அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

அலங்காநல்லூரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
Published on

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து, ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய குமார் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோ சனை வழங்கினார்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் கருப்பையா, மாணிக்கம், சரவணன், மேற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், விவசாய அணி மாவட்ட செயலாளர் ராம்குமார், நகர் செயலாளர்கள் அழகு ராஜ், குமார், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணை செய லாளர் ஜெயச்சந்திர மணியன், பாசறை மாவட்ட இணை செயலாளர் உமேஷ் சந்தர், ஒன்றிய கவுன்சிலர் ரேவதி, பேரூராட்சி கவுன்சிலர் நாட்டாமை சுந்தர், நிர்வாகிகள் குமார், மனோகரன், முத்துகிருஷ்ணன், மதன், ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com