முளைப்பாரி ஊர்வலம்

வ.உ.சி. 152-வது பிறந்தநாள் விழாவையொட்டி முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.முடிவில் முத்து சரவணன் நன்றி கூறினார்.
முளைப்பாரி ஊர்வலம்
Published on

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நகர வெள்ளாளர் உறவின்முறை சங்கம் மற்றும் வ.உ.சி. மகளிர் சுய உதவி குழு சார்பாக வ.உ.சி. 152-வது பிறந்தநாள் விழாவையொட்டி முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு சங்கத் தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். புரவலர் மாரியப்பன், மோகன், சந்தன பாண்டி, வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் முருகவேல் வரவேற்றார். வ.உ.சி.படத்திற்கு இணைச்செயலாளர் டாக்டர் பாலகிருஷ்ணன், பி.டி.ஆர் தனவேல், சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், தென் மண்டல அமைப்பு செயலாளர் அன்னலட்சுமி சகிலா, இம்பா மாவட்ட தலைவர் வெங்கடாசலம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செய்தனர். ஆலோசகர் பாபநாசம் கொடியேற்றினார். மக்கள் தொடர்பாளர் நாகமுத்து ராஜா இனிப்பு வழங்கினார்.இதில் தியாகராஜன், சங்கர், ராஜேந்திரன், குப்புசாமி, அச்சுதன், கலியபெருமாள், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் முத்து சரவணன் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com