search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பெண்கள் பள்ளி முன்பு ஒலிபெருக்கி மூலம் வியாபாரம்
    X

    அரசு பெண்கள் பள்ளி முன்பு ஒலிபெருக்கி மூலம் வியாபாரம்

    • அரசு பெண்கள் பள்ளி முன்பு ஒலிபெருக்கி மூலம் வியாபாரம் செய்தனர்.
    • மாணவிகள் கல்வி பாதிப்பதாக புகார் எழுந்தது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் நகரில் தாலுகா அலுவலகம் முன்பு அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளி அமைந்துள்ளது.இங்கு 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வி யும் பயிற்றுவிக்கப்படுகிறது.

    மேலூர் மற்றும் சுற்றி உள்ள கிராம பகுதிகளில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர். இந்த பள்ளி மதுரை மெயின் ரோட்டில் அமைந்துள்ளது.

    இங்கு சாலையின் இரு புறமும் காய் மற்றும் பழ வியாபாரங்கள் தள்ளு வண்டி, வேன்களில் வைத்து ஏராளமான வண்டிகளில் வியாபாரம் செய்து வருகின்றனர். சாலையோரம் வைத்து வியாபாரம் செய்ப வர்கள் ஒலி பெருக்கி மூலம் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு கூவி கூவி அதிக சத்தத்துடன் பொருட்களை விற்பதால் அருகில் உள்ள பள்ளியில் பாடம் நடத்த முடியவில்லை.

    மேலும் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை மாணவிகளால் கவனிக்க முடியாத ஒரு அவல நிலை யும் அவர்கள் கவனத்தை திசை திருப்புவதாகவும் உள்ளது.

    இதுகுறித்து மேலூர் புது பர்மா காலனி சேர்ந்த சமூக ஆர்வலர் துரைசிங்கம் கூறுகையில், பள்ளி மாண விகளுக்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் சாலையோரம் வியாபாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மேலூர் தாசில்தாரிடம் மனு கொடுத்துள்ளேன். எனவே போலீசார் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பள்ளி மாணவி, பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×