search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை சரி செய்ய கோரிக்கை
    X

    திருப்பரங்குன்றம் மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.

    குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை சரி செய்ய கோரிக்கை

    • குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    • பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு ஏற்பட்டது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 72-வது வார்டு பைக்காரா பகுதியில் இ.பி. காலனி, முத்துராமலிங்க புரம், திருவள்ளுவர் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

    மேலும் குடிநீரோடு கழிவுநீர் சேர்ந்து வருவதால் இப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. பல்வேறு தெருக்களில் குடிநீர் சரி வர வருவ தில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறபப்படுகிறது.

    இதுகுறித்து சில நாட்க ளுக்கு முன்பு நடந்த மாநகராட்சி குறைதீர்க்கும் முகாமிலும் புகார் அளித்த தாகவும், ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த நிைலயில் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருப்பரங்குன்றம் மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் மற்றும் அதிகாரிகள் அந்த பகுதிக்கு வந்தனர். அவர்களிடம் தங்களது குறைகளை முறையிட்டு பெண்கள் வாக்குவாதம் செய்தனர்.

    அவர்களை சமாதானப் படுத்திய சுவிதா விமல் உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்தார். அதன் பின்னர் பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    பிரதான சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் மதுரை- திருமங்கலம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மேற்கு மண்ட லத்தில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. மேற்கு மண்டலத்திற்கு என தனியாக பொக்லைன், ஜே.சி.பி. உள்ளிட்ட எந்திரங்கள் மாநகராட்சி யால் வழங்கப்படவில்லை.

    இதனால் வேறு மண்ட லங்களில் உள்ள எந்திரங் களை நாட வேண்டி உள்ளது. அங்கும் பணிகள் இருக்கும்பட்சத்தில் எந்திரங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் கழிவுநீர், மழைநீர் வடிகால் பாதைகளை சீரமைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×