊக்கத்தொகையாக வழங்கினார். முடிவில், மதுரை நாடார் உறவின் முறை பொதுச் செயலாளர் வி.பி.மணி நன்றி கூறினார்.
- மதுரையில் நாளை அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- தி.மு.க. அரசுக்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்ய வேண்டுமாறு வேண்டுகிறேன்.
மதுரை
மதுரை மாநகர் மாவட்ட அதி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் எந்தவிதமான வளர்ச்சி திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. மாறாக மக்கள் மீது சொத்து வரி, மின்கட்டண உயர்வு மற்றும் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள், மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
தி.மு.க. அரசின் இத்தகைய நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், உடனடியாக விலைவாசியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரியும் அதி.மு.க. பொதுச் செயலாளர், முன்னாள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க மதுரை மாவட்ட அதி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு மதுரை பெத்தானியாபுரம் திடலில் நடைபெறுகிறது.
இந்த ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் தி.மு.க. அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்படுகிறது.
ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகள், அனைத்து அணி நிர்வாகிகள், கூட்டுறவு சங்க, உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னோடிகள் பொது மக்கள் அனைவரும் திரளாக பங்கேற்று மக்கள் விரோத தி.மு.க. அரசுக்கு எதிராக தங்களது கண்டனங்களை பதிவு செய்ய வேண்டுமாறு வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- அவனியாபுரத்தில் நூலகத்தை காணவில்லை என்று புகார் எழுந்தது.
- கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
மதுரை
மதுரை அவனியாபுரத்தில் 1953-ம் ஆண்டு திரு.வி.க. நூல் நிலையம் தொடங்கப்பட்டது. அப்போது அவனியாபுரம் ஊராட்சியாக இருந்தது.
பின்னர் அவனியாபுரம் நகர் பஞ்சாயத்து யூனியனுக்கு கட்டிடங்கள் கட்டும்போது இந்த நூலகம் அவனியாபுரம் மெயின் ரோட்டில் உள்ள வாடகை கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. அந்த கட்டிடம் பழமையான கட்டிடமாக மாறிய நிலையில் இந்த நூலகம் தற்போது அவனியாபுரம் அஞ்சலகம் இருக்கும் இடத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள அரண்மனைகாரர் வாடகை கட்டிடத்தில் இயங்கியது. அதன் பின்னர் அவனியாபுரம் நகராட்சியாக மாறியது. தற்போது மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்த நூலகம் எங்கு செயல்படுகிறது? என தெரியவில்லை. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த வாசகர் சிவமணி கூறுகையில், மிகப் பழமை வாய்ந்த அவனியாபுரம் நூலகம் தற்போது எங்கு செயல்படுகிறது? என தெரியவில்லை. திரைப்பட நகைச்சுவை காட்சியை போல் கல்வெட்டு இருக்கிறது. ஆனால் கட்டிடத்தை காணவில்லை.
தற்போது இந்தப்பகுதி யில் நூலகம் இல்லாதது பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்றார். இந்தப்பகுதியில் தமிழ் அகிலன் கூறுகையில், அவனியாபுரத்தில் இருந்த நூலகத்தில் நான் பேரறிஞர் அண்ணா எழுதிய வேலைக்காரி, மாஜி கடவுள், நீதி தேவன், ஓர் இரவு,போன்ற புத்தகங்களை படித்து இருக்கின்றேன் மேலும் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் ஜெயகாந்தனின் சிறுகதைகள் போன்ற புத்தகங்களை இந்த நூலகத்தில் படித்திருக்கி றேன். தற்போது இந்த பகுதியில் நூலகம் இல்லாதது பெரும் வருத்தம் அளிக்கிறது என்றார்.
மேலும் இப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், வாசிப்பு திறனை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகம் ஆண்டு தோறும் புத்தகத்திருவிழா நடத்தி மாணவர்களிடம், இளைஞர்களிடம் வாசிப்பு திறனை ஊக்கப்படுத்தி வருகிறது. ஆனால் பழமை யான நூலகத்தை கண்டு கொள்ளாமல் விட்டது அதிருப்தி அளிகிறது. எனவே கலெக்டர் இதில் கவனம் செலுத்தி அவனி யாபுரம் மையப்பகுதியில் கவுன்சிலர்கள் அலு வலகத்தின் மாடியில் காலியாக உள்ள இடத்தில் நூலகத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என்றனர்.
- வாலிபரை கொலை செய்து பிணம் கிணற்றில் வீசியுள்ளனர்.
- மது போதையில் தவறி உள்ளே விழுந்து இறந்தாரா? காயங்கள் எதுவும் இன்றி விஷம் கலந்து கொலை செய்து கிணற்றுக் குள் தூக்கி வீசப்பட்டாரா?
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நீரேத் தான் புது கண்மாய் சாலையில் உள்ள ஒரு கிணற்றில் பேண்ட் சட்டை அணிந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக கிராம நிர்வாக அலுவலர் முகிலனுக்கு தகவல் கிடைத்தது. அவர் இது குறித்து வாடிப்பட்டி போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரி வித்தார்.
அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை நிலை அதிகாரி சதக்கத்துல்லா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் குதித்து அழுகிய நிலையில் கிடந்த 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணத்தை மீட்டனர்.
அதன்பின் வாடிப்பட்டி போலீஸ் சப்- இன்ஸ் பெக்டர்கள் முரு கேசன், மாயாண்டி ஆகியோர் பிணத்தை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்தவர் கிரே கலர் பேண்டும், புளூ கலரில் வெள்ளை புள்ளி போட்ட முழுக்கை சட்டை யும் அணிந்திருந்தார். உடலில் ரத்த காயங்கள் எதுவும் இல்லை. முகம் முழுவதும் உப்பிய நிலையில் காணப்பட்டது.அவர் யார்? எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை. கிணற்றை சுற்றி உள்ள பகுதியில் பேக், செல்போன் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை. மது போதையில் தவறி உள்ளே விழுந்து இறந்தாரா? அல்லது காயங்கள் எதுவும் இன்றி விஷம் கலந்து கொலை செய்து கிணற்றுக் குள் தூக்கி வீசப்பட்டாரா? உள்ளிட்ட கோணங்களில் வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துமணி விசாரித்து வருகிறார்.
- வாடிப்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும்.
- இந்த தகவலை சமயநல்லூர் செயற்பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.
மதுரை
வாடிப்பட்டி, கொண்டையம்பட்டி, அய்யங்கோட்டை துணை மின் நிலையங்களில் நாளை (20-ந்தேதி) பராம ரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சுற்று வட்டார பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும். மின்தடை ஏற்படும் பகுதி கள்:-
வாடிப்பட்டி, பைபாஸ், பழனியாண்டவர் கோவில், பாலமரத்தான் நகர், வி.எஸ்.நகர், ஜவுளிபூங்கா, பூச்சம் பட்டி, கச்சைகட்டி, குலசேக ரன்கோட்டை, கோட்டை மேடு. விராலிப்பட்டி, சாணாம்பட்டி, முருகன் கோவில் லைன், சொக்க லிங்கபுரம், இராமை யன்பட்டி நரிமேடு தாதம்பட்டி. தாதப்பநா யக்கன்பட்டி. போடி நாயக்கன்பட்டி, ராம நாயக்கன்பட்டி. கள்ளர்ம டம். வல்லபகணபதிநகர். மகாராணிநகர், ஆர்.வி.நகர், பொட்டுலுபட்டி, எல்லை யூர். ராமராஜபுரம். கூலாண்டிப்பட்டி, செம்மினிபட்டி, குட்லா டம்பட்டி, அங்கப்பன் கோட்டை, சமத்துவபுரம், தாடகநாச்சி புரம், சொக்கலிங்கபுரம், மோகன் பிளாட். ரிஷபம். திருமா ல்நத்தம் ஆலங்கொட்டாரம், ராய புரம், கல்லுப்பட்டி, மேட்டு நீரேத்தான், நெடுங்குளம், ஆண்டிப்பட்டி பங்களா. அமர டக்கி, சம்பக்குளம் விவேக் புளு மெட்டல்ஸ் கம்பெனி, கொண்டையம்பட்டி, அய்யனகவுண்டம்பட்டி, செம்புகுடிபட்டி, தனிச்சியம் கார்னர். வடுகப்பட்டி, கட்டக்குளம், கொண்டை யம்பட்டி, தாதக வுண்டன்பட்டி. பெரிய இலந்தைக்குளம், நடுப்பட்டி, கீழக்கரை, குட்டி மேய்க்கிப்பட்டி.
அய்யங்கோட்டை பகுதி முழுவதும், சி.புதூர், சித்தா லங்குடி, குத்தாலக்குடி. மூலக்குறிச்சி, வைரவநந்தம், யானைக்குளம், ஆர்.கே. ராக், வைகை ஆயில், கோத்தாரி, நகரி ஏரியா, எஸ்.என்.பி. ஏரியா, தனிச்சியம் அக்ரி.
இந்த தகவலை சமயநல்லூர் செயற்பொறி யாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.
- அருள் ஆனந்தர் கல்லூரி மாணவி வெள்ளி, வெண்கல பதக்கம் வென்றார்.
- வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மதுரை
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளை–யாட்டு போட்டிகள் சென் னையில் நடைபெற்று வரு–கின்றன. இதில் தமிழகத்தின் பல்வேறு பள்ளி, கல்லூ–ரிகளில் இருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற–னர்.
இதில் மதுரை அருகே உள்ள கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் முத–லாம் ஆண்டு பயின்று வரும் மாணவி மாரிச்செல்வி சென்னை யில் 100 மீட்டர் ஓட்டப்ப ந்தயத்தில் வெள் ளிப் பதக்கத்தையும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்க ல பதக்கத்தையும் வென்றார்.
பதக்கங்கள் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவியை அதிபர் ஜான் பிரகாசம், செயலர் அந்தோ–ணிசாமி, கல்லூரி முதல்வர் அன்பரசு, இணை முதல்வர் சுந்தரராஜன், கல்லூரி விளையாட்டுத்துறை ஒருங் கிணைப்பாளர் இன் னாசி ஜான், உடற்கல்வி இயக்கு–னர் வனிதா, உடற் கல்வித் துறை தலைவர் வீர பர–மேஸ்வரி மற்றும் சக மாணவ, மாணவிகள், பெற் றோர்கள் பாராட்டி–னர்.






