என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆட்டோவில் ஏறிய பயணியை தாக்கி 4 பவுன் நகை பறிப்பு
- மதுரையில் ஆட்டோவில் ஏறிய பயணியை தாக்கி 4 பவுன் நகை பறிக்கப்பட்டது.
- இதுகுறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.
மதுரை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஊத்துப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்(வயது47). இவர் வேலை நிமித்தமாக மதுரை வந்திருந்தார்.
சம்பவத்தன்று வெளியே செல்வதற்காக ஆட்டோவில் பயணம் செய்தார். அவனியாபுரம் பகுதியில் சென்றபோது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் திடீரென ஆட்டோவை நிறுத்திய டிரைவர் கத்தியை காட்டி மிரட்டி நவநீத கிருஷ்ணனை தாக்கி 4 பவுன் செயின், பாஸ்போர்ட் வைத்திருந்த பையையும் பறித்துச் சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.
செல்போன் பறிப்பு
நரிமேடு பஜனைமடம் தெருவை சேர்ந்தவர் கிருபாகரன்(21). இவர் திருப்பாலை பகுதியில் நடந்து சென்றபோது 3 பேர் தாக்கி செல்போனை பறித்துச் சென்றனர். திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், செல்போனை பறித்தது அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், கார்த்திக்ராஜா, வசந்த் என தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.






