என் மலர்
மதுரை
- தென் இந்திய வெள்ளாளர் உறவின்முறை சங்கம் சார்பில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- வருகிற 31-ந்தேதிக்குள் கொடுக்க–வேண்டும்.
மதுரை
தென் இந்திய வெள்ளாளர் உறவின்முறை சங்க தலைவர் கே.செல்வராஜ் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென் இந்திய வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தின் 32-ம் ஆண்டு விழாவையொட்டி, வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு முடித்து 11-ம் வகுப்பில் தொடர்ந்து பள்ளியில் படித்துவரும் ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதகை ெபற விரும்பும் மாணவ, மாணவிகள் தங்களது மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ், படிக்கும் பள்ளி–யின் தலைமை ஆசிரியர் சான்றிதழ், விண்ணப்பத்துடன் 2 புகைப்படங்கள் ஆகியவற்றை நேரில் வந்து சங்கத்தில் கொடுக்க வேண்டும்.
மேலும் இலவச தையல் எந்திரம் பெறுவதற்கு தகுதியுடைய பெண்கள், குறிப்பாக விதவை பெண்கள், மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் தாங்கள் படித்த தையல் கலை சான்றிதழ் நகல் மற்றும் 2 புகைப்படங்களுடன் விண்ணப்பம் எழுதி சங்கத்தில் நேரில் வந்து அதனை வருகிற 31-ந்தேதிக்குள் கொடுக்க–வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தத.
- செயல்வீரர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
மதுரை
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தமிழ் மாநில தலைவர் நெல்லை முபாரக் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் தஞ்சை பாரூக் உள்ளிட்ட நிர்வாகிகளின் வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை யை கண்டித்து கண்டன கோஷம் கரிசல் பட்டியில் நடைபெற்றது.
எஸ்.டி.பி.ஐ. மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகம் சோழவந்தான் தொகுதி சார்பில் அலங்கா நல்லூர் ஒன்றியம், பேரூ ராட்சியில் நடைபெற்றது.
அலங்காநல்லூர் ஒன்றிய தலைவர் ரகுமான் தலைமை யில் கண்டன கோஷம் நடைபெற்றது. இதில் கட்சியின் அலங்காநல்லூர் பேரூராட்சி கிளை தலைவர் மைதீன், கிளைச் செயலாளர் அஜ்மீர் காஜா, மாலைப்பட்டி ஊராட்சி கிளை தலைவர் சையது மற்றும் பெரிய ஊர்சேரி ஊராட்சிகிளை நிர்வாகிகள், செயல்வீரர்கள், உறுப்பினர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
- கனரா வங்கி சார்பில் கிரிக்கெட், பேட்மிட்டன் போட்டி நடந்தத.
- மகளிருக்கான பேட்மிட்டன் போட்டியில் திருச்சி ராக்போர்ட் குயின்ஸ் அணி வெற்றி பெற்றது.
மதுரை
கனரா வங்கி மதுரை வட்ட அலுவலகம் சார்பில் விடுமுறை நாளையொட்டி கிரிக்கெட், பேட்மிட்டன் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியை கனரா வங்கியின் மதுரை வட்ட பொதுமேலாளர் டி.வீ.கே. மோகன் தொடங்கி வைத் தார்.
இதில் மதுரை வட்டத்தின் கீழ் உள்ள 405 கிளைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு தங்களது திறமை மற்றும் குழு உணர்வினை வெளிப்படுத்தினர்.
விறுவிறுப்பான கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல் மண்டலத்தின் ராயல் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. மகளிருக்கான பேட்மிட்டன் போட்டியில் திருச்சி ராக்போர்ட் குயின்ஸ் அணி வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற அணிக ளுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன. இந்த நிகழ்வு உடல் ஆரோக்கியத்தை ஊக்கு விப்பது மட்டுமல்லாமல் மனவளத்தை பேணுவதோடு ஊழியர்களிடையே நல்ல நட்புறவை வளர்ப்பதாக அமைத்தது என்பது சிறப்பம்சமாகும்.
கனரா வங்கி ஊழயர்க ளுக்கான மண்டல மற்றும் தேசிய அளவிலான போட்டி களில் மதுரை வட்டத்தின் ஒரு குழு பங்கேற்று பிட் இந்தியா இயக்கத்தை மேலும் உயர்த்தும் என்பதில் ஐயமில்லை.
- மணிப்பூர் கலவரத்தை கண்டித்து மதுரையில் தி.மு.க. மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான பெண்கள் பங்கேற்றனர்.
மதுரை
மணிப்பூரில் பெண்கள் மீதான தாக்குதலை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன்படி மதுரையில் தி.மு.க. மாவட்ட மகளிரணி சார்பில் பழங்காநத்தம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை வடக்கு, தெற்கு மாவட்ட மகளிரணி நிர்வாகி உமா சிங்கதேவன், ரேணுகா ஈஸ்வரி, கீர்த்திகா தங்கபாண்டியன், சின்னம்மாள், செவனம்மாள், சாந்தி, ராமலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினர்.
மாவட்ட செயலாளர்கள் தளபதி எம்.எல்.ஏ., மணிமாறன், வடக்கு மாவட்ட பொருளாளர் சோமசுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேயர் இந்திராணி பொன்வசந்த் கண்டன உரையாற்றினார்.
இதில் மண்டல தலைவர் பாண்டிச்செல்வி மிசா பாண்டியன், முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம், முன்னாள் மேயர் குழந்தைவேல், வேலுச்சாமி, மாநில தீர்மான குழு உறுப்பினர் அக்ரி கணேசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முத்துராமலிங்கம், லதா அதியமான், ஒச்சு பாலு, பாலசுப்பிரமணியன், அழகு பாண்டி,இளைஞர் அணி மாநில துணைச்செயலாளர் ஜி.பி.ராஜா,வைகை பரமன்,சுதன்,காளிதாஸ், கிருஷ்ண பாண்டி, தைக்கா தெரு ராஜேந்திரன்,வைகை மருது, நிர்வாகிகள் சவுந்தர பாண்டியன், ஜெயராம், ராமபிரசாத், ஒச்சுபாலு, சுதன், சிவா, ராஜரத்தினம், மகேந்திரன் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
- மதுரை அருகே கீழமாத்தூரில் நாளை புதிய தியான மந்திர் அர்ப்பணிப்பு விழா நடக்கிறது.
- இந்த விழாவில் சுவாமி அமரானந்தகிரி பங்கேற்கிறார்.
மதுரை
யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா அமைப்பு ஸ்ரீஸ்ரீ பரமஹம்ஸ் யோகானந்தரால் 1917-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த அமைப்பு பல்வேறு ஆன்மீக சேவைகளை ஆற்றி வருவதோடு தியானங்களை பற்றியும் கற்றுத்தருகிறது.
அந்த வகையில் மதுரை அருகே திருவேடகம் வழியில் உள்ள கீழமாத்தூரில் யோகம் நகர் ஷிவானி கார்டனில் புதிய தியான மந்திர் அமைக்கப்பட்டுள் ளது. இதன் அர்ப்பணிப்பு விழா மற்றும் தியானம், ஆன்மீக சொற்பொழிவு, மகா பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நாளை (25-ந்தேதி, செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியளவில் நடைபெறுகிறது.
விழாவில் யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா அமைப்பின் மூத்த சன்னியாசி சுவாமி அமரானந்த கிரி கலந்துகொண்டு புதிய தியான மண்டபத்தை அர்ப்பணித்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
- கள்ளழகர் கோவிலில் ஆடி திருவிழா கொடியேற்றம் நடந்தது.
- வருகிற 1-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுந்தரராஜ பெருமாள்.
அலங்காநல்லூர்
திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று போற்றி புகழ்ந்து அழைக்கப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்றான மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடிப்பெருந்திருவிழா மிக விமரிசையாக நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை கொடி யேற்றத்துடன் தொடங் கியது. அலங்கரிக்கப்பட்ட தங்க கொடிமரத்தை சுற்றிலும் நாணல் புல், மாவிலைகள், பூ மாலைகள் இணைக்கப் பட்டு கருடன் உருவம் பொறித்த கொடி காலை 10.30 மணிக்கு ஏற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து நூபுர கங்கை தீர்த்தம் கொண்டு விசேஷ பூஜைகளும் தீபாரதனைகளும் நடந்தது. இதில் உற்சவர் ஸ்ரீதேவி -பூமிதேவி, சமேத கள்ளழகர் என்கிற சுந்தர ராஜ பெருமாளுக்கு விசேஷ பூஜைகள், தீபாரதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இன்று இரவு அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. இதைதொடர்ந்து நாளை (25-ந்தேதி) காலையில் தங்க பல்லக்கு உற்சவமும், இரவில் சகல பரிவாரங்களுடன் சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். விழா நடைபெறும் நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் அன்னம், அனுமார், கருடன், தங்க பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
30-ந்தேதி இரவு புஷ்ப சப்பரமும், 31-ந்தேதி இரவு தங்ககுதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடை பெறும். ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி (செவ்வாய்கிழமை) அதிகாலை 6 மணிக்கு மேல் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. இதில் பல்லா யிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அன்று இரவு பூப்பல்லக்கும், 2-ந்தேதி மாலையில் புஷ்ப சப்பரமும், 3-ந் தேதி உற்சவ சாந்தியுடன் விழா நிறைவு பெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கோவில் கண்காணிப்பாளர்கள் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- மதுரை மேட்டுநீரேத்தான் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ஊக்கத்தொகை
- கிராம பொதுமக் கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் மேட்டு நீரேத்தான் கிராமத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
கடந்த கல்வியாண்டில் பள்ளியில். முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
வாடிப்பட்டி பேரூராட்சி கவுன்சிலரும், அ.தி.மு.க. நகர செயலாளருமான அசோக் மற்றும் அப்பகுதியை சேர்ந்த அருணா அம்மா அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நலத்திட்ட நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் பயனடைந்தனர்.
இதில் பள்ளியின் தலைமையாசிரியர் தமயேந்தி, வாடிப்பட்டி பேரூராட்சி கவுன் சிலர்கள் இளங்கோவன், கீதா சரவணன், சூர்யா அசோக்குமார், பிரியதர்ஷினி, பஞ்சம்மாள், வெங்கடேஸ்வரி, கிராம பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
- இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பிரபு மற்றும் சுஜித் இருவரும் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
- விபத்து நடந்தும் முன்னாள் சென்ற லாரி நிற்காமல் சென்றதால் அது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமங்கலம்:
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள சாஸ்தா நகரை சேர்ந்தவர் சந்திரன் மகன் சுஜித் (வயது 20). இவரது நண்பர் செந்தில்குமார் மகன் பிரபு (26). இவர்கள் இருவரும் கோவையில் ஒரு ஓட்டலில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு வந்து விட்டு மீண்டும் கோவை செல்வதற்காக இருவரும் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்துகொண்டிருந்தனர்.
இன்று காலை திருமங்கலம் அருகே ராயபாளையம் நான்கு வழிச்சாலையில் வந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பிரபு மற்றும் சுஜித் இருவரும் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான வாலிபர்கள் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து நடந்தும் முன்னாள் சென்ற லாரி நிற்காமல் சென்றதால் அது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் திருமங்கலம் பகுதியில் நள்ளிரவில் நடந்த 2 வெவ்வேறு சாலை விபத்துகளில் மேலும் 2 பேர் பலியானார்கள்.
- இளம்பெண்-வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
- மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
மதுரை
மதுரை அவனியாபுரம் வள்ளல் ஆனந்தபுரம் ஜே.ஜே. நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி மாலினி (வயது 24). இவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இந்த நிலையில் குடும்பப் பிரச்சினையால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மாலினி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவனியாபுரம் போலீசில் மாலினியின் தந்தை கருப்பையா புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மிளகரணை நாகம்மாள் தெரு வடக்கு தெருவை சேர்ந்தவர் மணி (50). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மணி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மனைவி நாகம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கூடல் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தண்ணீர் லாரி மோதி தாயுடன் ஸ்கூட்டரில் சென்ற சிறுமி பலியானார்.
- லாரி ஸ்கூட்டர் மீது மோதியது.
மதுரை
மதுரை அருகே மங்களக் குடி விலக்கு பகத்சிங் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது41). இவரது மனைவியும், 9 வயது மகள் அஜிதாவும் ஸ்கூட்டரில் சென்றார். பைக் மூன்றுமாவடி பகுதி யில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வேகமாக வந்த தண்ணீர் லாரி ஸ்கூட்டர் மீது மோதியது.
இதில் தாயும் குழந்தையும் கீழே விழுந்தனர். இதனால் படுகாயம் அடைந்த அஜிதா சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசில் காளிதாஸ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்ணீர் லாரி டிரைவர் தனஇந்திரன் (51) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
- மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரையில் தென்பகுதி நுழைவாயிலாக திருமங்க லம் உள்ளது. குறிப்பாக எடப்பாடியார் திருமங்கலம் தொகுதிக்கு, பல்வேறு நலத்திட்டங்களை செய்தார். கள்ளிக்குடியில் புதிய வட்டம், திருமங்க லத்தில் புதிய கோட்டம், அதனைத் தொடர்ந்து திருமங்கலம் தொகுதியில் உள்ள 324 கிராமங்கள், 116 ஊராட்சிகள், திருமங்கலம் நகரில் உள்ள 27 வார்டுகள், இரண்டு பேரூராட்சியில் உள்ள 30 வார்டுகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் சாலைகள், புதிய கிராம இணைப்பு சாலைகள் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை எடப்பாடியார் செய்து கொடுத்தார்.
மேலும் எடப்பாடியார் ஆட்சியில் தான் திருமங்கலம் யூனியன் சிறப்பாக செயல்பட்டு மத்திய அரசு விருது பெற்று இதற்காக 25 லட்சம் ரூபாயை பரிசாக பெற்றது. அதேபோல் கல்லுப்பட்டி பேரூராட்சியும் சிறப்பு விருதினை பெற்றது. திருமங்கலம் நகராட்சிக்கு புதிய கட்டிடங்கள், கல்லூரி களுக்கு புதிய கட்டிடங்கள் உருவாக்கி தரப்பட்டது.
அதேபோல் திருமங்க லத்தில் ரெயில்வே கேட் அருகே மேம்பாலம் அமைக்க அ.தி.மு.க. ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு பூமி பூஜை செய்யப்பட்டது. அது கிடப்பில் போடப் பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை சட்டமன்றத்தில் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும் மக்களின் பிரதானமாக கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டுமென்ற கோரிக்கை உள்ளது. மத்திய அமைச்சர் நிதி கட்காரி 6 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள சுங்க சாவடி அகற்றப்படும் எனக் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கப்பலூர் சுங்க சாவடியை அகற்ற முதல்-அமைச்சர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கப்பலூர் சுங்க சாவடியை அகற்றுவோம் என்று முதல்-அமைச்சர் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தி ருந்தார்.
எடப்பாடியார் ஆட்சி காலத்தில் உள்ளூர் வானங்களை முறையாக கையாளும் வகையில் பல்வேறு சலுகைகள் பெற்று தரப்பட்டது. ஏற்கனவே உங்கள் தொகுதி முதல்-அமைச்சர் என்ற திட்டத்தில் 10 கோரிக்கையில் இதுவும் பிரதான கோரிக்கையாக நான் கொடுத்துள்ளேன்.
கப்பலூர் டோல்கேட் குறித்து நான் மக்களிடம் மனுககளை வாங்கும் பொழுது ஒரு நாள் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் வைத்து என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது அந்த வழக்கும் நிலுவையில் தான் உள்ளது. தொடர்ந்து எதிர்கட்சி தொகுதிகளை பாராபட்சம் காட்டி வஞ்சிக்க கூடாது இது ஜனநாயகத்திற்கு அழகல்ல
கப்பலூர் சுங்கச்சாவடி அகற்ற நடவடிக்கை எடுக்க விட்டால் எடப்பாடியார் அனுமதியை பெற்று தமிழக அரசுக்கு எதிராக மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மதுரை அருகே வீட்டின் பீரோவை உடைத்து நகை-பணம் கொள்ளை போனது.
- ராதாகிருஷ்ணன் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
மதுரை
மதுரை சிலைமான் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி உஷா ராணி (வயது 53). ராதாகிருஷ்ணன் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று கண வன்-மனைவி இருவரும் சொந்த வேலை காரணமாக வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றனர். இந்த நிலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் மாடியில் உள்ள அறை கதவு உடைக்கப்பட் டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்தி ருந்த 3½ பவுன் தங்க நகை கள், 4 ஜோடி வெள்ளி கொலுசுகள், ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் வெளிநாட்டு பணம் ஆகியவை திருடு போயிருந்தது தெரிய வந்தது.
யாரோ மர்ம நபர் கள் ராதாகிருஷ்ணனின் வீட்டை நோட்டமிட்டு அவர்கள் வெளியூர் சென்றிருந்தபோது கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை-பணத்தை திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து உஷாராணி சிலைமான் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






