பெண் வியாபாரியை தாக்கிய வங்கி ஊழியர்கள் மீது வழக்கு

உசிலம்பட்டியில் பெண் வியாபாரியை தாக்கிய வங்கி ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர் உசிலம்பட்டி- பேரையூர் ரோட்டில் வணிக நிறுவனம் நடத்தி வருகிறார்.
பெண் வியாபாரியை தாக்கிய வங்கி ஊழியர்கள் மீது வழக்கு
Published on

மதுரை

உசிலம்பட்டி, மாயன் நகரை சேர்ந்த காட்டுராஜா மனைவி சீதாலட்சுமி (வயது 42). இவர் உசிலம்பட்டி- பேரையூர் ரோட்டில் வணிக நிறுவனம் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் சீதா லட்சுமி அங்குள்ள தனியார் வங்கியில் ரூ.25 லட்சம் கடன் வாங்கினார். இதற்கான தவணையை செலுத்தி வந்தார். அவர் 3 மாதங்களாக தவணை தொகை செலுத்தவில்லையாம்.

சம்பவத்தன்று இரவு சீதாலட்சுமி கடையில் இருந்தார். அப்போது தனியார் வங்கி ஊழியர்கள் வந்து தகராறில் ஈடுபட்டனர். இதில் சீதாலட்சுமிக்கு அடி உதை விழுந்தது. இதை கணவர் காட்டுராஜா தட்டி கேட்டார். அவருக்கும் அடி- உதை விழுந்தது.

கணவன்-மனைவி இருவரையும் உறவினர்கள் மீட்டு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சீதாலட்சுமி உசிலம்பட்டி டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் சீதாலட்சுமியை தாக்கியது ஆரியப்பட்டி விக்னேஷ், பெருங்காமநல்லூர் தங்கம் மற்றும் 2 பேர் என்பது தெரியவந்தது. போலீசார் மேற்கண்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com