என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரெப்கோ வங்கியின் மதுரை கிளையில் சிறப்பு டெபாசிட் திட்ட வாடிக்கையாளர் முகாம் தொடங்கியது.
சிறப்பு டெபாசிட் திட்ட வாடிக்கையாளர் முகாம்
- ரெப்கோ வங்கியில் சிறப்பு டெபாசிட் திட்ட வாடிக்கையாளர் முகாம் ஆகஸ்டு 31 வரை நடக்கிறது.
- மேலும் தங்க நகை கடன் கிராம் ஒன்றுக்கு ரூ.4,600 வரை வழங்கப்படுகிறது.
மதுரை
ரெப்கோ வங்கியில் சிறப்பு டெபாசிட் திட்ட வாடிக்கையாளர் முகாம் இன்று தொடங்கியது. ரெப்கோ வங்கியின் மதுரை கிளையில் இணை பொது மேலாளர் சண்முகம் முன்னிலையில் வாடிக்கை யாளர்கள் மரிய சூசை, பாஸ்கரன் மற்றும் வங்கி எழுத்தர் ராஜேஸ்வரி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி டெபாசிட் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இதில் மூத்த குடிமக்களுக்கு 8.25 சதவீதமும், பொதுமக்களுக்கு 7.75 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது. மேலும் தங்க நகை கடன் கிராம் ஒன்றுக்கு ரூ.4,600 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்து இணை பொது மேலாளர் சண்முகம் கூறுகையில், ரெப்கோ வங்கி மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த வங்கியின் மேலாண்மை இயக்குனர் இசபெல்லா தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வங்கியின் அனைத்து கிளைகளிலும் சிறப்பு டெபாசிட் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த சிறப்பு டெபாசிட் திட்டத்திற்கான வாடிக்கையாளர் முகாம் இன்று முதல் ஆக.31-ந் தேதி வரை நடைபெறுகிறது. மதுரையில் பீ.பீ.குளம், வில்லாபுரம், மேலூர் கிளைகளிலும் இந்த முகாம் நடைபெறுகிறது.
எனவே வாடிக்கை யாளர்கள் மற்றும் பொது மக்கள் இந்தத் திட்டத்தை பயன்படுத்தி பயன்பெறலாம் என்றார். முகாம் தொடக்க விழாவை உதவி மேலாளர் நாசீன் தொகுத்து வழங்கினார். முடிவில் உதவி மேலாளர் ஜோயல் நன்றி கூறினார்.






