search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரிகள் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்ய சிறப்பு முகாம்
    X

    வரிகள் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்ய சிறப்பு முகாம்

    • வரிகள் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்ய சிறப்பு முகாம் வாரந்தோறும் நடைபெறும்.
    • மேற்கண்ட தகவலை மேயர் இந்திராணி பொன் வசந்த் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாநக ராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் சொத்து வரி, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பராமரிப்பு கட்டணம் ஆகிய வரி வருவாய் இனங்கள் மூலமும் வரியில்லாத வருவாய் இனங்கள் மூலமும் மாநகராட்சியில் பல்வேறு அடிப்படை வசதிகளும், பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளி ட்டவை அனைத்திற்கும் வரி சீராய்வு செய்யப்பட்டு தற்போது வரி வசூல் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    வரி சீராய்வு செய்யப்பட்டதில் ஒரு சில குடியிருப்புகள்இ வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் கதவு எண் மாற்றம், தெருக்களின் பெயர் மாற்றம், வார்டு எண் மாற்றம், பாதாள சாக்கடை, குடிநீர் குழாய்கள் வரி விதிப்பு செய்தல், இரட்டைப் பதிவுகளை நீக்குதல் உள்ளிட்ட சொத்து வரியில் உள்ள அனைத்து குறைக ளையும் நீக்குவதற்கு மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் ஒவ்வொரு புதன்கிழமை தோறும் அனைத்து மண்டலங்களிலும் வரி குறைகள் தொடர்பாக சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

    அதன்படி இன்று (புதன்கிழமை) அனைத்து மண்டலங்களிலும் வரி குறைகள் தொடர்பாக சிறப்பு முகாம்கள் காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெற்றது.

    முகாம்களை மேயர் ஆய்வு செய்வார். இதில் பொதுமக்கள் தங்களது வரியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்கு தொடர்புடைய ஆவ ணங்கள் அடிப்படையில் சரிப்பார்க்கப்பட்டு உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படும்.

    எனவே மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமினை பயன் படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

    மேற்கண்ட தகவலை மேயர் இந்திராணி பொன் வசந்த் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×