என் மலர்tooltip icon

    மதுரை

    • அரசு பெண்கள் பள்ளி முன்பு ஒலிபெருக்கி மூலம் வியாபாரம் செய்தனர்.
    • மாணவிகள் கல்வி பாதிப்பதாக புகார் எழுந்தது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் நகரில் தாலுகா அலுவலகம் முன்பு அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளி அமைந்துள்ளது.இங்கு 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வி யும் பயிற்றுவிக்கப்படுகிறது.

    மேலூர் மற்றும் சுற்றி உள்ள கிராம பகுதிகளில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர். இந்த பள்ளி மதுரை மெயின் ரோட்டில் அமைந்துள்ளது.

    இங்கு சாலையின் இரு புறமும் காய் மற்றும் பழ வியாபாரங்கள் தள்ளு வண்டி, வேன்களில் வைத்து ஏராளமான வண்டிகளில் வியாபாரம் செய்து வருகின்றனர். சாலையோரம் வைத்து வியாபாரம் செய்ப வர்கள் ஒலி பெருக்கி மூலம் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு கூவி கூவி அதிக சத்தத்துடன் பொருட்களை விற்பதால் அருகில் உள்ள பள்ளியில் பாடம் நடத்த முடியவில்லை.

    மேலும் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை மாணவிகளால் கவனிக்க முடியாத ஒரு அவல நிலை யும் அவர்கள் கவனத்தை திசை திருப்புவதாகவும் உள்ளது.

    இதுகுறித்து மேலூர் புது பர்மா காலனி சேர்ந்த சமூக ஆர்வலர் துரைசிங்கம் கூறுகையில், பள்ளி மாண விகளுக்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் சாலையோரம் வியாபாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மேலூர் தாசில்தாரிடம் மனு கொடுத்துள்ளேன். எனவே போலீசார் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பள்ளி மாணவி, பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

    • தி.மு.க. மாணவரணி அமைப்பாளர்கள் மாவட்ட செயலாளர் மணிமாறனிடம் வாழ்த்து பெற்றனர்.
    • துணை அமைப்பாளர்களாக மூவேந்திரன், மருதுபாண்டியன், ஜெய்லானி, கண்ணன், செந்தமிழ்அரசி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    திருமங்கலம்

    தி.மு.க. மதுரை தெற்கு மாவட்டத்திற்கு புதிய மாணவரணி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைப்பாளராக பாண்டிமுருகன் நியமிக்கப்பட்டுள்ளார். துணை அமைப்பாளர்களாக மூவேந்திரன், மருதுபாண்டியன், ஜெய்லானி, கண்ணன், செந்தமிழ்அரசி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாவட்ட செயலாளர் மாணவரணி நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் முத்துராமன், மகிழன், மாநில விவசாய அணி துணைசெயலாளர் கொடிசந்திரசேகர், பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், ஒன்றிய செயலாளா்கள் ஆலம்பட்டி சண்முகம், மதன்குமார், தனசேகரன், திருமங்கலம் நகர செயலாளர் ஸ்ரீதர், நகராட்சிதலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன், நகர துணைசெயலாளர் செல்வம், இளைஞரணி அமைப்பாளர் விமல், துணை அமைப்பாளர்கள் சுரேஷ், ஜெகதீஷ், பேரூர்செயலாளர் வருசை முகமது, பிரதிநிதிகள் ரஞ்சித்குமார், தொ.மு.ச. முத்துராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் அருகே நடந்த விபத்தில் டிரைவர், வாலிபர் பலியானார்கள்.
    • கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள காளையார் குறிச்சி மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைச் சாமி (வயது63), டிரைவர். இவர் சரக்கு வேனில் நிலக்கோட்டையில் லோடு இறக்கிவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். திருமங்கலம் மேலக்கோட்டை அருகே வந்தபோது வேனை நான்கு வழிச்சாலையின் சாலையில் ஓரமாக நிறுத்திவிட்டு எதிர்புறம் இருந்த ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். சாப்பிட்டு முடித்து விட்டு நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றார். அப்போது திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையத்திற்கு மோட்டார் சைக்கிளில் ஒரு வடமாநில தொழிலாளி வந்து கொண்டிருந்தா. எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் வெள்ளைச்சாமி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வெள்ளைச்சாமி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் வடமாநில தொழி லாளியும் காயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். தகவலறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வெள்ளைச்சாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சுவாமி மல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மலைச்சாமி(45), இவர் சிவரக்கோட்டை நான்கு வழிச்சாலை பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தார். பின்னர் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது விருதுநகரில் இருந்து திருமங்கலம் நோக்கி கொண்டிருந்த கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    ஆனால் செல்லும் வழியிலேயே மலைச்சாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஓட்டப்பந்தய போட்டியில் சோழவந்தான் வாலிபர் சாதனை படைத்துள்ளார்.
    • இவருக்கு சொந்த கிராமத்தில் கிராம மக்கள் மற்றும் உறவினர் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்குட்பட்ட கச்சிராயிருப்பு கிராமத்தை சேர்ந்த கண்ணன்-கவிதா தம்பதி மகன் விக்னேஷ் (வயது22). இவர் நேபாளத்தில் நடந்த விளையாட்டுப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கமும் பரிசு பெற்றார். இவருக்கு சொந்த கிராமத்தில் கிராமமக்கள் மற்றும் உறவினர் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து விக்னேஷ் கூறுகையில், நான் விக்கிரமங்கலம் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்து உசிலம்பட்டி தேவர் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்துள்ளேன்.ஆரம்பத்தில் இருந்து விளையாட்டில் ஆர்வம் இருந்ததால் எனக்கு விளையாட்டில் உயர்ந்த அளவில் பரிசு பெற வேண்டும் என்று எண்ணம் இருந்தது. பயிற்சி எடுக்க வசதி இல்லை ஆகையால் காலையில் மாலையிலும் கிராமத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஓடி பயிற்சி பெற்றேன். தஞ்சாவூர் மாவட்டத்திலும், காஷ்மீரிலும் நடந்த போட்டியில் பரிசு பெற்றேன்.என் குடும்பம் மிகவும் கஷ்டப்படுவதால் அரசு எனக்கு உதவி செய்தால் இன்னும் திறமையாக விளையாடி அரசுக்கும் நாட்டிற்கும் நல்ல பெயர் எடுத்துக் கொடுப்பேன் என்று தெரிவித்தார்.

    • வழக்கினை விசாரித்த ஐகோர்ட்டு, வனப்பகுதி நிலத்தினை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
    • போலீசார் மூலமாக என் மீதும், எனது குடும்பத்தினர் மீதும் 11 பொய் வழக்குகள் பதிவு செய்தனர்.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானரை சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனது தந்தை சுதந்திரப் போராட்ட வீரர். நானும் கொடைக்கானல் பகுதிகளில் உள்ள மக்களுக்கு தொடர்ந்து சமூக சேவையாற்றி வருகிறேன்.

    இந்த நிலையில் கொடைக்கானல் பூதலூர் பகுதியில் இருக்கக்கூடிய 1 ஏக்கர் 85 சென்ட் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை அரசு அதிகாரிகள் துணையுடன் சிலர் போலியான ஆவணங்கள் தயாரித்து அபகரிக்க முயற்சி செய்தனர். இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கினை விசாரித்த ஐகோர்ட்டு, வனப்பகுதி நிலத்தினை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

    இந்த வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி உட்பட பல அதிகாரிகள் தொடர்பில் இருந்தனர். உயர் அதிகாரிகள் செய்த குற்றங்களை நான் சுட்டிக்காட்டியதால் அதிகாரிகள் அவர்களது அதிகாரத்தை பயன்படுத்தி போலீசார் மூலமாக என் மீதும், எனது குடும்பத்தினர் மீதும் 11 பொய் வழக்குகள் பதிவு செய்தனர். அது மட்டுமின்றி வழக்கில் தொடர்புடைய ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி தொடர்ச்சியாக என்னை மிரட்டியும் வந்தார். கொலை மிரட்டல் குறித்த குறுந்தகவல்களையும் எனக்கு அனுப்பி வருகிறார்.

    இது தொடர்பாக திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசாரிடம் உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளேன்.

    எனவே நான் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு நீதிபதி நாகார்ஜுன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் புகாரின் அடிப்படையில் விசாரணை நடக்கிறது என தெரிவித்தார்.

    இதை பதிவு செய்த நீதிபதி, மனுதாரர் தாண்டிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் புதிய புகார் மனுவை அளிக்க வேண்டும். அந்த மனு மீது உரிய விசாரணை நடத்தி, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    • மணிப்பூர் கலவரத்தை கண்டித்து மதுரை யானை மலை மீது ஏறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மலையில் இருந்து கீழே இறங்க செய்தனர்.

    மேலூர்

    மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறை–யாக வெடித்து பெரும் கலவரமாக மாறியுள்ளது. இதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே நேற்று முன்தினம் மணிப்பூரில் இரண்டு இளம்பெண்களை நிர்வாணமாகி ஊர்வலமாக இழுத்துச் சென்ற சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த தவறிய மணிப்பூர் மாநில அரசை கண்டித்தும், மணிப்பூரில் கலவரத்தை அடக்கி அமைதியை நிலை–நாட்டவும் வலியுறுத்தி மதுரை மேலூர் ஒத்தக்கடை அருகே போராட்டம் நடை–பெற்றது.

    எவர்சில்வர் தொழிலா–ளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் தொழிலாளர்கள் நரசிங்கம் பட்டி யானை மலை மீது ஏறி மணிப்பூர் கலவரத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.

    இந்த போராட்டத்தில் எவர்சில்வர் தொழிலாளர் கள் சங்க தலைவர் சரவ–ணன், செயலாளர் மலைக் கள்ளன், நிர்வாகிகள் பெரு–மாள், அழகர், கண்ணன், பாண்டியராஜன், கமல் உள் பட ஏராளமானோர் சுமார் 1 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட–னர்.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும் ஒத்தக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் சூர்யா தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மலையில் இருந்து கீழே இறங்க செய்தனர்.

    • மதுரையில் ஆட்டோவில் ஏறிய பயணியை தாக்கி 4 பவுன் நகை பறிக்கப்பட்டது.
    • இதுகுறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.

    மதுரை

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஊத்துப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்(வயது47). இவர் வேலை நிமித்தமாக மதுரை வந்திருந்தார்.

    சம்பவத்தன்று வெளியே செல்வதற்காக ஆட்டோவில் பயணம் செய்தார். அவனியாபுரம் பகுதியில் சென்றபோது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் திடீரென ஆட்டோவை நிறுத்திய டிரைவர் கத்தியை காட்டி மிரட்டி நவநீத கிருஷ்ணனை தாக்கி 4 பவுன் செயின், பாஸ்போர்ட் வைத்திருந்த பையையும் பறித்துச் சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.

    செல்போன் பறிப்பு

    நரிமேடு பஜனைமடம் தெருவை சேர்ந்தவர் கிருபாகரன்(21). இவர் திருப்பாலை பகுதியில் நடந்து சென்றபோது 3 பேர் தாக்கி செல்போனை பறித்துச் சென்றனர். திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், செல்போனை பறித்தது அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், கார்த்திக்ராஜா, வசந்த் என தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

    • ரூ.15 லட்சம் மதிப்பில் சுத்திகரிப்பு குடிநீர் அறையை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் கட்டப்பட்டது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அறையை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. இன்று திறந்து வைத்தார்.

    முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தி உள்ளது. தற்போது கொண்டு வரப்படும் திட்டங்களுக்கு தி.மு.க. அரசு கருணாநிதி பெயரை சூட்டுகிறார்கள். தமிழகத்தில் உள்ள பல்வேறு நூலகங்க ளின் சிறப்பு நிதியை அந்தந்த நூலகங்களுக்கு ஒதுக்காமல் மதுரையில் உள்ள கலைஞர் நூல கத்திற்கு பயன்படுத்தி யுள்ளனர். இதனால் மற்ற நூலகங்கள் பாதிக்கப்படும்.

    மதுரையில் நிரந்தரமாக கண்காட்சி கூடம் அமைக்க வேண்டும். திருப்பரங்குன்றம் பஸ்நிலையம் அருகே உள்ள 5 மதுக்கடை களை அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் பகுதி துணை செயலாளர் செல்வகுமார், வட்ட செயலாளர் தவிடன், பாலா, நாகரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் குழப்பத்தின் மொத்த வடிவம் என்று முன்னாள் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
    • தி.மு.க. கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் அரசு கர்நாடகாவில் 2000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்குகிறது.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு ஒரு கோடி பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமை திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி முதல் வழங்கப் படும் என்று அறிவித்து 7,000 கோடி அளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

    ஆனால் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அனை வருக்கும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை வழங்குவோம் என வாக்கு றுதியை அளித்தனர்.தமிழகத்தில் 2 கோடியே 24 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளது. இந்த குடும்ப அட்டைகளில் உள்ள பெண்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.

    ஆனால் ஆட்சி பொறுப் பேற்றவுடன் தகுதி உள்ளவர்களுக்கு மட்டும்தான் வழங்கப்படும் என்ற குழப்பத்தை முதலில் ஏற்படுத்தினர். தற்போது மேலும் பல நிபந்தங்களை விதித்துள்ள னர்.

    அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் விண் ணப்பத்தை கொடுத்து விட்டு, தற்போது தகுதி உள்ளவர்கள் என கூறுவது ஒரு முரண்பாடு ஏற்பட்டுள் ளது. ஒரு கோடி பேருக்கு வழங்குவோம் என்று அறி வித்துவிட்டு, 2 கோடியே 24 லட்சம் குடும்ப அட்டை களுக்கு விண்ணப்பம் வழங்கி, தற்போது பல நிபந்தனைகளை விதித்து இருப்பது குழப்பத்தின் மொத்த வடிவமாக உள்ளது.

    முதலில் அனைவருக்கும் வழங்குவோம் என முதலில் அறிவித்துவிட்டு, அதனை தொடர்ந்து தகுதி உள்ள வர்களுக்கு வழங்குவோம் என்று அறிவித்துவிட்டு, தற்போது பல நிபந்தங்களை விதிப்பது குழப்பத்தின் மொத்த வடிவமாக உள்ளது. திமுக கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ் அரசு கர்நாடகாவில் 2000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்குகிறது. அதுபோல மகளிர் உரிமைத் திட்டத்தில் அனைவருக்கும் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மதுரை மாவட்டத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாத கால இலவச திறன் பயிற்சி வழங்கப்படுகிறது.
    • இந்த தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) க.மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி–ருப்பதாவது:-

    மதுரை தமிழ்நாடு கட்டு–மான கழகமானது தொழிலா–ளர் உதவி ஆணையர் அலு–வலகத்தின் மூலம் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலா–ளர்களுக்கு மூன்று மாத கால திறன் பயிற்சி மற்றும் ஒருவார கால திறன் மேம் பாட்டு பயிற்சிகள் வழங்கப் பட உள்ளது.

    3 மாத கால திறன் பயிற் சிக்கு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரி–யத்தில் உறுப்பினராக பதிவு செய்திருத்தல் வேண் டும். கல்வித்தகுதி 5-ம் வகுப்ப முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள் மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்கள் வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை இருத்தல் வேண்டும்.

    இந்த பயிற்சி 3 மாதம் நடைபெற உள்ளது. முதல் மாதம் தையூரில் அமைய–வுள்ள கட்டுமான கழக பயிற்சி நிறுவனத்திலும், 2 மாத காலம் நீவலூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள எல் அண்டு டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்திலும் நடைபெற உள்ளது. கொத்தனார், பற்ற வைப்பர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மர–வேலை, கம்பி வளைப்பவர், தச்சுவேலை ஆகிய தொழில் புரிபவர்களுக்கு கட்டணம் ஏதுமில்லை.

    பயிற்சி கட்டணம், உணவு மற்றும் தங்குமிடம் இலவச–மாக வழங்கப்படும். பயிற்சி பெறுபவர்கள் அனைவருக் கும் எல் அண்டு டி கட்டு–மான திறன் பயிற்சி நிலை–யம் தனியார் நிறுவனத்தால் 100 சதவீத வேலை–வாய்ப்பு வழங்கப்படும்.

    ஒருவார கால திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தமிழ்நாடு கட்டுமான தொழி–லாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து மூன்று ஆண்டு உறுப்பி–னராக இருத்தல் வேண்டும். 18 வயதிற்கு மேல் இருப்ப–தோடு, தொழிலாளர்களுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந் திருக்க வேண்டும். இந்த பயிற்சி தையூரில் அமைய–வுள்ள கட்டுமான கழகத்தில் 7 நாட்கள் நடைபெறும்.

    கொத்தனார், பற்ற வைப் பர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மர வேலை, கம்பி வளைப்பவர், தச்சு–வேலை பயிற்சிகள் வழங்கப் படும். பயிற்சியாளர்களுக்கு தினந்தோறும் வேலையிழப்பு ஏற்படுவதை ஈடு செய்ய தினந்தோறும் ரூ.800 வழங் கப்படும். இந்த தொகையில் உணவிற்கு மட்டும் பிடித்தம் செய்யப்படும்.

    தமிழ்நாடு கட்டுமான கழகம் எல் அண்டு டி கட்டுமான திறன் பயிற்சி நிலையம் மற்றும் தமிழ்நாடு கட்டுமான திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து மத்திய அரசின் கீழ் உள்ள தேசிய திறன் மேம்பாட்டு கழகத் தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இந்த 3 மாத கால திறன் பயிற்சி மற்றும் ஒருவார கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் 15.8.2023 முதல் தொடங்கப்பட உள்ளது.

    இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்க மதுரை மாவட்டம் எல்லீஸ் நகர் வீட்டு வசதி வாரிய வளாகம், தொழிலாளர் உதவி ஆணை–யர் அலுவலகத்தை அணுகு–மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • மதுரை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
    • இந்த தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

    மதுரை

    இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையில் 1.1.2024-ஐ தகுதியேற்பு நாளாக கொண்டு வருகிற 5.1.2024 அன்று வாக்காளர் பட்டியல் வெளியிட பல்வேறு முன்திருத்த நடவடிக்கைகளுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி 1.1.2024-ஐ தகுதியேற்பு நாளாக கொண்டு மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம்கள் நடத்தி வருகிற 5.1.2024 வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

    இதை முன்னிட்டு முன் திருத்த நடவடிக்கையாக குடும்பத்தில் உள்ள அனைத்து வாக்காளர் விபரங்களையும் சரிபார்த்து இன்று முதல் (21-ந்தேதி) முதல் ஆகஸ்டு 21-ந்தேதி வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான செயலியில் பதிவேற்றம் செய்து தொடர் நடவடிக்கை யாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் பெயர் நீக்கம் செய்தல் மற்றும் வாக்குச் சாவடிகள் பிரித்தல், இடம் மாற்றம், கட்டிட மாற்றம் மற்றும் பெயர் மாற்றம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    முன் திருத்த நடவடிக்கையின் முதற்கட்ட நடவடிக்கையாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக குடும்பத்தில் உள்ள வாக்காளர் விபரங்களை சரிபார்த்திட வருகைதர உள்ளனர்.

    எனவே மதுரை மாவட் டத்தில் இத்திட்டத்தினை சிறப்பாகவும், விரைவாகவும் மேலும் 100% தூய்மை யாகவும், துரிதமாகவும் இப்பணியினை முடித்திடும் பொருட்டு பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு கணக் கெடுப்பு பணிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவையான விபரங்களை அளித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

    • ரெப்கோ வங்கியில் சிறப்பு டெபாசிட் திட்ட வாடிக்கையாளர் முகாம் ஆகஸ்டு 31 வரை நடக்கிறது.
    • மேலும் தங்க நகை கடன் கிராம் ஒன்றுக்கு ரூ.4,600 வரை வழங்கப்படுகிறது.

    மதுரை

    ரெப்கோ வங்கியில் சிறப்பு டெபாசிட் திட்ட வாடிக்கையாளர் முகாம் இன்று தொடங்கியது. ரெப்கோ வங்கியின் மதுரை கிளையில் இணை பொது மேலாளர் சண்முகம் முன்னிலையில் வாடிக்கை யாளர்கள் மரிய சூசை, பாஸ்கரன் மற்றும் வங்கி எழுத்தர் ராஜேஸ்வரி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி டெபாசிட் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    இதில் மூத்த குடிமக்களுக்கு 8.25 சதவீதமும், பொதுமக்களுக்கு 7.75 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது. மேலும் தங்க நகை கடன் கிராம் ஒன்றுக்கு ரூ.4,600 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்து இணை பொது மேலாளர் சண்முகம் கூறுகையில், ரெப்கோ வங்கி மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த வங்கியின் மேலாண்மை இயக்குனர் இசபெல்லா தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வங்கியின் அனைத்து கிளைகளிலும் சிறப்பு டெபாசிட் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த சிறப்பு டெபாசிட் திட்டத்திற்கான வாடிக்கையாளர் முகாம் இன்று முதல் ஆக.31-ந் தேதி வரை நடைபெறுகிறது. மதுரையில் பீ.பீ.குளம், வில்லாபுரம், மேலூர் கிளைகளிலும் இந்த முகாம் நடைபெறுகிறது.

    எனவே வாடிக்கை யாளர்கள் மற்றும் பொது மக்கள் இந்தத் திட்டத்தை பயன்படுத்தி பயன்பெறலாம் என்றார். முகாம் தொடக்க விழாவை உதவி மேலாளர் நாசீன் தொகுத்து வழங்கினார். முடிவில் உதவி மேலாளர் ஜோயல் நன்றி கூறினார்.

    ×