வீட்டின் பீரோவை உடைத்து நகை-பணம் கொள்ளை

மதுரை அருகே வீட்டின் பீரோவை உடைத்து நகை-பணம் கொள்ளை போனது. ராதாகிருஷ்ணன் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
வீட்டின் பீரோவை உடைத்து  நகை-பணம் கொள்ளை
Published on

மதுரை

மதுரை சிலைமான் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி உஷா ராணி (வயது 53). ராதாகிருஷ்ணன் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று கண வன்-மனைவி இருவரும் சொந்த வேலை காரணமாக வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றனர். இந்த நிலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் மாடியில் உள்ள அறை கதவு உடைக்கப்பட் டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்தி ருந்த 3½ பவுன் தங்க நகை கள், 4 ஜோடி வெள்ளி கொலுசுகள், ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் வெளிநாட்டு பணம் ஆகியவை திருடு போயிருந்தது தெரிய வந்தது.

யாரோ மர்ம நபர் கள் ராதாகிருஷ்ணனின் வீட்டை நோட்டமிட்டு அவர்கள் வெளியூர் சென்றிருந்தபோது கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை-பணத்தை திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து உஷாராணி சிலைமான் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com