பாலமேட்டில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி

பாலமேட்டில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடந்தது. முதல் 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசு தொகை, கோப்பைகள் வழங்கப்பட்டன.
பாலமேட்டில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி
Published on

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் பாலமேட்டில் பெருந்தலைவர் காமராஜர் 121-வது பிறந்த நாளையொட்டி காமராஜர் கைப்பந்து குழு சார்பில் ஆண்கள், பெண்கள் மற்றும் மாணவர்களுக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடந்தது. முன்னாள் பேரூராட்சி சேர்மன் கஜேந்திரன் தலைமை தாங்கினார். நாம் தமிழர் கட்சி நகர செயலாளர் சந்துரு, சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் கார்த்திக், நாடார் உறவின்முறை சங்க தலைவர் நாகராஜன், செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுரேந்திரன் வரவேற்றார். பாலமேடு பேரூராட்சி சேர்மன் சுமதி பாண்டியராஜன் போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் திண்டுக்கல், சேலம், கரூர், ஈரோடு, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. 2 நாட்கள் நடந்த போட்டியில் ஆண்கள், பெண்கள், மாணவர்கள் என தனித்தனியே முதல் 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசு தொகை, கோப்பைகள் வழங்கப்பட்டன. 

X

Maalai Malar
www.maalaimalar.com