எண்ணை செக்கு உரிமையாளர் வீட்டில் நகை-பணம் திருட்டு

எண்ணை செக்கு உரிமையாளர் வீட்டில் நகை-பணம் திருடப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப் பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
எண்ணை செக்கு உரிமையாளர் வீட்டில் நகை-பணம் திருட்டு
Published on

மேலூர்

மதுரை மாவட்டம் மேலூர்-திருவாதவூர் சாலையில் உள்ள மில்கேட் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு எதிர்புறம் உள்ள வீட்டில் வசித்து வருபவர் மணி, எண்ணை செக்கு நடத்தி வருகிறார். இவரது மனைவி ஆனந்தி. இவர்கள் நேற்று குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தனர்.

இன்று அதிகாலை மீண்டும் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டி ருந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட் கள் சிதறி கிடந்தன.

உள்ளே பார்த்தபோது பீரோவில் இருந்த 4 பவுன் நகைகள்,ரூ.50 ஆயிரம், மேலும் சில பொருட்கள் திருடப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து மேலூர் போலீஸ் நிலை யத்திற்கு மணி தகவல் கொடுத்தார். அதன்பேரில் மேலூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி, தனிப்பிரிவு ஏட்டு தினேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசா ரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப் பட்டு தடயங்கள் சேகரிக்கப் பட்டன.

இங்கு வந்த மோப்பநாய் பெரியார் கால்வாய் பகுதி வரை ஓடி நின்றது. அந்த பகுதியில் இருந்த கண் காணிப்பு காமிரா பதிவு களை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அதில் வீட்டிற் குள் மர்மநபர்கள் செல்வது மற்றும் பொருட்க ளுடன் திரும்பி வரும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படை யில் போலீசார் வழக்குப பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com