என் மலர்tooltip icon

    மதுரை

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக விமான நிறுவனங்களும் புதிய விமான சேவைகளை அதிரடியாக அறிவித்து வருகிறது.
    • ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை:

    தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தற்போது முதலே ரெயில், பஸ் உள்ளிட்டவைகளில் வெளியூர் செல்ல விரும்பும் பயணிகள் முன்பதிவு செய்து வருகிறார்கள்.

    அதேபோல் வெளிநாடுகளில் வசித்து வரும் தமிழகத்தை சேர்ந்த பயணிகள் வசதிக்காக விமான நிறுவனங்களும் புதிய விமான சேவைகளை அதிரடியாக அறிவித்து வருகிறது. அந்த வகையில் பயணிகளின் வசதிக்காக மதுரை, சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் நேரடி மற்றும் தினசரி விமான சேவை வழங்கப்ப டும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

    அதன்படி, வருகிற 22-ந் தேதி முதல் மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கும் தினசரி விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வழங்கவுள்ளது. இதையடுத்து, இந்த வழித்தட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    சிங்கப்பூர்-மதுரை, மதுரை-சிங்கப்பூர் வழித்தடத்திற்கான அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்திற்கான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பு அடைந்துள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு தினசரி விமான சேவை வழங்கப்படும் என்ற அறிவிப்பு, சிங்கப்பூர் வாழ் தமிழர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • தண்டனை காலத்திற்கு பின்னரும் சிறைவாசம் செய்கிற இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யவேண்டும்.
    • சட்டசபையில் பூமிநாதன் எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்துள்ளார்.

    மதுரை

    தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தில் போது மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசி னார். அப்போது அவர் கூறிய தாவது:-

    மனித குலத்திற்கு சட்டம், தண்டனை என்பதெல்லாம் ஒரு சீர்திருத்த நடவடிக்கை தான். அந்த வகையில் சீர்திருத்த நடவடிக்கைக்காக தண்டனைகள் முடிந்த பின்னரும் தண்டனை அனுபவிப்பது என்பது மனித குலத்தில் சகிக்க முடியாத செயலாகும்.

    அந்த வகையில் சிறைச்சாலைகளிலே தண்டனை காலம் முடிந்து 20 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசிகள் குறிப்பாக இஸ்லாமிய சிறைவாசிகள் உள்ளனர்.

    வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் வரிக்கேற்ப தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்ற முதல மைச்சர் அவர்கள் இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கைகளை எடுத்து தண்டனை காலம் முடிந்து சிறையில் வாடும் சிறை வாசிகள் மற்றும் இஸ்லாமிய சிறைவாசிகளை உடன டியாக விடுதலை செய்வ தற்கு தேவையான நடவ டிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வரிகள் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்ய சிறப்பு முகாம் வாரந்தோறும் நடைபெறும்.
    • மேற்கண்ட தகவலை மேயர் இந்திராணி பொன் வசந்த் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாநக ராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் சொத்து வரி, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பராமரிப்பு கட்டணம் ஆகிய வரி வருவாய் இனங்கள் மூலமும் வரியில்லாத வருவாய் இனங்கள் மூலமும் மாநகராட்சியில் பல்வேறு அடிப்படை வசதிகளும், பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளி ட்டவை அனைத்திற்கும் வரி சீராய்வு செய்யப்பட்டு தற்போது வரி வசூல் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    வரி சீராய்வு செய்யப்பட்டதில் ஒரு சில குடியிருப்புகள்இ வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் கதவு எண் மாற்றம், தெருக்களின் பெயர் மாற்றம், வார்டு எண் மாற்றம், பாதாள சாக்கடை, குடிநீர் குழாய்கள் வரி விதிப்பு செய்தல், இரட்டைப் பதிவுகளை நீக்குதல் உள்ளிட்ட சொத்து வரியில் உள்ள அனைத்து குறைக ளையும் நீக்குவதற்கு மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் ஒவ்வொரு புதன்கிழமை தோறும் அனைத்து மண்டலங்களிலும் வரி குறைகள் தொடர்பாக சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

    அதன்படி இன்று (புதன்கிழமை) அனைத்து மண்டலங்களிலும் வரி குறைகள் தொடர்பாக சிறப்பு முகாம்கள் காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெற்றது.

    முகாம்களை மேயர் ஆய்வு செய்வார். இதில் பொதுமக்கள் தங்களது வரியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்கு தொடர்புடைய ஆவ ணங்கள் அடிப்படையில் சரிப்பார்க்கப்பட்டு உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படும்.

    எனவே மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமினை பயன் படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

    மேற்கண்ட தகவலை மேயர் இந்திராணி பொன் வசந்த் தெரிவித்துள்ளார்.

    • போக்குவரத்து சிக்னல்களை அகலப்படுத்த திட்டம் நடந்து வருகிறது.
    • மேலமடை சந்திப்பில் பாலம் அமைகிறது.

    மதுரை

    மதுரை மாநகர் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மதுரை மாநகரில் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக உள்ள போக்குவரத்து நெரி சலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு பல்வேறு முயற்சிகளை போக்குவரத்து போலீ சாரும், மாநகராட்சி மாவட்ட நிர்வாகமும் மேற்கொண்டு வருகின்ற னர்.

    அந்த வகையில் மதுரை யில் போக்குவரத்து நெரி சல் மிக்க ஒன்றாக சிவகங்கை ரோடு உள்ளது. அண்ணா பஸ் நிலைய சந்திப்பில் இருந்து மேல மடை சந்திப்பு வரை உள்ள பகுதிகளில் உள்ள சாலை யில் சாதாரண நேரங்களில் கூட போக்குவரத்து நெரி சல் அதிகமாக காணப்படு கிறது.

    அண்ணா நகர், தெப்பக் குளம், கே.கே.நகர், மாட்டுத் தாவணி போன்ற நகரின் முக்கிய பகுதிகளுக்கான இணைப்பு சாலைகள் சிக்னல்களில் சந்திக் கின்றன. மேலும் அரசு ஆஸ்பத்திரி, கலெக்டர் அலுவலகம், முக்கிய மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், பூங்கா மால்கள், கல்லூரிகள் உள்ளன.

    மதுரை நகரில் இருந்து திருச்சி, சென்னை, தூத்துக் குடி நான்கு வழிச்சாலை, ரிங்ரோடு செல்லும் வாக னங்களும் இந்த சாலையை பயன் படுத்தி வருகின்றனர். அண்ணா பஸ் நிலையம், ஆவின் பாலகம், மேலமடை சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.

    தினசரி பல்லாயிரக் கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன. இதனால் வாக னங்கள் சிக்னல்களில் அதிக நேரம் நீண்ட வரிசை யில் வேண்டி உள்ளது. இந்த நிலையில் இந்த சாலையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்கவும், வாகனங்கள் சிரம மின்றி செல்லவும், இந்த மூன்று சிக்னல் பகுதிகளை அகலப் படுத்தி மேம்படுத்தி நெடுஞ்சாலை துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    இதற்காக நிலம் கையகப் படுத்தும் படுத்தும் பணி களை மாவட்ட நிர்வா கத்தின் சார்பில் வருவாய்த் துறையினர் மேற்கொண்டு வருவதாக தெரிய வருகிறது. அத்துடன் மேலமடை சந்திப்பில் அதிக நெரிசல் இருப்பதால் அங்கு மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அண்ணா பஸ் நிலையம், ஆவின், ேமலமடை ஆகிய 3 சிக்னல்களிலும் 45 முதல் 50 அடி வரை சாலையை அகலப்படுத்தி ரவுண்டானா அமைக்கவும் திட்டமிட்டுள் ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    மதுரை மாநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சிவகங்கை ரோட்டில் உள்ள 3 முக்கிய சிக்னல்களை அகலப்படுத்தி மேம்படுத்த திட்டமிடப் பட்டுள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் சாலையை சீரமைக்கும் பணிகள் தொடங்கும்.

    இதற்காக சுமார் ரூ.160 கோடி திட்ட மதிப்பீட்டில் சாலையை மேம்படுத்தும் பணி மற்றும் பாலம் அமைக்கும் பணி மேற் கொள்ளப்பட உள்ளது. மேலமடை சந்திப்பில் பாண்டிகோவில் ரோடு, ஆவின் ரோட்டை இணைக்கும் வகையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பாலம் அமைக்கப்பட உள்ளது.

    • குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    • பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு ஏற்பட்டது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 72-வது வார்டு பைக்காரா பகுதியில் இ.பி. காலனி, முத்துராமலிங்க புரம், திருவள்ளுவர் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

    மேலும் குடிநீரோடு கழிவுநீர் சேர்ந்து வருவதால் இப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. பல்வேறு தெருக்களில் குடிநீர் சரி வர வருவ தில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறபப்படுகிறது.

    இதுகுறித்து சில நாட்க ளுக்கு முன்பு நடந்த மாநகராட்சி குறைதீர்க்கும் முகாமிலும் புகார் அளித்த தாகவும், ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த நிைலயில் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருப்பரங்குன்றம் மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் மற்றும் அதிகாரிகள் அந்த பகுதிக்கு வந்தனர். அவர்களிடம் தங்களது குறைகளை முறையிட்டு பெண்கள் வாக்குவாதம் செய்தனர்.

    அவர்களை சமாதானப் படுத்திய சுவிதா விமல் உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்தார். அதன் பின்னர் பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    பிரதான சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் மதுரை- திருமங்கலம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மேற்கு மண்ட லத்தில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. மேற்கு மண்டலத்திற்கு என தனியாக பொக்லைன், ஜே.சி.பி. உள்ளிட்ட எந்திரங்கள் மாநகராட்சி யால் வழங்கப்படவில்லை.

    இதனால் வேறு மண்ட லங்களில் உள்ள எந்திரங் களை நாட வேண்டி உள்ளது. அங்கும் பணிகள் இருக்கும்பட்சத்தில் எந்திரங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் கழிவுநீர், மழைநீர் வடிகால் பாதைகளை சீரமைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலியானார்.
    • திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள மேலபட்டியை சேர்ந்தவர் சந்தானம்(வயது45). இவரது மனைவி இறந்து விட்டார். சொக்கநாதன்பட்டியில் 2 மகள்கள் மனைவியின் சகோதரி பராமரிப்பில் இருந்து வருகின்றனர். அவர்களை பார்ப்பதற்காக சந்தானம் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். திருமங்கலம் குதிரைசாரி குளம் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திருச்சியை சேர்ந்த கிருபா ராஜதுரை என்பவர் ஓட்டி வந்த கார் மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் மோதியது. இதில் சந்தானம் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை க்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனு ப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியி லேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொட்டாம்பட்டியில் 4 கடைகளில் அடுத்தடுத்து கொள்ளையடிக்கப்பட்டது.
    • இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது கருங்காலக்குடி கிராமம். இங்குள்ள சிங்கம்புணரி ரோட்டில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் எதிர்புறம் வணிக வளாக கட்டிடம் உள்ளது. இங்கு 5க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

    அதே பகுதியை சேர்ந்த சுபீப் உலாகான் என்பவர் வணிக வளாக கட்டிடத்தில் பலசரக்கு கடை வைத்துள்ளார். நேற்று இரவு இவர் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம கும்பல் இரும்பு கம்பியால் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கடையில் இருந்த ரூ.22 ஆயிரம் ரொக்கம் மற்றும் பலசரக்கு பொருட்களை திருடினர்.

    மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராவை அந்த கும்பல் சேதப்படுத்தியது. தொடர்ந்து அருகில் இருந்த ஜவுளிக்கடையை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளை கும்பல் லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருடியது. அதே வளாகத்தில் மேலும் 2 கடைகளிலும் கொள்ளை கும்பல் புகுந்து பணத்தை திருடிக்கொண்டு தப்பியது. இன்று அதிகாலை கடை திறக்க வந்த சுபீப் உலாகான் கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடி க்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதேபோல் அருகில் இருந்த கடையின் கதவுகளும் உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அவர் கொட்டாம்பட்டி போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விசாரணை நடத்தி தடயங்களை சேகரித்தனர். இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • அன்னை பாத்திமா கல்லூரிக்கு சிறந்த குருதிக் கொடையாளர் விருது வழங்கப்பட்டது.
    • கோப்பையை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் முனியாண்டி பெற்றுக்கொண்டார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் ஆலம் பட்டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டம் சார்பில் அரசு மருத்துவமனைக்கும், மீனாட்சி மிஷன் மருத்துவ மனைக்கும் வருடம் தோறும் ரத்த தானம் வழங்கி வருகிறது. கடந்த 2022-

    23-ம் கல்வியாண்டில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு அன்னை பாத்திமா கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் அதிக அளவு ரத்த தானம் வழங்கி ரத்தம் தேவைப்பட்ட நோயாளி களுக்கு தகுந்த நேரத்தில் உதவி செய்து உயிர் காத்துள்ளனர்.

    அதன் அடிப்படையில் அதிக அளவு ரத்த தானம் செய்த சிறந்த கல்லூரி என்ற கோப்பையை அன்னை பாத்திமா கல்லூரிக்கு வழங்கி கவுரவித்தது. கோப்பையை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் முனியாண்டி பெற்றுக்கொண்டார்.

    சிறந்த முறையில் மாணவர்களுக்கு ரத்த தானம் செய்வதற்கு ஊக்கம் கொடுத்து வழிகாட்டியாக அமைந்த பேராசிரியர் முனியாண்டி, ரத்த தான முகாம் நடத்த உறுதுணையாக இருந்த பேராசிரியர்கள் ராமுத்தாய், சிங்கராஜா, ராஜேஸ்வரி, சகாயவாணி, விக்னேசுவரசீமாட்டி, மணிமேகலை, கதிரேசன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    இதே போல் ரத்த தானம் செய்த மாணவ-மாண வியர்கள் பகவதிக்கண்ணன், நற்குணபாண்டியன், மணிக்குமார், வீரமுருகன், கிருஷ்ணகுமார், உதய பிரகாஷ், சுதாகர், சிந்து பைரவி, ராஜசுபத்தாரா, மாயாண்டி, கார்த்திக், தங்கராஜ், உமாமகேசுவரன், வேல்முருகன் உள்ளிட்டோ ரையும் ரத்த தான முகாமில் கலந்து கொண்டு மாண வர்களை ஊக்கப்படுத்திய மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டு நல பணித்திட்ட ஒருங்கி ணைப்பாளர் பாண்டியையும், கல்லூரி தாளாளர் எம்.எஸ்.ஷா, பொருளாளர் சகிலா ஷா மற்றும் முதல்வர் டாக்டர். அப்துல் காதிர் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • முகம்மது தாஜூதீனின் செல்போனில் பதிவான பல்வேறு தகவல்கள் ஆய்வுக்காக அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையை முன்னிட்டு அந்த பகுதியில் உள்ளூர் போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    மதுரை:

    மதுரையில் இஸ்லாமிய இளைஞரிடம் தேசிய புலனாய்வு (என்.ஐ.ஏ) அதிகாரிகள் சோதனை நடத்தி அவரது செல்போன் மற்றும் சிம் கார்டை பறிமுதல் செய்தனர்.

    நாடு முழுவதும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையாக சந்தேகத்திற்குரிய அமைப்புகள் மற்றும் நபர்களிடம் தேசிய சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள்

    தமிழகத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை, மதுரை, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் அடிக்கடி சோதனை நடத்தி பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள காஜிமார் தெரு பகுதியைச் சேர்ந்த முகம்மது தாஜூதீன் (வயது 26) என்பவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை சந்தேகத்தின்பேரில் அழைத்து சென்று போலீஸ் கிளப்பில் வைத்து விசாரணை நடத்தினர். அவருடைய வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

    கடந்த 2022-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பீகாருக்கு சென்றபோது சந்தேகத்துக்குரிய சிலரை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்த நிலையில் அந்த வழக்கு தொடர்பாக முகமது தாஜூதீனிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    2 மணிநேர விசாரணை முடிவடைந்த நிலையில் அவரிடம் இருந்து செல்போன் மற்றும் சிம்கார்டை பறிமுதல் செய்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.

    முகம்மது தாஜூதீனின் செல்போனில் பதிவான பல்வேறு தகவல்கள் ஆய்வுக்காக அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தாஜூதீன் யார், யாரிடம் அடிக்கடி பேசி உள்ளார் என்ற விபரத்தையும் சேகரிக்க திட்டமிட்டுள்ள தேசிய புலனாய்வு அதிகாரிகள் தேவைப்படும்பட்சத்தில் மீண்டும் தாஜூதீனிடம் விசாரனை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

    இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோதனை தொடர்பாக முகமது தாஜூதீன் கூறியதாவது:-

    நான் பீகாருக்கு செல்லாத நிலையில் பீகார் வழக்கு தொடர்பாக என்னிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி எனது செல்போன், சிம் கார்டை எடுத்துச் சென்றுள்ளனர். இது போன்று இஸ்லாமிய இளைஞர்களை அச்சுறுத்துவதற்காக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையை முன்னிட்டு அந்த பகுதியில் உள்ளூர் போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • வீடு, வீடாக சென்று குறைகேட்க முடிவு செய்துள்ளனர்.
    • கவுன்சிலர் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்க லம் நகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் தலைமை தாங்கினார். துணைத் தலை வர் ஆதவன்அதியமான், சுகாதார அலுவலர் சண் முகவேல் ஆகியோர் முன் னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது வார்டு பகுதிகளில் உள்ள குறைகளை எடுத்து ரைத்தனர்.

    சிறப்பு தீர்மானமாக திருமங்கலம் நகர் பகுதியில் மாதத்தில் 5 வார்டுகள் வீதம் வீடு தேடி சென்று குறைகளை தீர்க்கும் சிறப்பு முகாம்களை நடத்துவது, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை தீவிரப் படுத்துதல், காய்ச்சல் குறித்து தினசரி நகரில் வீடு, வீடாக ஆய்வு செய்வது, பெண்களுக்கு மாதந் தோறும் மகளிர் உரிமைத் தொகை ரூபாய் ஆயிரம் வழங்கிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    இந்த கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர்கள் சின்ன சாமி, வீரக்குமார், திருக்குமார், ஜஸ்டின் திரவி யம், பாண்டி, வினோத், காசிபாண்டி, பெல்ட்முரு கன், சரண்யாரவி, பாண்டி, முத்துக்காமாட்சி, ரம்ஜான் பேகம் சாலிகாஉல்பத், பவுசியா, அமுதா, ராஜகுரு, நகராட்சி மேலாளர் ரத்தின குமார், ஓவர்சீஸ் ராஜா, நகர அமைப்பு அலுவலர் சின்னா, சுகாதார ஆய்வாளர் ஜெயசீலன், வருவாய் ஆய்வாளர் சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பஸ் சக்கரத்தில் மோட்டார் சைக்கிள் சிக்கி பால் வியாபாரி பலியானார்.
    • உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வத்தலகுண்டு சாலையில் உள்ள பெரிய செம்மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் ரூபன் (வயது 18). வீடுகள், கடைகளுக்கு பால் விநியோகம் செய்து வந்தார். இன்று காலை பால் விநியோகம் செய்வ தற்காக மோட்டார் சைக்கி ளில் சென்றார்.

    அதே வேளையில் கொடைக்கானலை சேர்ந்த பாலமுருகன் மகன் விஷ்ணு (35) பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக விஷ்ணு ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், ரூபன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் ரூபனின் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்து எதிரே வந்த அரசு பஸ் சக்கரத்திற்குள் சிக்கியது. இதனால் படுகாயமடைந்த ரூபனை அங்கிருந்தவர்கள் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச் சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த விஷ்ணுவும் படுகாய மடைந்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட சைக்கிள் போட்டிகள் நடக்க இருக்கிறது.
    • மதுரையில் வருகிற 14-ந்தேதி நடக்கிறது.

    மதுரை

    முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளை யொட்டி மாணவ-மாணவி களுக்கான மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகள் வருகிற 14-ந்தேதி எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

    13,15,17 வயதிற்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே போட்டிகள் நடத்தப்படும். போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ -மாணவிகள் தங்கள் சொந்த சைக்கிள் களை கொண்டு வர வேண்டும். இந்தியாவில் தயாரிக் கப்பட்ட சாதாரண கைப் பிடி கொண்ட சைக்கிள் களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். கியர் சைக்கிள், ரேஸ் சைக்கிள்கள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படாது.

    மாணவ-மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியர் ஒப்புதல் பெற்ற வயது சான்றிதழ்கள், ஆதார் அட்டை, பள்ளி அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவ-மாணவிகள் வருகிற 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங் கில் நேரில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் ரொக்கப்பரிசும், 4 முதல் 10 வரை இடம் பிடிப்ப வர்களுக்கு ரூ.250 ஊக்கப் பரிசும் வழங்கப்படும்.

    இந்த தகவலை மதுரை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ×