search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "peddler"

    • பலசரக்கு வியாபாரி வீட்டில் புகுந்து 32 பவுன் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் பசும்பொன் தெருவில் உள்ள பாரதி தாசன் தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி(வயது50). இவர் அதே பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவரது மகன் கணேஷ்பாபு கேட்டரிங் தொழில் செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று ஜெயலட்சுமி கடைக்கு சென்றுவிட மகனும் வெளியே சென்று விட்டார். வீட்டில் வயதான மூதாட்டி ஒருவர் தனி அறையில் ஓய்வெடுத்துக் கொண்டி ருந்தார். வீட்டின் கதவு உள் பக்கமாக பூட்டப்படாமல் சாத்தப் பட்டிருந்தது. இதனை அறிந்து கொண்ட மர்ம நபர் வீட்டுக்குள் நைசாக புகுந்து பீரோ சாவியை எடுத்து அதனை திறந்துள்ளார். பின்னர் அதில் இருந்த 32 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றுள்ளார்.

    மாலையில் வீடு திரும்பிய ஜெயலட்சுமி பீரோ கதவு திறக்கப்பட்டு நகை, பணம் கொள்ளை யடிக்கப்பட்டி ருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர்.

    கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • உசிலம்பட்டியில் பெண் வியாபாரியை தாக்கிய வங்கி ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • இவர் உசிலம்பட்டி- பேரையூர் ரோட்டில் வணிக நிறுவனம் நடத்தி வருகிறார்.

    மதுரை

    உசிலம்பட்டி, மாயன் நகரை சேர்ந்த காட்டுராஜா மனைவி சீதாலட்சுமி (வயது 42). இவர் உசிலம்பட்டி- பேரையூர் ரோட்டில் வணிக நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் சீதா லட்சுமி அங்குள்ள தனியார் வங்கியில் ரூ.25 லட்சம் கடன் வாங்கினார். இதற்கான தவணையை செலுத்தி வந்தார். அவர் 3 மாதங்களாக தவணை தொகை செலுத்தவில்லையாம்.

    சம்பவத்தன்று இரவு சீதாலட்சுமி கடையில் இருந்தார். அப்போது தனியார் வங்கி ஊழியர்கள் வந்து தகராறில் ஈடுபட்டனர். இதில் சீதாலட்சுமிக்கு அடி உதை விழுந்தது. இதை கணவர் காட்டுராஜா தட்டி கேட்டார். அவருக்கும் அடி- உதை விழுந்தது.

    கணவன்-மனைவி இருவரையும் உறவினர்கள் மீட்டு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சீதாலட்சுமி உசிலம்பட்டி டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் சீதாலட்சுமியை தாக்கியது ஆரியப்பட்டி விக்னேஷ், பெருங்காமநல்லூர் தங்கம் மற்றும் 2 பேர் என்பது தெரியவந்தது. போலீசார் மேற்கண்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×