என் மலர்tooltip icon

    மதுரை

    • ேசாழவந்தானில் வருகிற 21-ந்தேதி மின்தடை ஏற்படும்.
    • இந்த தகவலை சமயநல்லூர் மின்செயற் பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 21-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) நடைபெற இருப்ப தால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சோழவந்தான், தச்சம்பத்து வாட்டர் பம்பிங் ஸ்டேசன், இரும்பாடி, மீனாட்சி நகர், ஜெயராம் டெக்ஸ், விஜய லட்சுமி பேக்டரி, மேலக்கால், தாராப்பட்டி, கச்சிராயி ருப்பு, கீழமட்டையான், மேலமட்டையான், நாராய ணபுரம், தேனூர், திருவேட கம், தச்சம்பத்து, மேலக்கால் பாலம், தென்கரை, ஊத்துக் குழி, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, குருவித் துறை, சித்தாதிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    இந்த தகவலை சமயநல்லூர் மின்செயற் பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்துள்ளார்.

    • எண்ணை செக்கு உரிமையாளர் வீட்டில் நகை-பணம் திருடப்பட்டது.
    • கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப் பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர்-திருவாதவூர் சாலையில் உள்ள மில்கேட் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு எதிர்புறம் உள்ள வீட்டில் வசித்து வருபவர் மணி, எண்ணை செக்கு நடத்தி வருகிறார். இவரது மனைவி ஆனந்தி. இவர்கள் நேற்று குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தனர்.

    இன்று அதிகாலை மீண்டும் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டி ருந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட் கள் சிதறி கிடந்தன.

    உள்ளே பார்த்தபோது பீரோவில் இருந்த 4 பவுன் நகைகள்,ரூ.50 ஆயிரம், மேலும் சில பொருட்கள் திருடப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து மேலூர் போலீஸ் நிலை யத்திற்கு மணி தகவல் கொடுத்தார். அதன்பேரில் மேலூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி, தனிப்பிரிவு ஏட்டு தினேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசா ரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப் பட்டு தடயங்கள் சேகரிக்கப் பட்டன.

    இங்கு வந்த மோப்பநாய் பெரியார் கால்வாய் பகுதி வரை ஓடி நின்றது. அந்த பகுதியில் இருந்த கண் காணிப்பு காமிரா பதிவு களை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அதில் வீட்டிற் குள் மர்மநபர்கள் செல்வது மற்றும் பொருட்க ளுடன் திரும்பி வரும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படை யில் போலீசார் வழக்குப பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி தேரோட்டம் நடந்தது.
    • பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து தரிசனம் செய்தனர்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 13-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹார லீலை நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி சிவப்பு அலங்கா ரத்தில் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு எழுந்தரு ளினார்.

    அங்கு அம்மனிடம் இருந்து பெற்ற சக்திவேல் கொண்டு சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார லீலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட னர். விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக கந்த சஷ்டி தேரோட்டம் இன்று நடைபெற்றது.

    விழாவினை முன்னிட்டு உற்சவர் சன்னதியில் சுப்ரமணிய சுவாமி-தெய் வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடை பெற்றது. பின்னர் தங்க மயில் வாகனத்தில் கோவில் வாசலில் உள்ள சிறிய சட்டத் தேரில் எழுந்த ருளினர்.

    இதில் பக்தர்கள் அரோ கரா கோஷத்துடன் ரத வீதிகள், கிரிவல பாதையில் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து இன்று மாலை பாவாடை தரிசன மும், அதனைத் தொடர்ந்து மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவச அலங்காரமும் நடைபெறுகிறது.

    மேலும் மூலஸ்தானத்தில் உள்ள கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், துர்க்கை அம்மன், பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய சுவாமி களுக்கும் வெள்ளிக்கவசம் சாற்றப்படுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சூரசம்ஹார விழா நடந்தது.
    • உற்சவருக்கு தீபாரதி காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்க ப்பட்டது.

    மதுரை

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் அமைந்துள்ள திருமேனிநாதர் சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ் டியை முன்னிட்டு சூர பத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மேலும் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் நடைபெறும் கந்த சஷ்டி விழாவானது அனைத்து சிவாலயங்க ளிலும், முருகப்பெருமான் கோவில்களிலும் நடைபெறு வது வழக்கம். சூரனை வதம் செய்து அசுரர்களிடம் இருந்து தேவர்களை காப்பதே சூரசம்ஹாரம் ஆகும்.

    அந்த வகையில் திருச்சுழி பூமிநாதன் கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி விழாவின் 6-ம் நாள் நடை பெறும் முக்கிய நிகழ்ச்சி யான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி யில் முருக பெருமான் சூரனை வதம் செய்தார்.முன்னதாக கந்தசஷ்டி விழாவின் 5-ம் நாள் நிகழ்ச்சியாக முருகப்பெரு மான் அம்பிகையிடம் இருந்து சக்தி ஆயுதமான வேலாயுதம் பெறும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதனையடுத்து நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் சோழ வந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத மூலநாத சுவாமி கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு 12-ம் ஆண்டு சூரசம்ஹார விழா நேற்று மாலை கோவில் முன்பு நடை பெற்றது. பக்தர்கள் வெற்றி வேல்முருகா, வீரவேல்முருகா என்று பக்தி கோஷமிட்டனர். இன்று காலை 11 மணியளவில் பாவாடை தரிசனம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு மேல் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பிரதோசம் கமிட்டியினர் செய்து வருகின்றனர். கோவில் செயல் அலுவலர் பாலமுருகன், கோவில் பணியாளர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு முருகன்-வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு 16 வகையான அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் நேற்று நடைபெற்றது. முன்னதாக அம்மனிடம் இருந்து பூஜிக்கப்பட்ட வேல் வழங்கப்பட்டது. அங்கு சூரன் ஆடு, யானை, சிம்மம் வடிவில் உருமாறி காட்சி அளிக்க முருகன் சூரனை வதம் செய்தார். இதனை திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் உற்சவருக்கு தீபாரதி காண்பி க்கப்பட்டு பிரசாதம் வழங்க ப்பட்டது.

    • வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • கண்மாய்கள் நிரம்புகின்றன.

    வாடிப்பட்டி

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. இதனால் வாடிப்பட்டி பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு நீர் வரத்து அதிகரித்ததால் நிரம்பத் தொடங்கின. வாடிப்பட்டி அருகே குட்லா டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தாடக நாச்சி புரத்தில் மீனாம்மாள் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய்க்கு குட்லாடம்பட்டி தாடக நாச்சி அருவியில் இருந்து வெளியேறும் தண்ணீர் ஓடை வழியாக வந்து நிரம்பும்.

    அங்கு தேக்கி வைக்கப் பட்ட தண்ணீர் பின்னர் மதகுகள் வழியாக விளை நிலங்களுக்கு நீர் பாசனத் திற்கு பயன்படுத்தப்படும். கண்மாய் நிரம்பிய பின் மாறுகால் ஏற்பட்டால் ஓடை வழியாக அப்புசெட்டி கண்மாய்க்கு சென்று அங்கு நீர் நிரப்பப்பட்டு அதன் பின் நாகர் குளம் கண்மாய், செம்மினிபட்டி புதுக்குளம், கொட்டமடக்கி கண்மாய்கள் நிரம்பும். அங்கிருந்து வெளியேறும் தண்ணீர் தாதம்பட்டி கண்மாய் சென்று அங்கிருந்து பெரியார் பாசன கால்வா யில் கிழக்கு பகுதியில் உள்ள துருத்தி ஓடை வழியாக சோழவந்தான் வடகரை கண்மாய்க்கு சென்று சேரும்.

    இந்த நிலையில் குட்லாடம் பட்டி மீனாம்மாள் கண்மாய் கரையில் மதகின் அருகில் அரிப்பு ஏற்பட தொடங் கியது. அது கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து கரையை அரித்து சரிவு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது.

    இதனால் அந்த பகுதியில் உள்ள தென்னந் தோப்பு களில் தண்ணீர் சூழ்ந்தது. மேலும் அங்குள்ள ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தடுப்ப ணைகள் நிரம்பி அப்பு செட்டி கண்மாய்க்கு தண்ணீர் சென்றது. பின்னர் நாகர்குளம் கண்மாய் நிரம்பி செம்மினிபட்டி புதுக்குளம் கண்மாய்க்கு தண்ணீர் சென்றது.

    இதுகுறித்த தகவலறிந்த கச்சைகட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆலயமணி, குட்லாம்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கதிரவன், கச்சைகட்டி கிராம நிர்வாக அதிகாரி ஜெகதீசன், கிராம உதவியாளர்கள் ஜெயக்குமார், பாலு அந்தப் பகுதியை பார்வையிட்டனர். பின்னர் கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

    • வ.உ.சிதம்பரனார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் அகில இந்திய வ.உ.சி. பேரவை சார்பில் சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் 87-வது நினைவு தினத்தை முன்னிட்டு சிவாஸ்ரமம் மடத்தில் அவரது உருவ படத்திற்கு வாஸ்மரம் சுவாமி சிவானந்தம், ராஜ கிருஷ்ண மடம் குடில் சுவாமி பிரன வாணந்தா ஆகியோர் மலர் தூவி மாரியதை செலுத்தினர்.

    பின்னர் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்ன தானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை வ.உ.சி பேரவை தலைவர் வேடராஜன் செய்திருந்தார். இதில் சரவணன், தவமணி, லதா, சேதுராமன், முருகன் உள் பட பலர் கலந்து கொண்ட னர்.

    இதேபோல் பரமக்குடி யில் நடந்த வ.உ.சிதம்பரனா ரின் 87-வது நினைவு தினத்தை யொட்டி முக் குலத்தோர் புலிப்படையின் தலைவர் சேது.கருணாஸ் ஆலோசனைப்படி மாநில செயலாளர் வழக்கறிஞர் முத்துராமலிங்கம் தலை மையில் வ.உ.சிதம்பரனா ரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் சுந்தர பாண்டியன், கிழக்கு மாவட்ட செயலாளர் பசும் பொன் பாலாஜி, மேற்கு மாவட்ட துணை செய லாளர் பசும்பொன் சவுந் தர், மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சிவசங்கர மேத்தா, வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் ஆகாஸ்சேதுபதி, பரமக்குடி நகர் பொருளாளர் அஜித், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சரண், ஒன்றிய மாணவரணி செயலாளர் சோனை வீர ரகு, ராமநாத புரம் நகர் துணைச் செய லாளர் சிமியோன் பிரபா கரன் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பரமக்குடி அனைத்து வெள்ளாளர் மகா சபை சார்பில் தலைவர் குரு.சுப்பிர மணியன் தலைமையில் அவரது சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப் பட்டது. இதில் இருளப்பன் பிள்ளை, முனியாண்டி பிள்ளை, வின்சென்ட் ஜெய குமார், கோவிந்த ராஜ், அழகுசுந்தரம், மில்கா செந்தில், சூர்யா ஜெராக்ஸ் முருகேசன், குமார் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து வ.உ.சி. பள்ளியில் உள்ள அவரது சிலைக்கு பள்ளி முதல்வர் உள்பட அனைத்து ஆசிரியர்கள், நிர்வாகிகள் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர்.

    முடிவில் பள்ளியின் பொருளாளர் மகேஸ்வரன் பிள்ளை நன்றி கூறினார்.

    இதையடுத்து சோழ வந்தானில் தி.மு.க. சார்பில் நகர செயலாளர் வக்கீல் சத்திய பிரகாஷ் தலைமை யில் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் வ.உ சி. சிலைக்கு மாலை அணி வித்தார். வ.உ.சி. அறக் கட்டளை சார்பில் அன்ன தானத்தை தொடங்கி வைத்தார். முள்ளிப்பள்ளம் ஒன்றிய கவுன்சிலர் கீர்த்திகா ஞானசேகரன், வடக்கு வீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத் தலைவர் சுகுமாரன், முன்னாள் தலைவர் சந்திர சேகரன், முன்னாள் பேரூ ராட்சி துணைத் தலைவர் ராஜ்குமார், வ.உ.சி. அறக்கட்டளை நிர்வாகிகள் ராஜசேகரன், சிங்கராஜ், விஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சங்கீத கலாநிதி பக்தவத்சலத்திற்கு பாராட்டு விழா நடந்தது.
    • விருதினை நிலையூர் ஆதீனம் சுப்பிரமணியசாமி வழங்கினார்.

    மதுரை

    மதுரை எஸ்.எஸ்.காலனி எம்.ஆர்.பி.திருமண மண்டபத்தில் அனுஷத்தின் அனுக்கிரகம் மற்றும் மதுரை குமர கான சபா டிரஸ்ட் இணைந்து கர்நா டக இசை நிகழ்ச்சி மற்றும் சங்கீத வித்வான்களுக்கு பாராட்டு விழா நடத்தியது.

    ராமநாதபுரம் கலை மாமணி சி.எஸ்.சங்கரசிவம், சங்கீத வித்வான்கள் சீனிவாசா ஐயர், மிருதங்க வித்வான் பத்மஸ்ரீ.சி.எஸ். முருக பூபதி ஆகியோர் நினைவாக சங்கீத கலாநிதி விருது பெற்ற கலை மாமணி திருவாரூர் பக்தவத் சலத்திற்கு பாராட்டு விழா தெரிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து திருவாரூர் எஸ்.கிரீஸ் அவர்களுக்கு குமரகான இசை மணி விருது வழங்கப்பட்டது.

    திருவாரூர் பக்தவச்சலம் மிருதங்கம், எஸ்.கிரீஷ் பாட்டு, புதுக்கோட்டை அம்பிகா பிரசாத் வயலின், ஆலத்தூர் ராஜ் கணேஷ் கஞ்சிரா உள்ளிட்ட இசை கலைஞர்களின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடந்தது. விருதினை நிலையூர் ஆதீனம் சுப்பிரமணியசாமி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சத்குரு சங்கீத வித்யாலயம் இசை கல்லூரி முதல்வர் தியாக ராஜன் முன்னாள் முதல்வர் லதா வர்மா, பேங்க் ஆப் பேங்க் ஆப் பரோடா மேலாளர்கள் பிரபாகரன் ராமமூர்த்தி, உட்பட பலர் பங்கேற்றனர் ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு மற்றும் மதுரை குமர கான சபா ட்ரஸ்ட் முனைவர் லஷ்மண்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • சம்பா பயிருக்கு காப்பீடு செய்ய கால நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை மதுரை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் மாற்றியமைக்கப்பட்ட பாரத பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிரை கடந்த 15-ந் தேதி வரை காப்பீடு செய்யலாம் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

    விவசாயிகளின் கோரிக்கை யினை தொ டர்ந்து, தமிழக அரசின் தொடர் நடவடிக்கையின் காரணமாக ஒன்றிய அரசு சம்பா நெற்பயிரை வரும் 22-ந் தேதி வரை காப்பீடு செய்து கொள்ள கால நீட்டிப்பு வழங்கியுள்ளது.

    சம்பா நெல்-11 பயிருக்கு இது நாள் வரை பயிர் காப்பீடு செய்யாத விவசா யிகள் நெல்-11 பயிர்காப்பீடு செய்ய ஒரு ஏக்கருக்கு பிரிமியத் தொகையான ரூ.529/-யை 22.11.2023க்குள் செலுத்தி இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

    எனவே சம்பா பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் கடன் பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ, கடன் பெறா விவசாயிகள் பொது சேவை மையங்களிலோ (இ.சேவை மையங்கள்) இணைய தளத்தில் உள்ள விவசா யிகள் நேரடியாகவோ நிர்ணயிக்கப்பட்ட கால கெடுவிற்குள் காப்பீடு செய்ய வேண்டும். விவசா யிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பம், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல், இ.அடங்கல், விதைப்புச்சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து மேற்குறிப்பிட்ட பீரிமியத்தொகையை செலுத்தி வருகிற 22-ந் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    நிர்ணயம் செய்யப்பட்ட காலக்கெடுவுக்குள் ஏற்கனவே பதிவு செய்த விவசாயிகள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

    இந்த தகவலை மதுரை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

    • தி.மு.க. ஆட்சியை சூரசம்ஹாரம் செய்வார் எடப்பாடி பழனிசாமி ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.
    • அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் அனைவரும் தீவிரமாக களப்பணியாற்றி மீண்டும் அ.தி.மு.க. அரசு விரைவில் அமைய துணை நிற்க வேண்டும்.

    மதுரை

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் திருப்ப ரங்குன்றம் சட்டசபை தொகுதிக்குட் பட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல். ஏ. தலைமை தாங்கி பேசியதாவது-

    இன்றைக்கு அ.தி.மு.க. கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் வீறு கொண்டு வெற்றி நடை போட்டு வருகிறது. இன் றைக்கு நல்ல நாள் முருகன் அசுரனை வதம் செய்கிற சூரசம்ஹாரம் நடக்கின்ற நாளாகும். எனவே தான் இந்த சிறப்புமிக்க இந்த நாளில் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டத்தை கூட்டி இருக்கிறோம்.

    தமிழக மக்களுக்கு அனைத்து வகைகளிலும் தீமையான காரியங்களை தி.மு.க. அரசு செய்து வரு கிறது. அன்றைக்கு அசுரன் எப்படி மக்களை வாட்டி வதைத்தானோ அது போல முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தமிழக மக்களை பல் வேறு வரிச்சுமைகளை விதித்து வாட்டி வதைத்து வருகிறார். அதிலிருந்து விடுவிக்க முருக பெருமான் அவதாரம் எடுத்தது போல இன்றைக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப் பாடியார் புதிய அவதாரம் எடுத்து தி.மு.க. என்ற அசுரனை சூரசம்ஹாரம் செய்து விரைவில் தமிழக மக்களுக்கு விடிவு காலத்தை ஏற்படுத்தி தருவார்.

    அந்த வகையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் அனைவரும் தீவிரமாக களப்பணியாற்றி மீண்டும் அ.தி.மு.க. அரசு விரைவில் அமைய துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பலசரக்கு வியாபாரி வீட்டில் புகுந்து 32 பவுன் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் பசும்பொன் தெருவில் உள்ள பாரதி தாசன் தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி(வயது50). இவர் அதே பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவரது மகன் கணேஷ்பாபு கேட்டரிங் தொழில் செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று ஜெயலட்சுமி கடைக்கு சென்றுவிட மகனும் வெளியே சென்று விட்டார். வீட்டில் வயதான மூதாட்டி ஒருவர் தனி அறையில் ஓய்வெடுத்துக் கொண்டி ருந்தார். வீட்டின் கதவு உள் பக்கமாக பூட்டப்படாமல் சாத்தப் பட்டிருந்தது. இதனை அறிந்து கொண்ட மர்ம நபர் வீட்டுக்குள் நைசாக புகுந்து பீரோ சாவியை எடுத்து அதனை திறந்துள்ளார். பின்னர் அதில் இருந்த 32 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றுள்ளார்.

    மாலையில் வீடு திரும்பிய ஜெயலட்சுமி பீரோ கதவு திறக்கப்பட்டு நகை, பணம் கொள்ளை யடிக்கப்பட்டி ருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர்.

    கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • பெரியாறு கால்வாயை சாத்தியார் அணையுடன் இணைக்க வேண்டும்.
    • கலெக்டரிடம் பா.ஜ.க.வினர் மனு அளித்தனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணையை முல்லைப் பெரியாறு கால்வாயுடன் இணைக்க வலியுறுத்தியும், அணையை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டியும் பா.ஜ.க. மாநில விவசாய அணி துணை தலைவர் முத்துராமன்ஜி, புறநகர் மாவட்ட தலைவர் ராஜ நரசிம்மன், மாவட்ட பொது செயலாளர் கண்ணன், பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் தமிழ்முரசு மற்றும் நிர்வாகி கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    இதுகுறித்து விவசாய அணி மாநில துணைத் தலைவர் முத்துராமன்ஜி கூறியதாவது:-

    உங்கள் தொகுதியின் ஸ்டாலின் முதலமைச்சர் நிகழ்ச்சியின் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி ஆட்சிக்கு வந்தவுடன் மதுரை மாவட்டத்தின் முதல் கையெழுத்து முல்லைப் பெரியாறு கால்வாய்- சாத்தையாறு அணை இணைப்பு திட்டம் என கூறிவிட்டு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் விரைவில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமை யில் மாபெரும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். சாத்தியார் அணையை தூர்வார வேண்டும்.

    சிறுமலை பாதுகாக்கப் பட்ட வனப்பகுதியில் அதிகப்படியான மரங்கள் நடுவதற்கு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும். சாத்தையாறு அணை மதகு பழுதை விரைந்து சரிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோ ரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்கள் மீது அக்கறை இல்லாத தி.மு.க. அரசு என ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டினார்.
    • முடிவில் கோட்டைமேடு பாலன் நன்றி கூறினார்.

    வாடிப்பட்டி

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார்.பகுதி பொறுப்பாளர் தண்டரை மனோகரன், முன்னாள் எம்.எல்.ஏ.கருப்பையா, மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் மாணிக்கம், சரவணன், மாவட்ட நிர்வாகி கள் திருப்பதி, வெற்றி வேல், ராதா கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாசறை மாவட்ட துணைச் செயலாளர்மணிமாறன் வர வேற்றார்.

    இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதய குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கி றார்கள். மக்கள் மீது அக்கறை இல்லாத அரசாக, செயல்பாடத அரசாக, வளர்ச்சியை பற்றி சிந்திக்காத அரசாக தி.மு.க. உள்ளது. தன்னுடைய வாரிசுகளை மட்டும் பற்றி சிந்திப்பதை கடமையாக கொண்டுள்ள முதல மைச் சரை இந்த நாடு பெற்றி ருப்பது வேதனை யிலும் வேதனையாக உள்ளது. மக்கள் இந்த அரசின் மீது அதிருப்தியோடு இருக்கி றார்கள்.

    பூத் கமிட்டி உறுப்பினராக இருக்கின்ற நீங்கள் எதிர்ப்பு களை வாக்குகளாக மாற்ற முடியும். களத்தில் நின்று போராடி எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து இயக்கத்தின் ஆணிவேராக கட்டிக் காக்க கூடியவர்கள் இயக்கத்தின் கிளை செயலா ளர்களும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் தான். எனவே உங்களை எப்போ தும் வலிமையோடு வைத்தி ருக்க வேண்டும் என்று பொதுச் செயலாளர் எடப்பாடியார் இந்த வாய்ப்பை வழங்கி இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆலயமணி, பாண்டுரங்கன், தெய்வ தர்மர், தக்காளி முருகன், விசு, ஜெயராமன், மலைச்சாமி, பிச்சை, மூர்த்தி, செந்தில், பாலாஜி, பாஸ்கரன், கருப்பட்டி ராமநாதன் சந்திரபோஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் கோட்டைமேடு பாலன் நன்றி கூறினார்.

    ×