search icon
என் மலர்tooltip icon

  உள்ளூர் செய்திகள்

  தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி விரைவில் கலைக்கப்படும்-செல்லூர் ராஜூ
  X

  விலைவாசி உயர்வை கண்டித்து மதுரையில் அ.தி.மு.க. சார்பில் இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கி கண்டன கோஷங்களை எழுப்பினர். அருகில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, ராஜ் சத்யன், எம்.எஸ்.பாண்டியன், திரவியம், பரவை ராஜா, பைக்காரா கருப்புசாமி, டாக்டர் சரவணன், வெற்றிவேல், மாணிக்கம், ராஜாங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி விரைவில் கலைக்கப்படும்-செல்லூர் ராஜூ

  • தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி விரைவில் கலைக்கப்படும் என்று செல்லூர் ராஜூ கூறினார்.
  • இந்த எழுச்சி மாநாடு வருகிற நாடாளு–மன்றத் தேர்தலுக்கு அச்சா–ரமாக அமையும்.

  மதுரை

  தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி விரைவில் கலைக்கப் படும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

  தமிழகம் முழுவதும் விலை–வாசி உயர்வை கண் டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மதுரை–யில் ஆரப்பாளையம் பெத் தானியாபுரம் பகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாநகர், புறநகர் கிழக்கு, புறநகர் மேற்கு மாவட்டங் களைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர் திரளாக பங்கேற்ற கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

  இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர்ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன கோஷங் களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து அங்கு கூடியி–ருந்த அ.தி.மு.க. நிர்வாகி–களும், தொண்டர்களும் கோஷங்களை எழுப்பினர்.

  இதில் பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, அண் ணாதுரை, திரவியம், எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் சரவணன், எஸ்.எஸ்.சரவ–ணன், மாணிக்கம், ராஜாங் கம், வெற்றிவேல்,நிலையூர் முருகன் கவுன்சிலர்கள் சோலைராஜா, சண்முக–வள்ளி, மாயத்தேவன், ரூபிணி குமார், பைக்காரா கருப்புசாமி, பரவைராஜா, முத்துவேல், கலைச் செல் வம், கே.வி.கே.கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல் லூர் ராஜூ பேசியதா–வது:-

  தி.மு.க. ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனால் இதுவரை மக்களுக்கு எந்த நன்மை–யான திட்டங்களையும் செய்யவில்லை. ஆனால் மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றி வருகிறார்கள். இத–னால் இந்த ஆட்சி எப்போது முடியும் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கி–றார்கள்.

  தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கொண்டுவர மக்கள் ஆர்வத்துடன் இருக்கிறார் கள்.புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவி அம்மாவுக்கு பிறகு மூன் றாவது சக்தியாக எடப்பாடி பழனிசாமி உருவெடுத்துள் ளார். அவரால் தி.மு.க. என்ற இயக்கத்தை அழிக்க முடியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு பேசும் போது, அமைச்சர்களோ, தி.மு.க.–வினரோ ஏதாவது பிரச் சினையை ஏற்படுத்தி விடு–வார்களோ என்று நினைத் துக்கொண்டு இருக்கிறேன், இதனால் தூக்கம் என்று தவிக்கிறேன் என்றார்.

  ஆனால் இப்போது மத்திய அரசின் அமலாக துறையின் சோதனை அவ–ருக்கு மிகப்பெரிய கலக் கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும் வெளியே வடி–வேல் பாணியில் பேசி சமாளிக்கிறார். ஆனால் மு.க.ஸ்டாலினுக்கு "பில்டிங் ஸ்ட்ராங், பேஸ் மட்டம் வீக்" என்ற வகையில் தி.மு.க. உள்ளது.

  எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். தி.மு.க. ஆட்சி விரைவில் கலைக்கப்படும். கருணாநிதி வழியில் மு.க.ஸ்டாலினின் இந்த அரசை விரைவில் கலைக்க நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. தமிழக போலீஸ் மீது மத்திய அமலாக்க துறைக்கு நம் பிக்கை இல்லை. அந்த அள–வுக்கு தமிழக காவல்துறை சீரழிந்து விட்டது. அதனால் தான் மத்திய போலீஸ் பாதுகாப்புடன் அமலாக் கத்துறை தி.மு.க. அமைச் சர்கள் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறது.

  இந்த சோதனை இன்னும் தொடரும். 2016-ம் ஆண் டுக்குள் இன்னும் பல்வேறு சோதனைகள் நடத்தப்படும். அதைத் தொடர்ந்து கருணா–நிதி வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தி.மு.க. ஆட்சியும் கலைக்கப்படும். மதுரையில் அடுத்த மாதம் 20-ந்தேதி மாபெரும் எழுச்சி மாநாட்டை எடப்பா–டியார் தலைமையில் கூட்டி உள்ளோம்.

  இந்த மாநாட்டில் மது–ரையில் இருந்து 4 லட்சம் தொண்டர்கள் குடும்பம், குடும்பமாக பங்கேற்பார்கள். அ.தி.மு.க.வின் இந்த எழுச்சி மாநாடு வருகிற நாடாளு–மன்றத் தேர்தலுக்கு அச்சா–ரமாக அமையும்.

  இவ்வாறு அவர் பேசி–னார்.

  Next Story
  ×