என் மலர்
மதுரை
- செக்கானூரணி அருகே ரெயில் மோதி மனநலம் பாதித்த வாலிபர் பலியானார்.
- தற்கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை செக்கானூரணி பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் இன்று காலை உடல் துண்டான நிலையில் ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் செக்கானூரணி போலீசார் மற்றும் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிதறிக்கிடந்த உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தண்டவாள பகுதி யில் கிடந்த ஆவணங்களை வைத்து இறந்தவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவர் செக்கானூரணி அருகே உள்ள கண்ணனூர் கருங்காபட்டியை சேர்ந்த பவுன்சாமி மகன் விஸ்வநாதன்(வயது45) என தெரியவந்தது. குடும்ப பிரச்சினை காரணமாக இவரது மனைவி விவா கரத்து செய்துவிட்டார். இதனால் சகோதரர்கள் வீட்டில் வசித்து வந்த விஸ்வநாதனுக்கு கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற விஸ்வநாதன் தண்ட வாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் மோதி இறந்தாரா? அல்லது ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆடி முதல் வெள்ளிக்கிழமையில் அம்மன் கோவிலில் பெண்கள் குவிந்தனர்.
- நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை
தமிழ் மாதங்களில் அம்ம–னுக்கு மிகவும் உகந்த மாத–மாக கருதப்படுவது ஆடி மாதமாகும். ஆடி மாதங்க–ளில் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடை–பெறும். அதில் ஆலயங்களில் கூழ்வார்த்தல், நேர்த்திக் கடன் செலுத்துதல் உள் ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கும்.
இன்று ஆடி முதல் வெள் ளிக்கிழமை என்பதால் மது–ரையில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்க–ளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோவி–லில் காலையில் நீண்ட வரி–சையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், ரிசர்வ்லைன் மாரியம்மன் கோவில், திருப்பரங்குன்றம் வெயிலுகந்த அம்மன் கோவில், ஜெய்ஹிந்த்புரம் வீரமாகாளியம்மன் கோவில்,
மறவர் சாவடி தசகாளி–யம்மன் கோவில், முடக்கு சாலை காளியம்மன் கோவில், சொக்கலிங்க நகர் சந்தன மாரியம்மன் கோவில், பழங்காநத்தம் நேரு நகர் அங்காள ஈஸ்வரி கோவில், புதூர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் அம்ம–னுக்கு சிறப்பு அலங்கா–ரங்கள் செய்யப்பட்டு தீபா–ராதனை காண்பிக்கப்பட்டது.
அழகர்கோவில் நூபுர கங்கை ராக்காயி அம்மன் கோவிலில் அம்மன் பல் வேறு வண்ண மலர்க–ளால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித் தார்.
இதனால் இக்கோவில்க–ளில் கூட்டம் அலைமோதி–யது. திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்ம–னுக்கு விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலிலுக்கு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில், தூத்துக்குடி, திருநெல்வேலி சங்க–ரன்கோவில், திருவேங்கடம் தூத்துக்குடி, விளாத்தி குளம், கோவில்பட்டி போன்ற பல ஊர்களில் இருந்தும் அதிக அளவிலான பக்தர்கள் வந்திருந்தனர்.
அவர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், அம்ம–னுக்கு தீச்சட்டி, அங்கப்பி–ரதட்சணம், பால்குடம், ஆயிரம் கண் பானை, கரும்பு தொட்டில், மாவி–ளக்கு போன்ற நேர்த்திக்க–டனை எடுத்து செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோவில், காரைக்குடி கொப்பு டையம்மன் கோவில், மடப்புரம் காளி–யம்மன் கோவில், சோழவந்தான் ஜனகை மாரியம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
- பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
- 5 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நல குறைவால் இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வாவிடைமருதூர் ஊராட்சி யில் உள்ள முல்லை பெரியாறு ஆற்றங்கரையில் இன்று அதிகாலை ஓரிடத்தில் தீப்பற்றி எரிந்து கரும்புகையாக வந்துள்ளது. ஆற்றங்கரை அருகே குடி யிருப்பவர்கள் இதைக்கண்டு சந்தேகமடைந்து அருகே சென்று பார்த்த போது ஒரு பெண் தீ வைத்து தற்கொலை செய்து கொண் டது தெரியவந்துள்ளது.
உடனடியாக அலங்கா நல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சமயநல்லூர் சரக டி.எஸ்.பி. பாலசுந்தரம், இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசா ரணையை நடத்தினர்.
விசாரணையில் அவர் அதே ஊரைச் சேர்ந்த விஜயா (வயது46) என்பதும், இவர் கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்து உள்ளது.
மேலும் இவர் பெயிண்ட் அடிக்க பயன்படுத்தும் திண்ணரை உடம்பில் ஊற்றி தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார் என்பது போலீ சாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
போலீசார் விஜயா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீக்குளித்து இறந்த விஜயாவிற்கு 2 மகன்கள் உள்ள நிலையில் இவரது கணவர் மார்கண்டன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நல குறைவால் இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முளைக்கொட்டு திருவிழா தொடங்கியது.
- விழா ஏற்பாடு–களை கோவில் இணை கமி–ஷனர் கிருஷ்ணன் மற்றும் கோவில் பணியா ளர்கள் செய்து வருகின்றனர்.
மதுரை
ஆடிப்பட்டம் தேடி விதை என்ற முன்னோர் வாக்கின்படி விவசாயப் பெருமக்கள் ஆடி மாதத்தில் விதை விதைத்து நாற்று நட்டு விவசாயப் பணிகளை மேற்கொள்வர். அவர்கள் தங்கள் விளை நிலங்களில் பயிர்கள் அமோக விளைச் சல் வேண்டி முளைக்கட்டு வைத்து இறைவனை வழிபாடு செய்வார்கள்.
உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் விவசாயம் வளம் பெறவும், நாடு செழிக்க வேண்டியும் மீனாட்சி அம்ம–னுக்கு மட்டும் ஆடி முளைக் கொட்டுத் திருவிழா, ஐப்பசி கோலாட்ட உற்சவம், நவ–ராத்திரி விழா, மார்கழி எண்ணெய் காப்பு திருவிழா ஆகியவை நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடி முளைக்கொட்டுத் திருவிழா இன்று (20-ந்தேதி, வியாழக் கிழமை) தொடங்கி வருகிற 29-ந்தேதி வரை நடைபெறு–கிறது.
விழாவின் தொடக்கமாக இன்று காலை 10.35 மணி முதல் 10.59 மணிக்குள் அம்மன் சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் கொடி–யேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி, அம்மனை வழிபட்டனர். விழாவையொட்டி இன்று முதல் விழா திருவிழா நடைபெறும் 10 நாட்கள் மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை ஆகிய இருவேளை ஆடி வீதியில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
விழாவின் 3-ம் நாளான நாளை மறுநாள் (22-ந்தேதி) ஆடிப்பூரத்தன்று மூலஸ்தா–னம், உற்சவர் மீனாட்சி அம்மனுக்கு உச்சிகால பூஜையில் ஏற்றி, இறக்குதல் வைபவம் நடக்கிறது. 23-ந்தேதி வெள்ளி சிம்மாசனத் திலும், 24-ந்தேதி வெள்ளி ரிஷப வாகனத்திலும், 25-ந்தேதி கிளி வாகனத்திலும், 26-ந்தேதி புஷ்ப பல்லக்கி–லும் வீதியுலா நடைபெறும்.
7-ம் நாளான 26-ந்தேதி இரவு வீதிஉலா முடிந்த பின் உற்சவர் சந்நதியில் அம்மன், சுவாமி மாலை மாற்றும் வைபவமும் நடைபெறும். 27-ந்தேதி தங்க குதிரை வாகனத்திலும், 29-ந்தேதி புஷ்ப வாகனத்தி லும், 10-வது நாள் நிறைவு நாளான 29-ந்தேதி கனக தண்டியலில் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள். விழா விற்கான ஏற்பாடு–களை கோவில் இணை கமி–ஷனர் கிருஷ்ணன் மற்றும் கோவில் பணியா ளர்கள் செய்து வருகின்றனர்.
- ரியல் எஸ்டேட் அலுவலகத்தை உடைத்து 20 பவுன்-ரூ 23 லட்சம் கொள்ளை போனது.
- கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வரு கின்றனர்.
மதுரை
மதுரை உத்தங்குடி டி.எம்.நகர் கிழக்கு மெயின் ரோட்டில் வசிப்பவர் சையத்கான் (வயது56), ரியல்எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் குடியிருக்கும் வீட்டின் எதிரே இவரது அலுவலகம் உள்ளது.
வழக்கம்போல் இரவு அலுவலகத்தை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். அதி காலையில் பார்த்த போது அலுவலகத்தின் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அலுவலகத்திற்குள் சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைத்தி ருந்த 20 பவுன் தங்க நகைகள், ரூ.23 லட்சம் ரொக்கம் மற்றும் 25 பிளாட் பத்திரங்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கே.புதூர் போலீசில் சையத்கான் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மோப்ப நாய், கைரேகை நிபு ணர்கள் வரவ ழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
மேலும் அந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.அதன் அடிப்படையில் பணம், நகைகள், பத்திரங்கள் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதித்த வாலிபர் இறந்தார்.
- தப்பி சென்ற பைரவமூர்த்தி, டேவிட் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை
மதுரை மகபூப்பாளையம் டி.பி. மெயின் ரோடு பகுதியில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கரிமேடு போலீசார் அங்குள்ள ஒரு கெஸ்ட் ஹவுசில் சோதனை நடத்தினர். அங்கு 8 பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது.
அந்த பெண்களை மீட்ட போலீசார் அந்த கெஸ்ட் ஹவுசின் மேலாளர் ரிசர்வ்லைன் பகுதியை சேர்ந்த டார்வின், மகபூப்பாளையம் கிழக்கு குறுக்கு தெருவை சேர்ந்த சீனிவாசன், தல்லாகுளம் ஆசாரி தெருவை சேர்ந்த விக்னேஷ் பாண்டி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் 3 பேர் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களில் சென்னை வடபழனி பெருமாள் தெருவை சேர்ந்த பாண்டியன் (53) என்பவர் கெஸ்ட் அவுஸ் கட்டிடத்தின் மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். தப்பி சென்ற பைரவமூர்த்தி, டேவிட் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
- கல்லூரி மாணவிகள் மாயமானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.
மதுரை
மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ள கொ.பாறைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் ஜெயலட்சுமி (வயது 19). இவருக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். இவர் செக்கானூரணி பகுதியில் உள்ள கல்லூரியில் நர்சிங் படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மகளை கண்டுபிடித்து தருமாறு செக்கானூரணி போலீஸ் நிலையத்தில் கணேசன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரமங்கலம் அருகே உள்ள சக்கரப்ப நாயக்கனூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபாண்டி. இவரது மகள் கௌசல்யா (வயது 19). நிலக்கோட்டை அரசு கல்லூரியில் படித்து வருகிறார். வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஜெயபாண்டி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.
- கல்லூரி மாணவியிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- அவர்களை போலீசார் கைது செய்தனர்.
மதுரை
மதுரை மிளகரணை சங்கீத் நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் பிருந்தா காமேஷ் (வயது 19). இவர் கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. படித்து வருகிறார். கல்லூரி பகுதியில் நடந்து சென்ற போது அவரின் பின்னால் வந்த 2 மர்ம நபர்கள் மாணவி கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
இது குறித்து சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்தில் மாணவி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபபதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மாணவியிடம் செல்போனை பறித்தது பொம்மிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 19), ராஜ்குமார் வயது (18) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
- தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி விரைவில் கலைக்கப்படும் என்று செல்லூர் ராஜூ கூறினார்.
- இந்த எழுச்சி மாநாடு வருகிற நாடாளு–மன்றத் தேர்தலுக்கு அச்சா–ரமாக அமையும்.
மதுரை
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி விரைவில் கலைக்கப் படும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
தமிழகம் முழுவதும் விலை–வாசி உயர்வை கண் டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மதுரை–யில் ஆரப்பாளையம் பெத் தானியாபுரம் பகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாநகர், புறநகர் கிழக்கு, புறநகர் மேற்கு மாவட்டங் களைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர் திரளாக பங்கேற்ற கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர்ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன கோஷங் களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து அங்கு கூடியி–ருந்த அ.தி.மு.க. நிர்வாகி–களும், தொண்டர்களும் கோஷங்களை எழுப்பினர்.
இதில் பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, அண் ணாதுரை, திரவியம், எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் சரவணன், எஸ்.எஸ்.சரவ–ணன், மாணிக்கம், ராஜாங் கம், வெற்றிவேல்,நிலையூர் முருகன் கவுன்சிலர்கள் சோலைராஜா, சண்முக–வள்ளி, மாயத்தேவன், ரூபிணி குமார், பைக்காரா கருப்புசாமி, பரவைராஜா, முத்துவேல், கலைச் செல் வம், கே.வி.கே.கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல் லூர் ராஜூ பேசியதா–வது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனால் இதுவரை மக்களுக்கு எந்த நன்மை–யான திட்டங்களையும் செய்யவில்லை. ஆனால் மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றி வருகிறார்கள். இத–னால் இந்த ஆட்சி எப்போது முடியும் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கி–றார்கள்.
தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கொண்டுவர மக்கள் ஆர்வத்துடன் இருக்கிறார் கள்.புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவி அம்மாவுக்கு பிறகு மூன் றாவது சக்தியாக எடப்பாடி பழனிசாமி உருவெடுத்துள் ளார். அவரால் தி.மு.க. என்ற இயக்கத்தை அழிக்க முடியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு பேசும் போது, அமைச்சர்களோ, தி.மு.க.–வினரோ ஏதாவது பிரச் சினையை ஏற்படுத்தி விடு–வார்களோ என்று நினைத் துக்கொண்டு இருக்கிறேன், இதனால் தூக்கம் என்று தவிக்கிறேன் என்றார்.
ஆனால் இப்போது மத்திய அரசின் அமலாக துறையின் சோதனை அவ–ருக்கு மிகப்பெரிய கலக் கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும் வெளியே வடி–வேல் பாணியில் பேசி சமாளிக்கிறார். ஆனால் மு.க.ஸ்டாலினுக்கு "பில்டிங் ஸ்ட்ராங், பேஸ் மட்டம் வீக்" என்ற வகையில் தி.மு.க. உள்ளது.
எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். தி.மு.க. ஆட்சி விரைவில் கலைக்கப்படும். கருணாநிதி வழியில் மு.க.ஸ்டாலினின் இந்த அரசை விரைவில் கலைக்க நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. தமிழக போலீஸ் மீது மத்திய அமலாக்க துறைக்கு நம் பிக்கை இல்லை. அந்த அள–வுக்கு தமிழக காவல்துறை சீரழிந்து விட்டது. அதனால் தான் மத்திய போலீஸ் பாதுகாப்புடன் அமலாக் கத்துறை தி.மு.க. அமைச் சர்கள் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறது.
இந்த சோதனை இன்னும் தொடரும். 2016-ம் ஆண் டுக்குள் இன்னும் பல்வேறு சோதனைகள் நடத்தப்படும். அதைத் தொடர்ந்து கருணா–நிதி வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தி.மு.க. ஆட்சியும் கலைக்கப்படும். மதுரையில் அடுத்த மாதம் 20-ந்தேதி மாபெரும் எழுச்சி மாநாட்டை எடப்பா–டியார் தலைமையில் கூட்டி உள்ளோம்.
இந்த மாநாட்டில் மது–ரையில் இருந்து 4 லட்சம் தொண்டர்கள் குடும்பம், குடும்பமாக பங்கேற்பார்கள். அ.தி.மு.க.வின் இந்த எழுச்சி மாநாடு வருகிற நாடாளு–மன்றத் தேர்தலுக்கு அச்சா–ரமாக அமையும்.
இவ்வாறு அவர் பேசி–னார்.
- 2 வாரங்களாகியும் தக்காளி விலை குறையவில்லை.
- வெளி மார்க்கெட்டுகளில் இதைவிட விலை அதிகமாக உள்ளது.
மதுரை
இந்தியர்கள் சமையலுக்கு அதிகம் பயன்படுத்தி வருவதும், பல்வேறு உணவு பொருட்கள் தயாரிப்பில் முக்கிய பொருளாகவும் உள்ள தக்காளியின் விலை கடந்த 2 வாரங்களாக வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. கிலோ ரூ. 20 முதல் 30 வரை விற்பனை செய்து வந்த தக்காளி தற்போது கிலோ ரூ. 140 வரை விற்பனையாகிறது.
தமிழ கத்தின் தக்காளி தேவை அண்டை மாநிலங்களை நம்பி உள்ளது. ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நாள்தோறும் டன் கணக்கில் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 வாரங்களாக பருவநிலை மாற்றம், மழைப்பொழிவு உள்ளிட்ட காரணங்களால் தக்களாளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் தக்காளிக்கு பற்றாக்குறை நிலவியது.
தேவை அதிகம் காரணமாக அதன் விலையும் நாளுக்குநாள் ராக்கெட் வேகத்தில் ஏறி வந்தது.
தொடக்கத்தில் கிலோ ரூ. 80-க்கு விற்ற தக்காளி தற்போது ரூ.130 முதல் 140 வரை விற்பனையாகிறது.
இந்த திடீர் விலையேற்றம் நடுத்தர, ஏழை மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.
அன்றாடம் சமையல் பயன்படும் தக்காளியை தவிர்க்க முடியாத காரணத்தில் விலையேற்றத்தையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் வாங்கி செல்கிறார்கள். தமிழக அரசும் தக்காளியை ரேசன் கடைகள் மூலம் விற்பனை செய்தது. ஆனால் விலை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. 2 வாரங்களாகியும் தக்காளி விலை தற்போது வரை குறையவில்லை. இதனால் பொதுமக்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிலர் தக்காளியை பதுக்கி வைத்து விற்பனை செய்துவம் சில மாநிலங்களில் நடந்து வருகிறது. 2 வாரத்திற்கு முன்பு சரியாக விளைச்சல் செலவு கூட கிடைக்காத தக்காளி பயிரிட்ட விவசாயிகளை இந்த விலையேற்றம் கோடீஸ்வரர்களாகவும், லட்சாதிபதிகளாவும் மாற்றி உள்ளது.
மதுரையை பொருத்த வரை தக்காளி விலை குறைந்தபாடில்லை. அதற்கு மாறாக நாள்தோறும் விலையேறிக் கொண்டு உள்ளது. தக்காளி மட்டுமின்றி சின்னவெங்காயம், கத்திரிக்காய், பீன்ஸ், மிளகாய் உள்ளிட்ட பெரும்பாலான காய்கறிகளின் விலையும் ரூ. 100-ஐ தாண்டி உள்ளது.
மதுரை உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகளின் விலை விபரம் வருமாறு:-
புடலங்காய்-ரூ.24, பூசணி-ரூ.25, கொத்தவரங்காய்-ரூ.35, குடைமிளகாய்-ரூ.90, முருங்கைகாய்-ரூ.45, கொத்தமல்லி-ரூ.40, சேனைகிழங்கு-ரூ.50, கருணைகிழங்கு-ரூ.95, சீனிகிழங்கு-ரூ.40, மரவள்ளிகிழங்கு-ரூ.30, பெரிய வெங்காய்-ரூ.28, புதினா-ரூ.36, கறிவேப்பிலை-ரூ.30, பாகற்காய்-ரூ.50, மலைப்பூண்டு- ரூ.200, கேரட்-ரூ.50, பச்சை பட்டாணி-ரூ.180, மொச்சை-ரூ.50, பீட்ரூட்-ரூ.42, இஞ்சி-ரூ.160. இதே போல் பலசரக்கு பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
உழவர் சந்தையில் மேற்கண்ட விலைகளில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது. வெளி மார்க்கெட்டுகளில் இதைவிட விலை அதிகமாக உள்ளது.
- பெட்டிக்கடையில் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் சிந்துபட்டியை அடுத்துள்ள கட்டத்தேவன்பட்டியை சேர்ந்தவர் ராஜாங்கம் (வயது 46). இவர் அதேபகுதியில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு பெட்டிக்கடையை உடைத்த மர்ம நபர்கள் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடிக்கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் சிந்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பெட்டிக்கடையில் கைவரிசை காட்டியது அதே பகுதியை சேர்ந்த அஜீத் (25), விக்னேஷ் (23),தினேஷ் (21) என தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- கடந்த 16-ந்தேதி வீட்டுக்கு வந்த சரவணபாரதி மதியம் வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றதாக தெரிகிறது.
- சரவணபாரதி எப்படி இறந்தார்? முன்விரோதம் காரணமாக யாராவது அவரை கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாடிப்பட்டி:
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நீரேத்தான் புது கண்மாய் பகுதியில் உள்ள கிணற்றில் 21 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் முகிலனுக்கு தகவல் கொடுத்தனர்.
அவர் கொடுத்த புகாரின்பேரில் வாடிப்பட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கிணற்றில் பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் பிணமாக கிடந்தவர் வாடிப்பட்டி அருகே உள்ள தாதம்பட்டி திருமால்தேவர் தெருவை சேர்ந்த பா.ஜனதா மாவட்ட செயற்குழு உறுப்பினர் சசிகுமாரின் மகன் சரவண பாரதி (வயது 21) என தெரியவந்தது.
இவர் சோழவந்தான் பகுதியில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். விடுதியில் தங்கி இருந்த சரவணபாரதி ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டுக்கு வருவது வழக்கம்.
அதன்படி கடந்த 16-ந்தேதி வீட்டுக்கு வந்த சரவணபாரதி மதியம் வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றதாக தெரிகிறது. அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. பெற்றோரும் கல்லூரி விடுதிக்கு சென்றிருக்கலாம் என தேடாமல் இருந்தனர். இந்த நிலையில் விடுதிக்கும் சரவணபாரதி வராதது தெரியவந்த நிலையில் அவர் கிணற்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
சரவணபாரதி எப்படி இறந்தார்? முன்விரோதம் காரணமாக யாராவது அவரை கொலை செய்து கிணற்றில் வீசினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சரவணபாரதி சாவில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது.






