search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dedication Ceremony"

    • மதுரை அருகே கீழமாத்தூரில் நாளை புதிய தியான மந்திர் அர்ப்பணிப்பு விழா நடக்கிறது.
    • இந்த விழாவில் சுவாமி அமரானந்தகிரி பங்கேற்கிறார்.

    மதுரை

    யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா அமைப்பு ஸ்ரீஸ்ரீ பரமஹம்ஸ் யோகானந்தரால் 1917-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த அமைப்பு பல்வேறு ஆன்மீக சேவைகளை ஆற்றி வருவதோடு தியானங்களை பற்றியும் கற்றுத்தருகிறது.

    அந்த வகையில் மதுரை அருகே திருவேடகம் வழியில் உள்ள கீழமாத்தூரில் யோகம் நகர் ஷிவானி கார்டனில் புதிய தியான மந்திர் அமைக்கப்பட்டுள் ளது. இதன் அர்ப்பணிப்பு விழா மற்றும் தியானம், ஆன்மீக சொற்பொழிவு, மகா பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நாளை (25-ந்தேதி, செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியளவில் நடைபெறுகிறது.

    விழாவில் யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா அமைப்பின் மூத்த சன்னியாசி சுவாமி அமரானந்த கிரி கலந்துகொண்டு புதிய தியான மண்டபத்தை அர்ப்பணித்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

    • முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வெங்கடாசலம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
    • மங்கலம் ஊராட்சி மன்ற உறுப்பினர் ரபிதீன் ,இளைஞர் அணி நிர்வாகி சிராஜ்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம், மங்கலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இளைஞர் அணி சார்பில் மங்கலத்தில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மங்கலம் பகுதி தலைவர் ஜக்காரியா சேட் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மங்கலம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தாஹாநசீர் , மங்கலம் ஊராட்சி மன்ற உறுப்பினர் ரபிதீன் ,இளைஞர் அணி நிர்வாகி சிராஜ்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியும், மங்கலம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான வே. முத்துராமலிங்கம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வெங்கடாசலம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    முடிவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுச்செயலாளர் அபூபக்கர் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் இப்ராஹிம் சிறப்புரையாற்றினர். முடிவில் தெளபிக் நன்றி கூறினார். இந்த ஆம்புலன்ஸ் சேவையானது குறைந்த கட்டணத்தில் செயல்படும் என தெரிவித்தனர்.

    • ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா நடைபெற்றது.
    • கோதண்டராமர் கோவிலில் விபீஷணர்க்கு பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் ராம லிங்க பிரதிஷ்டை விழா நேற்று தொடங்கியது. 3 நாள்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல் நாள் நிகழ்ச்சியான ராவணனை வதம் செய்யும் நிகழ்ச்சி ராமேசுவரம் துர்க்கை அம்மன் கோவில் அருகில் நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து 2-ம் நாள் நிகழ்ச்சியான இன்று தனுஷ்கோடி செல்லும் சாலையில் அமைந்துள்ள கோதண்டராமர் கோவிலில் விபீஷணர்க்கு பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.

    இதன் காரணமாக ராமநாத சுவாமி கோவிலில் இன்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜை நடைபெற்றது.அதனை தொடர்ந்து 7 மணி அளவில் விபிஷனர் அலங்காரத்துடன் புறப்பாடாகி ராம தீர்த்தக் கரையில் அமைந்துள்ள ராமர் கோவிலில் சென்று ராமர் சீதை மற்றும் லட்சுமணருடன் அழைப்பு கொடுத்தனர்.

    பின்னர் ராமர் சீதை லட்சுமணர் தங்க கேடயத்தில் புறப்பாடு ஆகி திட்டகுடி, வர்த்தகன்தெரு வழியாக தனுஷ்கோடியில் அமைந்துள்ள கோதண்ட ராமர் கோவிலுக்கு சென்ற டைந்தனர். அங்கு மாலை பட்டமளிப்பு விழாவில் நடைபெற்ற பின்பு மாலை யில் அங்கிருந்து புறப்பட்டு ராமநாத சுவாமி கோவி லுக்கு வந்தடைகின்றனர்.

    விபீஷணர் பட்டமளிப்பு விழா காரணமாக இன்று காலை 7 முதல் மாலை 5 மணி வரை ராமேஸ்வரம் கோவில் நடை அடைக்கப்பட்டு இருந்தன. கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராட தடை விதிக்கப்பட்டு இருந்தன. இதை அறியாமல் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். அவர்கள் மாலை வரை காத்திருந்து நடை திறந்தபின் சாமி தரிசனம் செய்தனர்.

    ×