பள்ளி மராமத்து பணிகளை அதிகாரி ஆய்வு

பள்ளி மராமத்து பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார். ஊராட்சி செயலர் வடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பள்ளி மராமத்து பணிகளை அதிகாரி ஆய்வு
Published on

மேலூர்

மேலூர் அருகே உள்ள கொட்டாம்பட்டி பூதமங்கலம் கிராமத்தில் ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கட்டிட மராமத்து பணிகள், புதிய சமையலறை கூடம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதனை சென்னை ஊரக வளர்ச்சி துணை ஆணையர் அருண் மணி ஆய்வு செய்தார். அப்போது மதுரை கூடுதல் கலெக்டர் சரவணன், மதுரை ஊராட்சி உதவி இயக்குனர் அரவிந்த், கொட்டாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன், பூதமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி சின்ன கருப்பன், ஊராட்சி செயலர் வடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com