திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவிற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கம்

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவிற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.இந்த தகவலை தெற்கு ரெயில்வே மதுரை கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவிற்கு சென்னையில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கம்
Published on

மதுரை

திருச்செந்தூரில் நடை பெறும் கந்த சஷ்டி விழாவிற்கு லட்சக் கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம். எனவே பயணிகளின் வசதிக்காக சென்னை-திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் -தாம்பரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி சென்னை-திருநெல்வேலி சிறப்பு ரெயில் (06001) சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 17 இன்று இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு மறு நாள் மதியம் 12.45 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். மறு மார்க்கத்தில் திருச்செந்தூர்-தாம்பரம் சிறப்பு ரெயில் (06002) திருச்செந்தூரில் இருந்து இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.45 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

இந்த ரெயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்ப கோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக் கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரெயில் நிலை யங்களில் நின்று செல்லும்.

திருச்செந்தூர்-தாம்ப ரம் சிறப்பு ரெயில் கூடுத லாக ஆறுமுகநேரி, நாச ரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் ஆகிய ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும். இந்த ரெயில்களில் ஒரு குளிர் சாதன 2 அடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர் சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டி, 8 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு பொதுப்பட்டிகள், 2 மாற்றுத் திறனாளி களுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்.

இந்த தகவலை தெற்கு ரெயில்வே மதுரை கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com