என் மலர்
மதுரை
- சிகர நிகழ்ச்சியாக கார்த்திகை தேரோட்டம் வருகிற 26-ந்தேதி காலையில் நடைபெறுகிறது.
- விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம்:
முருகப்பெருமானின் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா பிரசித்தி பெற்றது. கார்த்திகை மாதந்தோறும் 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக காலை உத்தமர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு பால், பன்னீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு காலை 7:15 மணிக்கு கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான கொடியேற்றம் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது.
தொடர்ந்து தங்கமுலாம் பூசப்பட்ட கொடிக்கம்பத்தில் சந்தனம், பால், தயிர் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தர்ப்பை புல், மா இலை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீப ஆராதனைகள் நடைபெற்றன.
விழாவினை முன்னிட்டு நாள்தோறும் காலையில் தங்க சப்பரத்திலும் மாலையில் தங்கமயில் வாகனம், அன்னவாகனம், பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகம் 25-ந்தேதி நடைபெற்றது. இதில் சுப்பிரமணிய சுவாமிக்கு நவரத்தினங்கள் பதித்த கிரீடம் செங்கோல் வழங்கி சிறப்பு ஆராதனை நடைபெறும். சிகர நிகழ்ச்சியாக கார்த்திகை தேரோட்டம் வருகிற 26-ந் தேதி காலையில் நடைபெறுகிறது. அன்று மாலையில் கோவிலில் பாலதீபம் ஏற்றப்பட்டு மலையில் மகாதீபம் ஏற்றப்படும்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடு திருப்பரங்குன்றம்.
- அம்மனிடம் சக்தி வேல் பெறும் வேல் வாங்குதல் நிகழ்ச்சி.
திருப்பரங்குன்றம்:
முருகப்பெருமமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடாக போற்றப்படும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கந்தசஷ்டி விழாவும் ஒன்று. ஏழு நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 13-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழந்தை பாக்கியம், திருமணம் உள் ளிட்ட பல்வேறு வேண்டுதல்களுக்காக காப்பு கட்டி கோவில் வளாகத்திலேயே தங்கி விரதம் இருந்து வருகின்றனர். விழாவினை முன்னிட்டு தினமும் காலை 11 மணி, மாலை 5.30 மணி என இருவேளைகளிலும் சண்முகா அர்ச்சனை நடைபெற்று வருகிறது.
மேலும் உற்சவர் சுப்பி ரமணிய சுவாமி தெய்வா னையுடன் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி கோவில் திருவாச்சி மண்டபத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக இன்று மாலை 6.30 மணி அளவில் சூரனை வதம் செய்ய சுப்பிரமணிய சுவாமி அம்மனிடம் சக்தி வேல் பெறும் வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தொடர்ந்து நாளை மாலை 6.30 மணி அளவில் கோவில் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னி லையில் சூரசம்ஹார லீலை நடைபெறும். விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக நாளை மறுதினம் 19-ந்தேதி காலையில் தேரோட்டமும், மாலையில் பாவாடை தரிசனமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.
- கல்லூரி மாணவி உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை கரிமேடு கண்மாய் கரை ஏ.கே.கோபாலன் 2-வது தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ்பாண்டி. இவரது மகள் இலக்கியா (வயது22). மதுரையில் உள்ள கல்லூரியில் எம்.காம் 2-ம் ஆண்டு படித்து வந்த
இவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிரியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பொன்ராஜ் பாண்டி கரிமேடு போலீசில் புகார் கொடுத்தார். போலீ சார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இலக்கியா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வில்லாபுரம் பழனிமுத்து நகர் மணிகண்டன் தெருவை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் சரவணவிக்னேஷ்(37). பெங்களூரில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வந்த இவர் தீபாவளிக்கு ஊருக்கு வந்தார். கடந்த சில நாட்க ளாக அதிக பணிச்சுமை இருப்பதாக சரவண விக்னேஷ் குடும்பத்தி னரிடம் கூறி வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று தனது அறையில் சரவண விக்னேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை மேலவாசல் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சித்திரக்காள்(80). சம்பவத்தன்று விரக்தியில் இருந்த இவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பசுமலை ஜோன்ஸ்புரம் முதல் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி(வயது42). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கத்தால் மனைவியுடன் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் குழந்தை களுடன் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதில் விரக்தியடைந்த தண்ட பாணி ஏற்கனவே தற்கொலைக்கு முயன்று உயிர் பிழைத்ததாக தெரிகிறது. ஆனாலும் வாழ்க்கையில் வெறுப்ப டைந்த நிலையில் சம்பவத் தன்று தண்டபாணி மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தண்ட பாணி இறந்தார். திருப்ப ரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரை கோவில்களில் சரண கோஷத்துடன் அய்யப்ப பக்தர்கள் விரதம் தொடங்கினர்.
- குருநாதர்கள் மூலம் துளசிமாலை அணிந்து கொண்டனர்.
மதுரை
கார்த்திகை மாதத்தில் அய்யப்பன் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருப்பார்கள். அய்யப்ப னுக்கு உகந்த மாதமான கார்த்திகை மாதத்தின் முதல் நாளான இன்று தமிழகம் முழுவதும் திர ளான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
மதுரை மேலமாசி வீதியில் உள்ள ஆனந்த அய்யப்பன் கோவில் நடை இன்று அதிகாலை திறக்கப் பட்டு அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. இதில் நூற்றுக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்களுக்கு கோவில் தலைமை குருக்கள் துளசி மாலை அணிவித்தார். மாலை அணிந்து விரதம் மேற்கொள்ள கோவிலுக்கு திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இதேபோல் புதூரில் உள்ள அய்யப்பன் கோவி லிலும் திரளான பக்தர்கள் குவிந்து மாலை அணிந்து விரதம் மேற்கொண்டனர். காளவாசல் அய்யப்பன் கோவில், ரெயில்வே காலனியில் உள்ள அய்யப்பன் கோவில், விளாச் சேரியில் உள்ள அய்யப்பன் கோவிலிலும் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அழகர்மலை யில் உள்ள நூபுர கங்கை தீர்த்தத்தில் புனித நீராடிய பக்தர்கள் பழமு திர்ச்சோ லை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து மாலை அணிந்து கொண்ட னர். திருப்பரங்குன்றம் முருகன் கோவில், நேதாஜி ரோட்டில் உள்ள தண்ட பாணி முருகன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் அய்யப்ப பக்தர்கள் சரண கோஷம் முழங்க மாலை அணிந்து கொண்டனர். சிலர் குரு நாதர்கள் மூலம் தங்கள் வீடுகளிலேயே மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
முன்னதாக நேற்று மதுரையில் உள்ள கடை வீதிகளில் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் காவி, கருப்பு, நீல நிற ஆடைகள், துளசி மாலை வாங்க குவிந்தனர்.
- சுயதொழில் பயிற்சி தொடக்க விழா மதுரை எஸ்.எஸ்.காலனி வடக்கு வாசல் பகுதியில் உள்ள பெட்கிராட் அலுவலகத்தில் நடந்தது.
- நிர்வாகிகள் கிருஷ்ணவேணி, சாராள்ரூபி, மார்ட் டின் லூதர் கிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மதுரை
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், அசஞ்சர் மற்றும் பெட்கிராட் நிறுவனம் இணைந்து நடத்தும் 26 நாட்கள் இலவச கெமிக்கல் இல்லாத சோப்பு, ஹேண்ட் வாஷ், பாடி வாஷ், தயாரிக்கும் இலவச பயிற்சி தொடக்க விழா மதுரை எஸ்.எஸ்.காலனி வடக்கு வாசல் பகுதியில் உள்ள பெட்கிராட் அலுவலகத்தில் நிர்வாக இயக்குநர் சுப்புராம் தலைமையில் நடந்தது.
நிர்வாகிகள் கிருஷ்ண வேணி, சாராள்ரூபி, மார்ட் டின் லூதர் கிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மதுரை மாவட்ட தாட்கோ மேலா ளர் திருநாவுக்கரசு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசு கையில், மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கி தொழில் முனைவராக மாறுவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங் களை செயல்படுத்தி வரு கிறது. 35 சதவீதம் மானி யமும் வழங்கப்படுகிறது. அனைத்து சலுகைகளும் பெற ஆன்லைன் மூலமாக செயல்படுத்தலாம் என்றார்.
தாசில்தார் கோபி பேசு கையில், பயிற்சி பெறும் பயனாளிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அவசியம், குறித்த நேரத்தில் வருகை தந்து சிறப்பு சேர்க்க வேண்டும் என்றார்.
பஞ்சாப் நேஷனல் வங்கி மேலாளர் தங்கமலர் பேசுகையில், தொழில் தொடங்க மானியத்துடன் வங்கி கடன் பெற அனை வரும் தயாராக வேண்டும். வங்கியின் வாயிலாக அனைத்து உதவிகளும் செய்ய தயாராக உள்ளோம் என்றார்.
இ.டி.ஐ.ஐ முதுநிலை திட்ட அலுவலர் கவிதா பலராமன் பேசுகையில், பயிற்சி மேற்கொள்ளும் பெண்கள் அனைவரும் தொழில் முனைவராக மாற வேண்டும் என்பதை மட்டும நோக்கமாக வைத்து பயிற்சியை தொடங்குங்கள் என்றார். பெட்கிராட் தாளாளர் சுப்புராம் பேசுகையில், பெண்களின் முன்னேற்றமே ஒவ்வொரு இல்ல ங்களின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் இந்த நாட்டினுடைய முன்னேற்றம் என்றார். முடிவில் பயிற்சியாளர் ஐஸ்வர்யா நன்றி கூறினார்.
- திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவிற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
- இந்த தகவலை தெற்கு ரெயில்வே மதுரை கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
மதுரை
திருச்செந்தூரில் நடை பெறும் கந்த சஷ்டி விழாவிற்கு லட்சக் கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம். எனவே பயணிகளின் வசதிக்காக சென்னை-திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் -தாம்பரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி சென்னை-திருநெல்வேலி சிறப்பு ரெயில் (06001) சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 17 இன்று இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு மறு நாள் மதியம் 12.45 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். மறு மார்க்கத்தில் திருச்செந்தூர்-தாம்பரம் சிறப்பு ரெயில் (06002) திருச்செந்தூரில் இருந்து இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.45 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
இந்த ரெயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்ப கோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக் கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரெயில் நிலை யங்களில் நின்று செல்லும்.
திருச்செந்தூர்-தாம்ப ரம் சிறப்பு ரெயில் கூடுத லாக ஆறுமுகநேரி, நாச ரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் ஆகிய ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும். இந்த ரெயில்களில் ஒரு குளிர் சாதன 2 அடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர் சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டி, 8 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு பொதுப்பட்டிகள், 2 மாற்றுத் திறனாளி களுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்.
இந்த தகவலை தெற்கு ரெயில்வே மதுரை கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
- ராம்குமாரை போன்று மார்க்கெட் பகுதியில் மேலும் சிலரும் மது விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
- வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரவை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாடிப்பட்டி:
மதுரை செல்லூர் தத்தனேரி மேலகைலாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி மகன் ராம் குமார் (வயது 25). திருமணமாகாத இவர் காலி மது பாட்டில்கள் சேகரித்தல் மற்றும் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். அது மட்டுமின்றி பரவை காய்கறி மார்க்கெட் பகுதியில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மது விற்பனையும் செய்து வந்ததாக கூறப்படுகிறது. தினமும் காலையில் வீட்டில் இருந்து புறப்பட்டு செல்லும் அவர் இரவில் வீடு திரும்புவார்.
இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் பெற்றோரிடம் கூறிவிட்டு சென்ற ராம்குமார் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து தனது உறவினர்கள் சிலரை அழைத்துக்கொண்டு முத்துச்சாமி மகனை பல்வேறு இடங்களில் தேடியும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே இன்று அதிகாலை மதுரையை அடுத்த பரவை மார்க்கெட் எதிர்புறம் உள்ள மீனாட்சி நகர் 5-வது குறுக்குத்தெருவில் தலை மற்றும் முகத்தில் சரமாரியான வெட்டுக்காயங்களுடன் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்ததை அப்பகுதியினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் இதுகுறித்து சமயநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் பரவை கிராம நிர்வாக அலுவலரும் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் கொலையுண்டவர் செல்லூர் தத்தனேரியை சேர்ந்த ராம்குமார் என்பது தெரியவந்தது.
ராம்குமாரை போன்று அந்த மார்க்கெட் பகுதியில் மேலும் சிலரும் மது விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ராம்குமார் கொலை செய்யப்பட்டாரா? அல்லது பணத்தகராறில் கொலை சம்பவம் நடந்ததா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
நள்ளிரவில் நடந்த இந்த கொலை சம்பவத்தில் துப்பு துலக்கும் வகையில் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையிலும் விசாரணை நடத்தி வரும் சமயநல்லூர் போலீசார் கொலையாளிகளை தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள். வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரவை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அலங்காநல்லூரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து, ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய குமார் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோ சனை வழங்கினார்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் கருப்பையா, மாணிக்கம், சரவணன், மேற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், விவசாய அணி மாவட்ட செயலாளர் ராம்குமார், நகர் செயலாளர்கள் அழகு ராஜ், குமார், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணை செய லாளர் ஜெயச்சந்திர மணியன், பாசறை மாவட்ட இணை செயலாளர் உமேஷ் சந்தர், ஒன்றிய கவுன்சிலர் ரேவதி, பேரூராட்சி கவுன்சிலர் நாட்டாமை சுந்தர், நிர்வாகிகள் குமார், மனோகரன், முத்துகிருஷ்ணன், மதன், ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மதுரைக்கு செல்லும் தனியார் பஸ்களில் ஆபத்தை உணராமல் பயணிகள் படியில் தொங்குகின்றனர்.
- தனியார் பஸ்களில் தொங்கி செல்லும் பயணிகளை போலீசார் கண்காணித்து இறக்கி விட வேண்டும்.
மேலூர்
மேலூரில் இருந்து மதுரை செல்லும் தனியார் பேருந்துகளில் காலை 8 மணி முதல் 9 மணி வரை பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் வேலைக்கு செல்பவர்கள் என அதிக அளவில் செல்கின்றனர்.
காரைக்குடி, கல்லல், பொன்னமராவதி போன்ற வெளியூரில் இருந்து வரும் பஸ்கள் மேலூர் பஸ் நிலை யம் முன்பு நிறுத்தி மதுரை செல்லும் பயணிகளை ஏற்றி செல்கின்றனர். வெளி யூர்களிலிருந்து வரும் பயணி கள் எண்ணிக்கை காலை நேரங்களில் அதிக அளவு உள்ளது.
மேலும் இங்கிருந்து ஏறும் பயணிகளும் பஸ்சில் உள்ளே செல்ல முடியாமல் இரு புறமும் உள்ள படிக்கட்டுகளில் தொங்கி செல்கின்றனர். மேலூர் மதுரை நான்கு வழிச்சாலை என்பதால் அதிவேகமாக வாகனங்கள் செல்வதாலும் விரைவாக மதுரைக்குச் தனியார் பஸ்கள் செல்கிறது. இதனால் பயணிகள் பயணி நேரம் மிக குறைவாக இருப்பதால் நாம் விரைந்து சென்று விட முடியும் என்று ஆபத்தை உணராமல் படிக்கட்டுகளில் தொங்கியபடியே செல்கின்ற னர்.
எனவே மேலூர் பஸ் நிலையத்தில் படிக்கட்டு களில் தனியார் பேருந்து களில் தொங்கி செல்லும் பயணிகளை போலீசார் கண்காணித்து இறக்கி விட வேண்டும். குறிப்பாக காலை 8 மணி முதல் 9 மணி வரை இந்த அவல நிலை நீடிக்கிறது. மீறி படிக்கட்டு களில் தொங்கி செல்லும் பயணிகளை வசூலை கருத்தில் கொண்டு ஏற்றும் தனியார் பேருந்துகள் மீது போலீசார் உரிய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் விலைமதிப்பற்ற பயணி களின் உயிரை காப்பாற்ற முடியும். மேலூர் போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?
- மக்களாட்சியின் ஜனநாயக விழுமியங்களை மீறும் உரிமை யாருக்கும் இல்லை.
- ரெயில்வே இதற்கு பொறுப்பேற்று விளக்கமளிக்க வேண்டும் என வெங்கடேசன் எம்.பி. பதிவிட்டுள்ளார்.
மதுரை:
ரெயில்வே அதிகாரியான ரூப் நாராயண் ஷங்கர் நேற்று மதுரையில் இருந்து வெளியூர் செல்ல பயணம் மேற்கொண்டார். அப்போது
அவர பயணிக்க வேண்டிய ரெயில் ஐந்தாம் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தது.
அதிகாரி என்பதால், ரெயில்வே நிர்வாகம் 4ம் பிளாட்பாரத்தில் அவர் பயணிக்க தனி ரெயிலை இயக்கியது. அத்துடன், 5வது பிளாட்பாரத்தில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பயணிகளை 5வது பிளாட்பாரத்துக்கு அலைக்கழித்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து ரெயில்வே நிர்வாகம் விளக்கம் உரிய அளிக்க வேண்டும் என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில், ஒரு அதிகாரி பயணிக்க தனி ரயில். அவர் அடுத்த நடைமேடைக்கு ஏறி இறங்காமல் வசதியாக பயணிக்க 1000 பயணிகளை அடுத்த நடைமேடைக்கு அலைகழிக்க வைத்த கொடுமை.
மக்களாட்சியின் ஜனநாயக விழுமியங்களை மீறும் உரிமை யாருக்கும் இல்லை. ரெயில்வே இதற்கு பொறுப்பேற்று விளக்கமளிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
A separate train for an official.The horror of making 1000 passengers run around so he can travel in comfort without going to the nextplatform No one has the right to violate the democratic values of people's rule. @GSMRailway should take responsibility and offer explanation pic.twitter.com/GGFRniziPJ
— Su Venkatesan MP (@SuVe4Madurai) November 17, 2023
- வடக்கு ரெயில்வேயில் மேம்பாட்டு பணி நடந்து வருகிறது.
- ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் டெல்லி செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்படும்.
மதுரை
ரெயில்களை பாதுகாப்பாக இயக்க, வடக்கு ரெயில்வே ஆக்ரா கோட்டத்தில் உள்ள மதுரா ரெயில் நிலையம் மற்றும் மதுரா - பல்வால் ரெயில் நிலைய பிரிவில் ரெயில் பாதை மற்றும் சிக்னல் மேம்பாட்டு பணிகள் நடைபெற இருக்கிறது.
இதன் காரணமாக வருகிற ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தென் மாவட்டங்களில் இருந்து டெல்லி செல்லும் ரெயில் கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. அதன்படி ஜனவரி 10, 12, 17, 19, 24, 26, 31 பிப்ரவரி 2 ஆகிய நாட்களில் கன்னியா குமரியில் இருந்து புறப்பட வேண்டிய கன்னியாகுமரி -டெல்லி நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12641), ஜனவரி 14, 16, 21, 23, 28, 30 பிப்ரவரி 4 ஆகிய நாட்களில் மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை-டெல்லி நிஜா முதீன் எக்ஸ்பிரஸ் (12651), டிசம்பர் 6,
ஜனவரி 10, 14, 17, 21, 24, 28, 31 ஆகிய நாட்களில் மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை - சண்டிகர் எக்ஸ்பிரஸ் (12687), ஜனவரி 8,15, 22, 29 ஆகிய நாட்களில் திருநெல்வேலியில் இருந்து புறப்பட வேண்டிய திரு நெல்வேலி-ஸ்ரீ வைஷ்ண தேவி கட்ரா எக்ஸ்பிரஸ் (16787) ஆகியவை முழுமை யாக ரத்து செய்யப்படுகிறது.
மறுமார்க்கத்தில் ஜனவரி 13, 15, 20, 22, 27, 29, பிப்ரவரி 3, 5 ஆகிய நாட்களில் டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய டெல்லி நிஜாமுதீன் - கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12642), ஜனவரி 16, 18, 23, 25, 30 பிப்ரவரி 1, 6 ஆகிய நாட்களில் டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய டெல்லி நிஜாமுதீன் - மதுரை எக்ஸ்பிரஸ் (12652), டிசம்பர் 11, ஜனவரி 15, 19, 22, 26, 29, பிப்ரவரி 2, 5 ஆகிய நாட்களில் சண்டிகரில் இருந்து புறப்பட வேண்டிய சண்டிகர் - மதுரை எக்ஸ்பிரஸ் (12688), ஜனவரி 11, 18, 25, பிப்ரவரி 1 ஆகிய நாட்களில் ஸ்ரீ வைஷ்ண தேவி கட்ராவில் இருந்து புறப்பட வேண்டிய ஸ்ரீ வைஷ்ண தேவி கட்ரா - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் (16788) ஆகியவை முழுமை யாக ரத்து செய்யப்படுகிறது.
இத்தகவலை தென்னக ரெயில்வே மதுரை கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
- உணவுப்பொருட்கள் தயாரிக்க இலவச தொழில் பயிற்சி வழங்கப்படுகிறது என்று பெட்கிராட் தாளாளர் சுப்புராம் தெரிவித்தார்.
- 88384-31943 என்ற செல்போனில் தொடர்பு கொள்ளலாம்.
மதுரை
மதுரை பெட்கிராட் தொண்டு நிறுவனம் மற்றும் சுயதொழில் வேலை வாய்ப்பு நிறுவன தாளாளர் சுப்புராம் கூறியதாவது:-
இந்திய தொழில் முனை வோர் மேம்பாட்டு நிறு வனம், அசெஞ்சர் நிறுவனம் மற்றும் சுபம் அறக்கட்டளை ஆகியவை இணைந்து மதுரை நாராயணபுரத்தில் இலவச தொழிற்பயிற்சி திட்டத்தை தொடங்கி யுள்ளது.
இன்று (வியாழக்கிழமை) முதல் அடுத்த மாதம் 19-ந் தேதி வரை 34 நாட்களுக்கு இந்த இலவச தொழில் பயிற்சி நடைபெறுகிறது.
இந்த பயிற்சியில் காய்கறி, பழங்கள் பதப்படுத்துதல், உலர் பழங்கள் தயாரித்தல், சிறுதானிய உணவு பொருட்கள் தயாரித்தல், மசாலா பொருட்கள் தயாரித்தல் ஆகியவை பயிற்சிகளாக வழங்கப்படு கின்றன. மேலும் இந்த உணவு பொருள்கள் தயாரிப்பது தொடர்பாக நேரடி செயல்முறை விளக்கங்களும் செய்து காண்பிக்கப்படுகிறது.
இது தவிர சொந்தமாக தொழில் தொடங்க தேவை யான ஆலோசனை கள், வங்கி கடன் உதவி மற்றும் தயாரிக்கும் பொருள்களை சந்தைப்படுத்துவதற்கு தேவையான முன் ஆலோ சனைகள் உள்ளிட்ட அனைத்தும் செய்து தரப்படு கிறது. இந்த இலவச பயிற்சி யில் பங்குபெறும் நபர்க ளுக்கு எப்.எஸ்.ஏ.ஐ சான்றி தழ் மற்றும் எம்.எஸ்.எம்.இ. சான்றிதழ்கள் பெற்று தரப் படுகிறது.
எனவே விருப்பமுள்ள வர்கள் மதுரை, எஸ்.எஸ்.காலனி,வடக்குவாசல் முகவரியில் உள்ள சுபம் அறக்கட்டளை அலுவல கத்துக்கு நேரில் சென்று முன்பதிவு செய்து கொள்ள லாம்.
மேலும் 88384-31943 என்ற செல்போனில் தொடர்பு கொண்டு சுபம் அறக்கட்டளை மார்ட்டின் லூதர் கிங்கிடம் முழு விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறி னார்.






