என் மலர்
மதுரை
- ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
- மலைக்கு செல்பவர்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது.
திருமங்கலம்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் 4,500 அடி உயரத்தில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. வனத்துறை பகுதியில் கோவில் உள்ளதால் மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு கடந்த 12-ந்தேதி முதல் நாளை (15-ந்தேதி) வரை பக்தர்கள் சதுரகிரி செல்ல அனுமதி வழங்கப்பட் டுள்ளது. கடந்த 2 நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் சதுரகிரிக்கு வந்து மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
அமாவாசையை முன்னிட்டு இன்று சதுரகிரிக்கு செல்ல அதிகாலை முதலே அடிவாரத்தில் பெண்கள் உள்பட ஆயிரக்கணக் கானோர் காத்திருந்தனர். காலை 7 மணியளவில் வனத்துறையினர் மலையேற அனுமதித்தனர். பக்தர்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டது.
மலைக்கு செல்பவர்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது. மலைப்பாதை ஓடைகளில் குளிக்கக்கூடாது. இரவில் கோவிலில் தங்க அனுமதி இல்லை போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டது. அமாவாசையை முன்னிட்டு இன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
- பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு தொடக்க விழா நடந்தது.
- இதில் மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
மதுரை
பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரி மற்றும். பி.எஸ்.ஆர்.ஆர் பொறியியல் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்கள் தொடக்க விழா கல்லூரி கலையரங் கத்தில் நடைபெற்றது. இதில் 2,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற் றோர்கள் கலந்து கொண்ட னர்.
இதில் பி.எஸ்.ஆர். கல்விக் குழுமங்களின் இயக் குநர் விக்னேஷ்வரி அருண் குமார் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் செந்தி குமார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். கல்லூ ரியின் டீன் மாரிச்சாமி அனைவரையும் வரவேற் றார்.
கல்லூரியின் முதல்வர் பாலசுப்ரமணியன் மாணவர்களை வாழ்த்தி பேசினார். கல்லூரியின் முதலாமாண்டு துறைத்தலைவர் செல்வராணி சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ரகநாத் கலந்து கொண்டு பேசியதாவது:-
நான் பல வருடங்களாக இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு மன ரீதி யான பயிற்சி அளித்து வருகிறேன். இக்கல்லூரியில் ஒழுக்கத்துடன் கூடிய கல்வி வழங்குவதால் 4 வருடங்கள் முடிவில் ஒழுக்கத்துடன் கூடிய பட்டபடிப்பை பெற்று உங்கள் குழந்தைகள் உயர்ந்த நிலைக்கு வருவார் கள் என உறுதியளித்தார்.
பொறியியல் படிப்பை வரும் நான்கு வருடங்கள் நன்றாக படித்தால் உங்கள் தலைமுறை 40 வருடங் களுக்கு மேலோங்கி நிற் கலாம். எனவே மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தக் கூடாது என்று அவர் பேசி னார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், இருகல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் இணைந்து செய்திருந்தனர். முடிவில் பி.எஸ்.ஆர்.ஆர் பொறியியல் கல்லூரியின் அறிவியல் மற்றும் மனித நேயத்துறை தலைவர் சக்தியஸ்ரீ நன்றி கூறினார்.
- திருமங்கலத்தில் 331 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை நகர்மன்றத்தலைவர் வழங்கினார்.
- பி.கே.என். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வழங்கப்பட்டது.
திருமங்கலம்
தமிழகத்திலுள்ள மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் சிரமமின்றி பள்ளிக்குச் செல்லும் வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தமிழக அரசின் சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் பி.கே.என். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும்331 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திருமங்கலம் தி.மு.க. நகர கழகச் செயலாளர் ஸ்ரீதர், நகர் மன்றத்துணைத் தலை வர் ஆதவன் அதியமான், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் முத்துக்குமார், பி.கே.என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கமிட்டி செயலர் சரவணன், தலைவர் பார்த்திபன், பொருளாளர் காமராஜ், கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாரிராஜன் மற்றும் பள்ளியின் டைரக்டர்கள், ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- ரூ.30 லட்சம் கடன் கொடுத்தால் அதனை மாத தவணைத் தொகையாக செலுத்தி விடுவதாகவும் கூறியுள்ளார்.
- ஒவ்வொரு மாதமும் கடன் தொகைக்கு ஏற்பட ரூ.25 ஆயிரத்தை வட்டியாக பாலசுப்பிரமணியனுக்கு கொடுத்து விடுவதாகவும் உறுதியளித்துள்ளார்.
மதுரை:
மதுரை பைபாஸ் ரோடு எஸ்.பி.ஐ. ஆபிஸர்ஸ் 2-வது காலனியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 59). இவர் ரெயில்வேயில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.
இவரிடம் சென்னை வேளச்சேரியை சேர்ந்த லட்சுமி நாராயணன் என்பவர் அறிமுகம் ஆனார். அப்போது அவர் தான் நடத்தி வரும் தனியார் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் தொழில் விரிவாக்கம் செய்ய இருப்பதாகவும், அதற்காக ரூ.30 லட்சம் கடன் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார்.
அதன்படி ரூ.30 லட்சம் கடன் கொடுத்தால் அதனை மாத தவணைத் தொகையாக செலுத்தி விடுவதாகவும் கூறியுள்ளார். மேலும் அது தவிர ஒவ்வொரு மாதமும் கடன் தொகைக்கு ஏற்பட ரூ.25 ஆயிரத்தை வட்டியாக பாலசுப்பிரமணியனுக்கு கொடுத்து விடுவதாகவும் உறுதியளித்துள்ளார்.
அவரது பேச்சை நம்பிய பாலசுப்பிரமணியன் வங்கி மூலமாக ரூ.27 லட்சத்தை லட்சுமி நாராயணனுக்கு செலுத்தியுள்ளார். கடன் பெற்ற நாளிலிருந்து 2 தவணைகள் மட்டும் லட்சுமி நாராயணன் செலுத்தி உள்ளார். ஆனால் கூறியபடி வட்டி தொகையை செலுத்தவில்லை. அவருக்கு மாதம் தருவதாக சொன்ன ரூ.25 ஆயிரமும் கொடுக்கவில்லை.
இதையடுத்து கொடுத்த கடனை பாலசுப்ரமணியன் திருப்பிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லட்சுமி நாராயணனும், அவரது மனைவி சுதாவும் சேர்ந்து கொண்டு உன்னை கூலிப்படையை ஏவி கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பாலசுப்பிரமணியன் எஸ்.எஸ். காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் லட்சுமி நாராயணன் அவரது மனைவி சுதா ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசின் ஒரு வருட பயிற்சியில் எந்த வேதத்தையும் முழுமையாக கற்க முடியாது.
- தமிழகத்தில் ஆகம, வேத விதிகளை முழுமையாக படித்தவர்கள் ஏராளமாக உள்ளனர்.
மதுரை:
திருச்செந்தூரை சேர்ந்த வீரபாகு மற்றும் ஹரிஹர சுப்பிரமணி ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தின் மூலம் தமிழகத்தில் அனைத்து கோவில்களிலும் அர்ச்சகர் நியமனம் செய்ய பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தின்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற பயிற்சி திட்டத்தின்கீழ் பயிற்சி முடித்தவர்களை மூத்த அர்ச்சகர்கள் கீழ் பயிற்சி அர்ச்சகராக நியமனம் செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது சட்டவிரோதமானது. ஏற்கனவே தமிழகத்தில் ஆகம, வேத விதிகளை முழுமையாக படித்தவர்கள் ஏராளமாக உள்ளனர்.
இதற்கிடையே புதிதாக நியமனம் என்பது தேவையற்றது. மேலும் அரசின் ஒரு வருட பயிற்சியில் எந்த வேதத்தையும் முழுமையாக கற்க முடியாது. வேதங்களை கற்பதற்கு ஐந்து, ஆறு வருடங்கள் ஆகும். மேலும் மூத்த அர்ச்சகர் கீழ் பயிற்சி அர்ச்சகராக நியமனம் செய்யக்கூடிய நபர்களுக்கு கோவில் நிதியிலிருந்து ரூ.8 ஆயிரம் மாத ஊதியம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல. எனவே தமிழ்நாடு அரசின் இந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், தமிழ்நாடு அரசின் அரசாணை சட்டவிரோதமானது. மேலும் இது சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு கொடுத்துள்ள உறுதி மொழிக்கு எதிராக உள்ளது. எனவே இதை ரத்து செய்ய வேண்டும். வழக்கு முடியும் முன்பாக விசாரணை நடைபெறும் காலங்களில் இந்த அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.
பின்னர் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சண்முகநாதன் மற்றும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் ஆகியோர் ஆஜராகி, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. இந்த அர்ச்சகர் பயிற்சி என்பது பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு அனுபவ பயிற்சிதான். இது தொடர்பான விரிவான விசாரணையை வருகிற 25-ந்தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும் என வாதிட்டனர்.
அரசு தரப்பு வாதத்திற்கு மனுதாரர் தரப்பு வக்கீல் ஆட்சேபம் தெரிவித்தார். 25-ந்தேதிக்குள் இந்த அரசாணை அமல்படுத்தும் வேலையை அரசு நிறைவேற்றி விடும் என்பதால் அரசு தரப்பு கோரிக்கையை ஏற்கக்கூடாது என தெரிவித்தார்.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைக்க வேண்டும் என அரசு தரப்பில் கோரப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தார்.
- மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பித்த 56.50 லட்சம் பெண்களின் மனுக்களை நிராகரித்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டினார்.
- அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
மதுரை
மதுரையில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கி கூறியதாவது:-
புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை 100 சதவீதம் நிறைவேற்றி னார்கள். கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத அவல நிலையை உருவாக்கியுள்ளனர்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்குவோம் என்று ஸ்டாலின் கூறினார். ஆனால் தற்பொழுது ஒரு கோடியே 63 லட்சம் மக்களிடத்தில் மனுக்களை பெற்று இதில், ஒரு கோடியை 6 லட்சம் பேருக்கு தான் வழங்குவோம் என்று கூறியுள்ளனர். 56.50 லட்சம் மனுக்களை தள்ளுபடி செய்தனர் இதனால் விண்ணப்பித்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஒரு கோடியே 98 லட்சம் குடும்பங்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசி திட்டத்தை வழங்கினார். அதேபோல் அனைத்து குடும்பங்க ளுக்கும் மிக்சி கிரைண்டர் வழங்கினார். 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்க ணினி வழங்கப்பட்டது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் அரசாக அதி.மு.க. அரசு இருந்தது .ஆனால் கொடுத்த வாக்கு றுதியை நிறைவேற்றாமல் முரண்பட்ட அரசாக தி.மு.க. ஆட்சி இருக்கிறது.
கல்வி கடனை ரத்து செய்வோம், ஐந்து பவுன் நகைஅடகு வைத்தால் ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து கூறினார்கள் ஆனால் எதையும் நிறைவேற்ற வில்லை.
அனைத்து மக்களையும் சமமாக பார்ப்பேன் என்று பதவி பிரமாணம் ஏற்றுஇன்றைக்கு இறையாண்மைக்கு எதிராக உதயநிதி பேசுவதால் அவரது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
நான் டெல்டாக்காரன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் இன்றைக்கு விவசாயிகளை நடுரோட்டில் நிற்க வைத்து விட்டார் .இன்றைக்கு சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, இதற்கு தீர்வு காணாமல் அதை திசை திருப்ப சனாதனம் பற்றி உதயநிதி பேசுகிறார்.இதற்கு ஆதரவாக ஸ்டாலின் திராவிட தலைவர்களை ஒப்பிட்டு அறிக்கை வெளியிட்டு வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளை நல்வழிப்படுத்த அமைதி கல்வி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- பயிற்சி வகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டு நடக்கிறது.
மதுரை
சிறைவாசிகளை நல்வ–ழிப்படுத்தும் வகையில் பல் வேறு விதமான சீர்தி ருத்த பணிகளை சிறைத்துறை டி.ஜி.பி. அமரேஷ் பூஜாரி மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக சிறை வாசிகளின் மனதை ஆற்றுப் படுத்தும் விதமாகவும், அவர்களை அமைதிப்ப டுத்தி நல்வழிப்படுத்தும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி உலக அமைதி பேச்சாளர் பிரேம் ராவத் குழுவினர் மூலமாக தமிழ கம் முழுவதும் உள்ள அனைத்து மத்திய சிறைக ளிலும் அமைதி கல்வி திட்டம் என்ற பெயரில் பயிற்சி வகுப்பு அறிமுகப்ப டுத்தப்பட்டு நடக்கிறது.
இதில் அமைதி, மதிப்பை உணர்தல், உள் வலிமை, தன்னை உணர்தல், தெளிவு, புரிந்து கொள்ளுதல், தன்மா னம், தேர்ந்தெடுத்தல், நம் பிக்கை, திருப்தி ஆகிய தலைப்பின் கீழ் தினந்தோ றும் 45 நிமிட காணொளி சிறப்பு பயிற்சி வகுப்புகள் கடந்த 3-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இறுதி நாளான நேற்று இப்பயிற்சியில் கலந்து கொண்ட சிறைவாசிகளுக்கு பிரேம் ராவத்தின் இளைஞர் அமைதி அமைப்பின் சார் பாக சான்றிதழ்களை மதுரை சரக சிறைத்துறை துணைத் தலைவர் பழனி மற்றும் மத்திய சிறை கண்கா ணிப்பாளர் பரசுராமன் சிறை அலுவலர் மற்றும் நல அலுவலர்கள் கலந்து கொண்டு மதுரை மத்திய சிறையில் உள்ள ஆண், பெண் சிறைவாசிகள் சுமார் 200 பேருக்கு சான்றி–தழ்களை வழங்கினர்.
- ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
- இதனால் அரசு பணிகள் பாதிக்கப்பட்டது.
மதுரை
தமிழகம் முழுவதும் இன்று ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். மதுரை மாவட்டத்தில் 13ஊராட்சி ஒன்றியங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் யாரும் பணிக்கு வராததால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப் பட்டது. இதனால் அரசு பணிகள் பாதிக்கப்பட்டது.
ஊரக வளர்ச்சி துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். வட்டார அளவில் பணி புரிபவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் நடந்தது. கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி நாளை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஊரக வளர்ச்சித்துறையினர் தெரிவித்தனர்.
- சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
- இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
சோழவந்தான்
சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு சோழவந்தான் பிரளயநாதர் கோவிலில் நந்திபெருமானுக்கு 12 திரவிய பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்று, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.சுவாமியும், அம்பாளும் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தை சுற்றிவந்தனர்.சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் சோமவார பிரதோஷ விழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் கோவில் வளாகத்தில் வலம் வந்தனர். சிறப்புஅர்ச்சனை, பூஜைகள், தீபாரதனை நடந்தது பிரதோஷ கமிட்டினர் பிரசாதம் வழங்கினர். இதேபோல் மன்னாடிமங்கலம் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோவில், சோழவந்தான் பேட்டை அருணாசல ஈஸ்வரர் கோவில், திருவலவயநல்லூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், விக்கிரமங்கலம் கோவில்பட்டி மருததோய ஈஸ்வரமுடையார் கோவில் தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதசுவாமி கோவில் உள்பட இப்பகுதியில் உள்ள சிவாலயங்களில் சனி பிரதோஷ விழா நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- உசிலம்பட்டியில் சிறுதானிய விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- இதற்கான ஏற்பாட்டை உசிலம்பட்டி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்கம் செய்திருந்தார்.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் பாரம்பரிய உணவு சிறு தானிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ஜெயராமபாண்டியன் கலந்து கொண்டு பழங்கால சிறுதாணியம் கம்பு கேப்பை, குதிரைவலி, தினை போன்றவற்றை பயன்பாடு பற்றி மாணவர்களுக்கு விளக்கி பேசினார். சிறுதானிய பாரம்பரிய உணவு பேரணியை நகர் மன்ற தலைவி சகுந்தலா கட்டபொம்மன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாட்டை உசிலம்பட்டி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்கம் செய்திருந்தார். முன்னதாக பள்ளியின் தலைமையாசிரியர் பரமசிவம் வரவேற்று பேசினார். இதில் வர்த்தகசங்க நிர்வாகிகள் மாரியப்பன், பொன்ஆதிசேடன், கார்த்திகைசாமி, வேலுச்சாமி, சுரேஷ்பாபு மற்றும் பொதுமக்களும் பேரணியில் கலந்துகொண்டனர்.
- வ.உ.சி. 152-வது பிறந்தநாள் விழாவையொட்டி முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
- முடிவில் முத்து சரவணன் நன்றி கூறினார்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நகர வெள்ளாளர் உறவின்முறை சங்கம் மற்றும் வ.உ.சி. மகளிர் சுய உதவி குழு சார்பாக வ.உ.சி. 152-வது பிறந்தநாள் விழாவையொட்டி முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு சங்கத் தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். புரவலர் மாரியப்பன், மோகன், சந்தன பாண்டி, வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் முருகவேல் வரவேற்றார். வ.உ.சி.படத்திற்கு இணைச்செயலாளர் டாக்டர் பாலகிருஷ்ணன், பி.டி.ஆர் தனவேல், சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், தென் மண்டல அமைப்பு செயலாளர் அன்னலட்சுமி சகிலா, இம்பா மாவட்ட தலைவர் வெங்கடாசலம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செய்தனர். ஆலோசகர் பாபநாசம் கொடியேற்றினார். மக்கள் தொடர்பாளர் நாகமுத்து ராஜா இனிப்பு வழங்கினார்.இதில் தியாகராஜன், சங்கர், ராஜேந்திரன், குப்புசாமி, அச்சுதன், கலியபெருமாள், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் முத்து சரவணன் நன்றி கூறினார்.
- மனுதாரரின் புகார் குறித்து வனத்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
- கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளில் அதிகாரிகளை வரவழைக்க வேண்டும் என்பது நோக்க மல்ல.
மதுரை:
திருச்சியை சேர்ந்த கருப்பையா என்பவர் வனத்துறையில் காவலராக பணியாற்றினார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு பதவி உயர்வு வழங்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரரின் மனுவை பரிசீலித்து, அவருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவு முறையாக நிறைவேற்றப்படவில்லை. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருப்பையா சார்பில் கடந்த 2017-ம் ஆண்டில் மதுரை ஐகோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப் பட்டது.
கடந்த முறை இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரரின் புகார் குறித்து வனத்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும், வனத்துறை செயலாளருமான சுப்ரியா சாகு நேரில் ஆஜரானார்.
பின்னர் நீதிபதி, கல்வித்துறைக்கு அடுத்தபடியாக வனத்துறை சார்ந்த அவமதிப்பு வழக்குகள் அதிகளவில் தாக்கல் செய்யப்படுகின்றன. கோர்ட்டு அவமதிப்பு வழக்குகளில் அதிகாரிகளை வரவழைக்க வேண்டும் என்பது நோக்க மல்ல.
கீழ்நிலை பணியாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே நோக்கம். கோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றுவதற்கு ஏன் தாமதமாகிறது? கோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவுகளை அதிகாரிகள் முறையாக நிறைவேற்றினாலே அவமதிப்பு வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துவிடும் என கருத்து தெரிவித்தார்.
தொடர்ந்து அரசு வக்கீல் மனுதாரர் தொடர்பான கோர்ட்டு உத்தரவு முறையாக நிறைவேற்றப்பட்டுவிட்டது என தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.






