search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளழகர் கோவில் ஆடி திருவிழா கொடியேற்றம்
    X

    கள்ளழகர் கோவில் ஆடித்திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு கொடிமரம் வண்ண மலர்கள் கொண்ட மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட காட்சி.

    கள்ளழகர் கோவில் ஆடி திருவிழா கொடியேற்றம்

    • கள்ளழகர் கோவிலில் ஆடி திருவிழா கொடியேற்றம் நடந்தது.
    • வருகிற 1-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.



    சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுந்தரராஜ பெருமாள்.

    அலங்காநல்லூர்

    திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று போற்றி புகழ்ந்து அழைக்கப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்றான மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடிப்பெருந்திருவிழா மிக விமரிசையாக நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை கொடி யேற்றத்துடன் தொடங் கியது. அலங்கரிக்கப்பட்ட தங்க கொடிமரத்தை சுற்றிலும் நாணல் புல், மாவிலைகள், பூ மாலைகள் இணைக்கப் பட்டு கருடன் உருவம் பொறித்த கொடி காலை 10.30 மணிக்கு ஏற்றப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நூபுர கங்கை தீர்த்தம் கொண்டு விசேஷ பூஜைகளும் தீபாரதனைகளும் நடந்தது. இதில் உற்சவர் ஸ்ரீதேவி -பூமிதேவி, சமேத கள்ளழகர் என்கிற சுந்தர ராஜ பெருமாளுக்கு விசேஷ பூஜைகள், தீபாரதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று இரவு அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. இதைதொடர்ந்து நாளை (25-ந்தேதி) காலையில் தங்க பல்லக்கு உற்சவமும், இரவில் சகல பரிவாரங்களுடன் சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். விழா நடைபெறும் நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் அன்னம், அனுமார், கருடன், தங்க பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    30-ந்தேதி இரவு புஷ்ப சப்பரமும், 31-ந்தேதி இரவு தங்ககுதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடை பெறும். ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி (செவ்வாய்கிழமை) அதிகாலை 6 மணிக்கு மேல் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. இதில் பல்லா யிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அன்று இரவு பூப்பல்லக்கும், 2-ந்தேதி மாலையில் புஷ்ப சப்பரமும், 3-ந் தேதி உற்சவ சாந்தியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கோவில் கண்காணிப்பாளர்கள் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


    Next Story
    ×