search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரைக்கு செல்லும் தனியார் பேருந்துகளில்  ஆபத்தை உணராமல் படியில் தொங்கும் மாணவர்கள்
    X

    மதுரைக்கு செல்லும் தனியார் பேருந்துகளில் ஆபத்தை உணராமல் படியில் தொங்கும் மாணவர்கள்

    • மதுரைக்கு செல்லும் தனியார் பஸ்களில் ஆபத்தை உணராமல் பயணிகள் படியில் தொங்குகின்றனர்.
    • தனியார் பஸ்களில் தொங்கி செல்லும் பயணிகளை போலீசார் கண்காணித்து இறக்கி விட வேண்டும்.

    மேலூர்

    மேலூரில் இருந்து மதுரை செல்லும் தனியார் பேருந்துகளில் காலை 8 மணி முதல் 9 மணி வரை பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் வேலைக்கு செல்பவர்கள் என அதிக அளவில் செல்கின்றனர்.

    காரைக்குடி, கல்லல், பொன்னமராவதி போன்ற வெளியூரில் இருந்து வரும் பஸ்கள் மேலூர் பஸ் நிலை யம் முன்பு நிறுத்தி மதுரை செல்லும் பயணிகளை ஏற்றி செல்கின்றனர். வெளி யூர்களிலிருந்து வரும் பயணி கள் எண்ணிக்கை காலை நேரங்களில் அதிக அளவு உள்ளது.

    மேலும் இங்கிருந்து ஏறும் பயணிகளும் பஸ்சில் உள்ளே செல்ல முடியாமல் இரு புறமும் உள்ள படிக்கட்டுகளில் தொங்கி செல்கின்றனர். மேலூர் மதுரை நான்கு வழிச்சாலை என்பதால் அதிவேகமாக வாகனங்கள் செல்வதாலும் விரைவாக மதுரைக்குச் தனியார் பஸ்கள் செல்கிறது. இதனால் பயணிகள் பயணி நேரம் மிக குறைவாக இருப்பதால் நாம் விரைந்து சென்று விட முடியும் என்று ஆபத்தை உணராமல் படிக்கட்டுகளில் தொங்கியபடியே செல்கின்ற னர்.

    எனவே மேலூர் பஸ் நிலையத்தில் படிக்கட்டு களில் தனியார் பேருந்து களில் தொங்கி செல்லும் பயணிகளை போலீசார் கண்காணித்து இறக்கி விட வேண்டும். குறிப்பாக காலை 8 மணி முதல் 9 மணி வரை இந்த அவல நிலை நீடிக்கிறது. மீறி படிக்கட்டு களில் தொங்கி செல்லும் பயணிகளை வசூலை கருத்தில் கொண்டு ஏற்றும் தனியார் பேருந்துகள் மீது போலீசார் உரிய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் விலைமதிப்பற்ற பயணி களின் உயிரை காப்பாற்ற முடியும். மேலூர் போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?

    Next Story
    ×