சுற்றுலா தொழில்முனைவோர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்

சுற்றுலா தொழில்முனைவோர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம். www.tntourismawards.com என்ற இணையதளத்தின் வாயிலாக ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
சுற்றுலா தொழில்முனைவோர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
Published on: 

மதுரை

உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தையொட்டி தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தொழில்முனைவோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது. சுற்றுலா ஆபரேட்டர், உள்நாட்டு சுற்றுலா ஆபரேட்டர், பயண கூட்டாளர், விமான கூட்டாளர், தங்குமிடம், உணவகம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் நட்சத்திர நிகழ்ச்சியாளர், முக்கிய சுற்றுலா ஆபரேட்டர், சாகச சுற்றுலா மற்றும் முகாம் தள ஆபரேட்டர், கூட்டங்கள் ஊக்குவிப்பு மாநாடு மற்றும் கண்காட்சி அமைப்பாளர், சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர், சுற்றுலா வழிகாட்டி, தமிழ்நாடு பற்றிய சிறந்த விளம்பரம், சுற்றுலா ஊக்குவிப்பு விளம்பர பொருள், சுற்றுலா மற்றும் விருந்தோம்பலுக்கு சிறந்த கல்வி நிறுவனம் போன்ற பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

இந்த விருது பெற மதுரை மாவட்டத்தில் உள்ள தொழில்முனைவோர்கள் www.tntourismawards.com என்ற இணையதளத்தின் வாயிலாக ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு சுற்றுலா அலுவலர், சுற்றுலா அலுவலகம் 1, மேல வெளி வீதி, மதுரை என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com