என் மலர்tooltip icon

    மதுரை

    • மதுரை அருகே 16 வயது சிறுமி கர்ப்பமானார்.
    • அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்ததனர்.

    மதுரை

    மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதியின் மகள் 16 வயது சிறுமி. இவர் அழகு கலை பயிற்சி பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரை சென்றவர் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்க வில்லை. அப்போது சிறுமியின் பெற்றோரை செல்போனில் அழைத்த மர்ம நபர் சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரியில் சிறுமி வயிற்று வலி காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

    பெற்றோர்கள் அங்கு சென்று மருத்துவர்களிடம் விசாரித்தபோது, சிறுமி கர்ப்பமாக இருந்ததும், உடல் நலக்குறைவு ஏற்பட்டு கரு சிதைவு ஏற்பட்டு விட்ட தாகவும் தெரிவித்தனர். மேலும் அந்த சிறுமியை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்ததனர்.

    இதுகுறித்து சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது அவர் மன்னாடி மங்கலத்தை சேர்ந்த ஒரு வரை காதலித்து வந்தததாக வும், சோழவந்தான் மாரி யம்மன் கோவில் முன்பு காரில் வைத்து தாலி கட்டிய தாகவும், அதன் பின்னர் இருவரும் நெருங்கி பழகியதால் தான் கர்ப்பம் அடைந்ததாகவும் கூறி உள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சமய நல்லூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். குழந்தை திருமணம் மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து மன்னாடி மங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்தி ரன் மகன் ஆனந்தகுமார் என்பவரை தேடி வருகின்ற னர்.

    • எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடந்தது.
    • ஓய்வு பெற்ற மில் மேலாளர் பாண்டியராஜன் தொடங்கி வைத்து பேசினார்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விபட்டி எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம் சார்பில் மாணவ- மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மன்ற தலைவர் ஜி.அய்யல்ராஜ் தலைமை வகித்தார். மன்ற நிர்வாகிகள் சக்திவேல், வேட்டையார், வள்ளி யப்பன், கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்ற பொரு ளாளர் அண்ணாமலை வரவேற்புரை ஆற்றினார்.

    நிகழ்ச்சியை ஓய்வு பெற்ற மில் மேலாளர் பாண்டியராஜன் தொடங்கி வைத்து பேசினார். பாண்டியன் நகர் குடியிருப்போர் நல சங்க தலைவர், டாக்டர் வ.சண்முகசுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 800-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கி பேசினார்.

    இதில் மாநகராட்சி கவுன்சிலர்கள் இந்திரா காந்தி, விஜயா, தென் மண்டல ரெயில்வே ஆலோசனைக்குழு உறுப்பி னர் சிவசுந்தரம், மன்னர் கல்லூரி ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ரெங்கராஜ், ஹார்விபட்டி அரவிந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முடிவில் மன்ற செயற்குழு உறுப்பினர் கணேசன் நன்றி கூறினார்.

    • மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிறுநீரக கல் சிகிச்சைக்கு புதிய கருவி வேண்டும் என அமைச்சரிடம் பூமிநாதன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
    • தென்மாவட்ட மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    மதுரை

    தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று மதுரை வந்தார். அவரை மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன் சந்தித்து பேசினார்.

    அப்போது மதுரை அரசு இராஜாஜி மருத்துவமணை தங்கள் நிர்வாகத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும், இச்சிறப்பு வாய்ந்த மருத்துவமனையில் கடந்த ஒருடத்திற்கு மேலாக சிறுநீரக கல் அகற்றும் கருவி பழுதடைந்து உள்ளதால் தென்மாவட்ட மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    ஆகையால் சிறுநீரக கல் சிகிச்சைப்பிரிவுக்கு புதிய கருவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார்.

    இதனையடுத்து இது தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மா.சுப்பி ரமணியன் உறுதியளித்தார்.

    • பள்ளி மராமத்து பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.
    • ஊராட்சி செயலர் வடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள கொட்டாம்பட்டி பூதமங்கலம் கிராமத்தில் ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கட்டிட மராமத்து பணிகள், புதிய சமையலறை கூடம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதனை சென்னை ஊரக வளர்ச்சி துணை ஆணையர் அருண் மணி ஆய்வு செய்தார். அப்போது மதுரை கூடுதல் கலெக்டர் சரவணன், மதுரை ஊராட்சி உதவி இயக்குனர் அரவிந்த், கொட்டாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன், பூதமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி சின்ன கருப்பன், ஊராட்சி செயலர் வடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாலமேட்டில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடந்தது.
    • முதல் 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசு தொகை, கோப்பைகள் வழங்கப்பட்டன.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேட்டில் பெருந்தலைவர் காமராஜர் 121-வது பிறந்த நாளையொட்டி காமராஜர் கைப்பந்து குழு சார்பில் ஆண்கள், பெண்கள் மற்றும் மாணவர்களுக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடந்தது. முன்னாள் பேரூராட்சி சேர்மன் கஜேந்திரன் தலைமை தாங்கினார். நாம் தமிழர் கட்சி நகர செயலாளர் சந்துரு, சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கார்த்திக், நாடார் உறவின்முறை சங்க தலைவர் நாகராஜன், செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுரேந்திரன் வரவேற்றார். பாலமேடு பேரூராட்சி சேர்மன் சுமதி பாண்டியராஜன் போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் திண்டுக்கல், சேலம், கரூர், ஈரோடு, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. 2 நாட்கள் நடந்த போட்டியில் ஆண்கள், பெண்கள், மாணவர்கள் என தனித்தனியே முதல் 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசு தொகை, கோப்பைகள் வழங்கப்பட்டன. 

    • கோவில்களில் ஆடிப்பூர விழா நடந்தது.
    • பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்ட சோழவந்தான் பகுதியில் உள்ள கோவில்களில் ஆடிப்பூர விழா நடந்தது. ஜெனகை மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 21 வாசனை பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

    வளையல், ஜாக்கெட் துணி மற்றும் சீர்வரிசை வைத்து அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் காட்சியளித்தார். பின்னர் பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கோவில் சார்பில் வளையல், ஜாக்கெட்துணி மற்றும் பொங்கல் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப் பட்டது. இதற்கான ஏற்பாடுகளை செயல்அலுவலர் இளமதி, அர்ச்சகர் சண்முகவேல் பூபதி, கவிதா, வசந்த் செய்திருந்தனர்.

    தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்தார். இதைத்தொடர்ந்து அம்மன் சன்னதியில் ஆடிப்பூரம் படி ஏற்றி இறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இரவு அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி 4 வீதிகளில் உலா வந்தார். இதைத்தொடர்ந்து பூஜைகள் நடந்தது. செயல் அலுவலர் பாலமுருகன், மகளிர்குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    உச்சி மகாகாளியம்மன் கோவிலில் அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி யளித்தார். சோழ வந்தான் திரவுபதி அம்மன்கோவில், காடுபட்டி திரவுபதி அம்மன்கோவில் ஆகிய கோவில்களிலும் ஆடிபூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு வளையல் வழங்கப்பட்டது.

    சோழவந்தான் ஜெனக நாராயணபெருமாள் கோவிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.இதைத்தொடர்ந்து ஆண்டாள் சிறப்பு அலங்கா ரத்துடன் கேடயத்தில் வீதி உலா வந்தார். பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார்.

    • முருகன் கோவிலில் வெள்ளி வேல் திருட்டுபோனது.
    • கிராம மக்களிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர் கோவில் சாலையில் உள்ள கிடாரிப்பட்டியில் வெள்ளிமலையாண்டி முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பழமை வாய்ந்த 5 அடி உயர வெள்ளி வேல் பிரதிஷ்டை செய்து கிராம மக்கள் பாரம்பரியமாக வழிபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக கோவிலில் கட்டிட பராம ரிப்பு பணிகள் நடந்து வந்தன. இதன் காரணமாக வெள்ளிவேல் அங்குள்ள மண்டபத்தில் தகரத்தினால் மூடப்பட்ட அறையில் பாதுகாப்பாக வைக்கப் பட்டு இருந்தது. இந்த நிலையில் சம்பவத் தன்று இரவு கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பழமை வாய்ந்த வெள்ளி வேலை திருடிக் கொண்டு தப்பினர். இதனால் கோவில் நிர்வாகி கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து மேலவளவு போலீசில் புகார் செய்யப் பட்டது. சம்பவ இடம் வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளையர்களின் கைரேகைகளை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர். வெள்ளி வேல் திருட்டு தொடர்பாக மர்ம நபர்க ளை போலீசார் தேடி வருகின்றனர். வெள்ளி மலையாண்டி முருகன் கோவிலில் பாரம்பரியமிக்க வெள்ளி வேல் திருட்டு போய் இருப்பது கிராம மக்களிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    • கல்லூரி மாணவர் தினேஷ் குமார் இன்று காலை நடந்த மாரத்தான் போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்.
    • மாரத்தான் போட்டியில் பங்கேற்ற மாணவர் மாரடைப்பால் இறந்த சம்பவம் மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை:

    மதுரையில் இன்று குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது. மதுரை மருத்துவக் கல்லூரியில் தொடங்கிய போட்டிைய அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதில் மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த என்ஜினீயரிங் மற்றும் கலைக்கல்லூரிகளை சேர்ந்த 4500 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். திருப்பரங்குன்றத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியை சேர்ந்த 160 மாணவ-மாணவிகளும் இதில் அடங்குவர்.

    அந்த கல்லூரியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னச்சேலம் தெற்கு தெருவை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவரின் மகன் தினேஷ்குமார் என்பவர் 4 ஆண்டு படித்து வந்தார். இவரும் இன்று காலை நடந்த மாரத்தான் போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்.

    போட்டியில் பங்கேற்று விட்டு கல்லூரி விடுதிக்கு வந்த தினேஷ்குமாருக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை உடனடியாக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சுய நினைவு இழந்து காணப்பட்ட தினேஷ்குமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    மாரத்தான் போட்டியில் பங்கேற்ற மாணவர் மாரடைப்பால் இறந்த சம்பவம் மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ரத்த தானம் செய்வதில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதல் இடத்தில் இருந்தது.
    • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசின் நிதி பங்களிப்பு இல்லை.

    மதுரை:

    மதுரை மருத்துவக் கல்லூரியில் உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது. அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். கலெக்டர் சங்கீதா, மருத்துவ கல்லூரி டீன் ரத்தினவேல், எம்.எல். ஏ.க்கள் கோ.தளபதி புதூர் பூமிநாதன் கலந்து கொண்ட னர். நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரத்த தானம் வழங்கினார்.

    தொடர்ந்து மருத்துவக் கல்லூரி மாணவர்களின் சமையல் தேவைக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான பயோ கேஸ் மையத்தை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களி டம் கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ரத்த தானம் செய்வதில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதல் இடத்தில் இருந்தது. தற்போது மேற்குவங்காளம் முதலிடத்திலும், தமிழ்நாடு 2-வது இடத்திலும் இருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் அதிகப்படியான ரத்த வங்கிகளை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். மதுரை அரசு மருத்துவமனை, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைகளில் ரத்தக் கூறுகளை ஆய்வு செய்யும் வகையில் ரூ. 2 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் ரத்த வங்கி அமைக்கப்பட்டிருக்கிறது. விரைவில் தமிழகம் ரத்த தானம் செய்வதில் முதல் இடத்திற்கு வரும்.

    மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை பொருத்தவரை தற்போது சுற்றுச்சுவர் மட்டும் தான் கட்டப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள ஜெய்கா நிறுவனத்தின் துணைத் தலைவரை இதுதொடர்பாக சந்தித்து எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவாக முடிக்க வலியுறுத்தி இருக்கிறோம்.

    மற்ற மாநிலங்களில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசின் நிதி பங்களிப்பு உள்ளது. ஆனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசின் நிதி பங்களிப்பு இல்லை. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான டெண்டர் பணிகள் அடுத்த ஆண்டு முடிவடையும். 2028-ம் ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டும் போது அப்போதைய தமிழகத்தை ஆண்ட அரசு மத்திய அரசின் நிதி பங்களிப்பு வேண்டும் என்று வலியுறுத்தி இருக்க வேண்டும். அதனை செய்யவில்லை.

    தமிழகத்தில் 8713 சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில் பழுதடைந்துள்ள கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுற்றுலா தொழில்முனைவோர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்.
    • www.tntourismawards.com என்ற இணையதளத்தின் வாயிலாக ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    மதுரை

    உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தையொட்டி தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தொழில்முனைவோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது. சுற்றுலா ஆபரேட்டர், உள்நாட்டு சுற்றுலா ஆபரேட்டர், பயண கூட்டாளர், விமான கூட்டாளர், தங்குமிடம், உணவகம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் நட்சத்திர நிகழ்ச்சியாளர், முக்கிய சுற்றுலா ஆபரேட்டர், சாகச சுற்றுலா மற்றும் முகாம் தள ஆபரேட்டர், கூட்டங்கள் ஊக்குவிப்பு மாநாடு மற்றும் கண்காட்சி அமைப்பாளர், சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர், சுற்றுலா வழிகாட்டி, தமிழ்நாடு பற்றிய சிறந்த விளம்பரம், சுற்றுலா ஊக்குவிப்பு விளம்பர பொருள், சுற்றுலா மற்றும் விருந்தோம்பலுக்கு சிறந்த கல்வி நிறுவனம் போன்ற பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

    இந்த விருது பெற மதுரை மாவட்டத்தில் உள்ள தொழில்முனைவோர்கள் www.tntourismawards.com என்ற இணையதளத்தின் வாயிலாக ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு சுற்றுலா அலுவலர், சுற்றுலா அலுவலகம் 1, மேல வெளி வீதி, மதுரை என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

    • பிளாஸ்டிக் கடையில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது.
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே தெற்கு மாசி வீதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பிளாஸ்டிக் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. பின்னர் விமான நிலையத்தில் இருந்து சிறப்பு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப் பட்டு தீ அணைக்கப்பட்டது.

    இந்த தீ விபத்து தொடர்பாக தீயணைப்பு துறையினர் கடை உரிமை யாளரிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு வழங்கி சென்ற னர். பின்னர் அந்த கட்டிடத்தை ஆய்வு செய்த மாநகராட்சி குழுவினர் 3 நாட்களுக்குள் கட்டிடத்தை இடிக்க வேண்டும் என நோட்டீசு வழங்கினர்.

    இந்த நிலையில் இன்று காலை 8 மணி அளவில் அதே கடையில் இருந்து திடீரென குபுகுபுவென கரும்புகை வெளிவந்தது. அங்கிருந்தவர்கள் இதை பார்த்து போலீசாருக்கும், தீயணைப்பு துறையின ருக்கும் தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் வினோத் குமார் தலைமையில் 8 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    மேலும் கடையின் வெளியே "விரைவில் ஆரம்பம்" என போர்டு வைக்கப்பட்டிருந்தது. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து தெற்கு வாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜக்குபாய் கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தினார்.

    தீ விபத்து தொடர்பாக மாநகராட்சி உதவி ஆணை யாளர் ரமேஷ் பாபு கூறுகை யில், கடந்த 5 நாட்களுக்கு முன்பே கட்டிடத்தை இடிக்க முறை யாக நாங்கள் நோட்டீசு கொடுத்துள்ளோம் என்றார்.மின்வாரிய உதவி ஆணை யர், தீப்பிடித்த அன்றே மின்சார சப்ளை துண்டிக்கப் பட்டு விட்டதாக கூறினார்.

    தீயை முழுமையாக அணைத்து விட்டதாக தெரிவித்த நிலையில் இன்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்து உள்ளதாக அருகில் உள்ள கடைக்கா ரர்கள் கூறினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மதுரை அருகே இளம்பெண்கள் மாயமானார்கள்.
    • காடுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிருத்திவிராஜ். இவரது மகள் அச்சின் (வயது 19). இவர் 12-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மாயமான மகள் குறித்து அவரது தாய் ரேவதி உசிலம்பட்டி டவுண் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத் தைச் சேர்ந்தவர் அமிர்தம். இவரது 17 வயது மகள் உடுமலைப்பேட்டையில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார்.கடந்த சில நாட்களாக அந்த பெண்ணுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்ற இளம்பெண் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் காடுபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    ×