என் மலர்
மதுரை
- திருமங்கலத்தில் தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.
- பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற கட்சியினர் முழுவீச்சில் பாடுபடவேண்டும் என்று மாவட்ட செயலாளர் பேசினார்.
திருமங்கலம்
மதுரை தெற்குமாவட்ட தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் திருமங்கலம் அடுத்துள்ள முத்தப்பன்பட்டியில் நடைபெற்றது. தெற்கு மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். மதுரை புறநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய தாவது:-
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறவேண்டும். கடந்த எம்.பி. தேர்தலின் போது நாம் எதிர்க்கட்சியாக இருந்த போதே தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 39 தொகுதிகளில்வெற்றி பெற்றோம். தற்போது தமிழகத்தில் ஆளுங்கட்சி யாக உள்ளோம். எனவே 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று அசைக்கமுடியாத சக்தியாக திகழவேண்டும்.
இந்த முறை நாடா ளுமன்ற தேர்தலில் திருமங்கலம் உள்ளிட்ட இந்த மூன்று தொகுதி களிலும் 50 ஆயிரத்திற்கு அதிகமான வாக்குகளை கூடுதலாக பெற்று நாம் வெற்றி பெறவேண்டும். தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் நல்லாட்சிக்கு சான்றாக நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வரவேண்டும். எனவே வரும் தேர்தல் நமக்கு முக்கியமான தேர்த லாகும். கட்சியினர் முழுவீச்சில் பாடுபட்டு நமது வெற்றிக்கு உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் உசிலம்பட்டி தொகுதி பார்வையாளர் மாரியப்பன் கென்னடி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஏர்போர்ட் பாண்டியன், இளமகிழன், துணை செயலாளர் லதா அதிய மான், ஒன்றிய செய லாளர்கள் தனபாண்டியன், ஆலம்பட்டிசண்முகம், ராமமூர்த்தி, மதன்குமார், நாகராஜன், திருமங்கலம் நகரசெயலாளர் ஸ்ரீதர், பேரூர் செயலாளர் வருசை முகமது, அணி அமைப்பா ளர்கள் மாணவரணி பாண்டி முருகன், இளை ஞரணி விமல், மீனவரணி செல்வம், சுற்றுசூழல்அணி செல்வேந்திரன், விவசாய அணி வில்லூர் ஞான சேகரன், திருமங்கலம் நகராட்சி துணைத்தலைவர் ஆதவன்அதியமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- யாகசாலை பணிகள் இரண்டு நாட்களாக தொடங்கி நடைபெற்றது.
- புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் கோவில் ராஜகோபுரத்துக்கு இன்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பதினெட்டாம்படி ராஜகோபுரத்திற்கு கடந்த 2011-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதற்காக நேற்று முன்தினம் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டப வளாகத்தில் யாக சாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்றும் 2-வது நாளாக 40 வேத விற்பன்னர்கள் கொண்ட குழுவினர், ஒரே நேரத்தில் 8 யாக குண்டங்களில் வேத மந்திரங்களுடன் யாக பூஜைகள் நடத்தினர்.
இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. காலை 9.15 மணிக்கு மேல் 10 மணிக்குள் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு `கோவிந்தா' கோவிந்தா என்று கோஷம் எழுப்பினர். முன்னதாக நேற்று இரவு கள்ளழகர் கோவில் பதினெட்டாம்படி 7 நிலை கொண்ட ராஜகோபுரம், முழுக்க முழுக்க வண்ண விளக்குகளால், அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பக்தர்கள் பாதுகாப்புடன் நின்று கும்பாபிஷேக விழாவை காண, தனித்தனியாக, இரும்பு கம்பிகளான தடுப்புகள் மாவட்ட காவல் துறை மூலம் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்தது. பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவில் முன்பு மிகப் பழமையான திருப்பவுத்திர புஷ்கரணி தெப்பக்குளத்திற்கு அழகர் மலையில் இருந்து வழிந்து நூபுர கங்கை தீர்த்த தண்ணீர், மற்றும் தற்போது பெய்யும்மழை நீர் சேர்ந்து தெப்பக்குளம் நிரம்பி வழியும் நிலையில் உள்ளது.
இந்த கும்பாபிஷேக நேரத்தில் இந்த தெப்பக்குளம் நிரம்பி உள்ளது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முழுக்க முழுக்க நூபுர கங்கை புனித தீர்த்தக் குடங்களிலுருந்து, கும்ப கலசங்களில் குடம் குடமாக ஊற்றி பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க வானத்தில் கருடன் வட்டமிட கும்பாபிஷேக விழா நடை பெற்றது. அப்போது ஹெலிகாப்டரில் இருந்து பூ மழை தூவியது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் அறங்காவலர் குழுவினர், திருக்கோவில் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள வரிச்சியூர் செல்வம் ஜாமின் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
- மனு நீதிபதி சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
மதுரை:
விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 38). இவர், தனது மனைவி, குழந்தைகளுடன் மதுரையில் தங்கியிருந்தார். பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளியாகவும் செயல்பட்டு வந்துள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு மதுரை டி.குன்னத்தூர் ஊராட்சி தலைவர் கிருஷ்ண ராஜ், நண்பர் முனியசாமி ஆகிய 2 பேர் கொல்லப்பட்ட வழக்கில் செந்தில்குமாரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
இதனை அறிந்த வரிச்சியூர் செல்வம் அறிவுறுத்தலின் பேரில் செந்தில்குமார் சென்னை சென்றுவிட்டார். அங்கு இருந்த செந்தில்குமார் திடீரென மாயமாகி விட்டதாகவும் அவரை கண்டுபிடிக்க கோரியும் அவரது மனைவி விருதுநகர் கிழக்கு போலீசில் புகார் செய்தார்.
அவரை போலீசார் தீவிரமாக தேடினர். அப்போது அவரை வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளிகள் சுட்டுக்கொன்று, அவரது உடலை தாமிரபரணி ஆற்றில் வீசியது தெரிந்தது. இதுசம்பந்தமாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் பலர் கைதாகியுள்ளனர்.
தற்போது இந்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள வரிச்சியூர் செல்வம், தனக்கு ஜாமின் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
முடிவில், மனுதாரருக்கு ஜாமின் அளிக்கப்படுகிறது. அவர் மாதந்தோறும் சம்பந்தப்பட்ட போலீசில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்று நிபந்தனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
- மதுரை ெரயில் நிலைய வளாகத்தில் உள்ள கோவிலை அகற்றக்கூடாது.
- ெரயில்வே கோட்ட என்ஜினீயர் சூரியமூர்த்தியிடம் பா.ஜனதா, இந்து அமைப்புகள் மனு கொடுத்தது.
மதுரை
மதுரை ெரயில் நிலைய கிழக்கு நுழைவு வாயில் பகுதியில் பழமையான செல்வ விநாயகர் கோவில் உள்ளது. தற்போது ரெயில் நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடந்துவரும் நிலையில் விநாயகர் கோவில் அகற்றப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் பா.ஜனதா மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் விசுவ இந்து பரிஷத் நிர்வாகிகள் பாண்டியன், வெங்கடேசன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கிழக்கு நுழைவு வாயில் பகுதியில் திரண்டு கோவிலை அகற்றக்கூடாது என வலியுறுத்தி முழக்கமிட்டனர். பின்னர் ெரயில்வே கோட்ட என்ஜினீ யர் சூரியமூர்த்தியிடம் அவர்கள் மனு அளித்தனர்.
- திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வேளாண் வணிகத்துறை இயக்குநர் ‘திடீர்’ ஆய்வு நடத்தினார்.
- நுகர்வோர்களிடம் குறைகள் கேட்டார்.
மதுரை
திருமங்கலம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தின் மூலமாக சுமார் 30-க்கும் மேற்பட்ட வேளாண் விளை பொருட்களுக்கு உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகள் மற்றும் வெளி மாநில வியாபாரிகள் பங்கேற்பின் மூலம் இ-நாம் திட்டத்தின் கீழ் அதிகபட்ச விலை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத னால் விவசாயிகள் மிகுந்த பயனடைந்து வருகின்றனர்.
இந்தநிலையில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் திருமங்கலம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் மற்றும் திருமங்கலம் உழவர் சந்தை ஆகியவற்றை வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநர் நடராஜன் திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது இத்திட்டம் குறித்து விரிவான ஆய்வு செய்யப்பட்டதுடன் திருமங் கலம் ஒழுங்குமுறை விற்ப னைக்கூடத்தில் கூடுதலாக ஒரு கிட்டங்கி அமைத்திட இட வசதி உள்ளதா எனவும் ஆய்வு செய்தார். ஆய்வின் முடிவில் இ-நாம் திட்டத் தின் கீழ் பரிவர்த்தனைகளை அதிகரித்திட உரிய அறிவுரை வழங்கினார்.
மேலும், திருமங்கலம் உழவர் சந்தையினை ஆய்வு செய்த இயக்குநர் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை ஆய்வு செய் ததுடன் உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகள் மற்றும் நுகர்வோர்களிடம் சந்தை யின் அடிப்படை வசதிகள் மற்றும் செயல்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா எனவும் கேட்டறிந் தார்.
ஆய்வின்போது வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை கூடுதல் இயக்குநர் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
- அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் வணிக ரீதியில் கஞ்சா கடத்தி விற்பனை செய்துள்ளார்.
- போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பது சமூகத்திற்கு நல்லதல்ல.
மதுரை:
சமூகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி வேதனை தெரிவித்தார்.
கடந்த 2019-ம் ஆண்டில் வெளிமாநிலத்தில் இருந்து மதுரைக்கு கடத்தி வந்த 213 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் மதுரையைச் சேர்ந்த குபேந்திரன், அவரது சகோதரர் ரவி உள்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தற்போது குபேந்திரன் தனக்கு ஜாமின் அளிக்கும் படி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனக்கும் இந்த வழக்கிற்கும் சம்மந்தம் இல்லை. காவல்துறையினர் பெய்யான வழக்கில் கைது செய்துள்ளனர். எனவே எனக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் வணிக ரீதியில் கஞ்சா கடத்தி விற்பனை செய்துள்ளார். போலீசார் உரிய ஆதாரங்களின் அடிப்படையில்தான் இந்த வழக்கில் மனுதாரரை கைது செய்து உள்ளனர். எனவே அவருக்கு ஜாமின் வழங்கக் கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி சிவஞானம், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருள் போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்து வருவது சமூகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பது சமூகத்திற்கு நல்லதல்ல. கொடிய பாதிப்பையே ஏற்படுத்தும் என கருத்து தெரிவித்தார்.
விசாரணை முடிவில், மனுதாரருக்கு ஜாமின் அளிக்க முடியாது என்று உத்தரவிட்டு, இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
- விவசாயிகள் பிரச்சினையில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது.
- மதுரை மேற்கு ஒன்றிய அ.ம.மு.க. நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி டி.குன்னத்தூர் அம்மா கோவிலில் இன்று நடந்தது.
மதுரை
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மதுரை மேற்கு ஒன்றிய அ.ம.மு.க. நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி டி.குன்னத்தூர் அம்மா கோவிலில் இன்று நடைபெற்றது.
மதுரை மேற்கு அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் வயலூர் எம்.சுரேஷ், அதலை ஊராட்சி செயலாளர் அன்புவேலன், வயலூர் ஊராட்சி செயலாளர் வினோத்குமார், அதலை கிளைச் செயலாளர் செல்வேந்திரன் ஆகியோர் சட்டமன்ற எதிர்க்கட்சித்துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.
பின்னர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, மேல்மா கிராமத்திலே தொழில் பூங்கா விரிவாக்கத்திற்கு விவசாய நிலங்களை கையப்படுத்த, அரசு முடிவு எடுத்ததன் அடிப்படையிலே, எதிர்ப்பு தெரிவித்து 124 நாட்கள் தொடர்ந்து போராடிய 20 விவசாயிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிலே 7 விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்து இதில் அருள் ஆறுமுகத்தை தவிர ஆறு பேர் மீதான குண்டர் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது.
எடப்பாடியார் இது குறித்து கண்டன அறிக்கை வெளியிட்டார். அதனை தொடர்ந்து 24 மாவட்டங்க ளில் விவசாயிகள் தி.மு.க. அரசை கண்டித்து தொடர் போராட்டங்களை நடத்தினர்.
போராட்டத்தில் பங்கெ டுக்கும் விவசாயிகளுடைய தீவிரத்தை குறைக்க வேண்டும் என்றும் அதனு டைய ஆர்ப்பாட்டத்தை தடுக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளிலே அந்த பகுதிகளில் இருக்கக்கூடிய இளைஞர்கள் மீதும், விவசாய பெருங்குடி மக்கள் மீதும் தி.மு.க. அரசு தொடர் வழக்குகளை பதிவு செய்து வருகிறது. விவசாய பெருங்குடி மக்களின் போராட்டத்தை கட்டுப் படுத்த இந்த அரசு தவறான முறைகளை கையாண்டு வருகிறது.
திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சியாக இருந்த போது பல அமைப்புகளை திட்டமிட்டு தூண்டிவிட்டு தவறான பொய்யான தகவல்களை எல்லாம் வெளியிட்டு அன்றைக்கு அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களை எல்லாம் அரசியல் உள்நோக்கத்தோடு நடத்தப்படுகிறது என்றாலும் அந்த போராட்டங்களுக்கு அனுமதி வழங்கி காவல் துறை பாதுகாப்பு வழங்கி னார் எடப்பாடியார்.
ஆனால் இன்றைக்கு இருக்கிற தி.மு.க. அரசு விவசாயிகளுடைய போராட்டத்திற்காக காரணத்தை கண்டறிந்து அதை தீர்ப்பதற்கான நடவ டிக்கைகளை எடுக்காமல் விவசாயிகளுடைய போராட்டங்களை எல்லாம் ஒடுக்குவதற்கு காவல் துறையை தொடர்ந்து ஏவல் துறையாக பயன்படுத்தி வருவது. இதன் மூலம் தி.மு.க. அரசு விவசாயிகள் பிரச்சினையில் இரட்டை வேடம் போடுகிறது.
திருமங்கலம் சிவரக் கோட்டை சிப்காட் பிரச்சினையில் விவசாயிகள் உச்சநீதிமன்றம் வரை எல்லாம் போராடினார்கள். அனைத்து கட்சிகள் போரா டினாலும் கூட அதற்கு தீர்வு கண்டவர் எடப்பாடி யார். அதனால் தான் மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வரவேண்டும் என்று மக்கள் பேசுகிறார்கள். காலம் மாறும் காட்சிகள் மாறும் மீண்டும் முதலமைச்சராக எடப்பாடியார் வருவார் அப்போது விவசாயிகளுடைய எண்ணத்தை நிறைவேற்றுகின்ற வகையில் இந்த திட்டங்களையே ஆய்வு செய்து உரிய நடவடிக்கையை விவசாயிகள் விரும்புகிற நடவடிக்கைகளை எடப்பாடியார் எடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஓடும் பேருந்தில் சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் 9 பவுன் நகை பறிக்கப்பட்டது.
- இதுகுறித்து அவர் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் அளித்தார்.
திருமங்கலம்
மதுரை தேனூர் பகுதி யைச் சேர்ந்தவர் ஜோதி முத்து. மதுரை ஆயுதப்படை யில் சிறப்பு சப்-இன்ஸ் பெக்டராக பணிபுரிந்து கடந்தாண்டு உயிரிழந்தார். இவரது மனைவி தனலட்சுமி (வயது 54). இவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனர்.
இதற்கிடையே தனலட்சுமி கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் திருமங்கலம் அருகேயுள்ள தொட்டியபட் டியில் உள்ள மகள் வீட்டிற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து மீண்டும் தேனூருக்கு கிளம் பினார். திருமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து தேனூர் வழியாக செல்லும் ஊமச்சிகுளம் டவுன் பஸ் சில் ஏறி தனலட்சுமி அமர்ந் திருந்தார்.
அப்போது அந்த பஸ்சில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது. இதனை பயன்படுத்தி பஸ் சில் இருந்த மர்ம நபர் ஒருவர் தனலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்து சென்று விட்டார். சிறிது நேரம் கழித்த பிறகே இதனை உணர்ந்த தனலட்சுமி அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இதுகுறித்து அவர் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் நகை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- திருமங்கலத்தில் வேலை நிறுத்த போராட்டம் குறித்து ரெயில்வே ஊழியர்களிடம் வாக்கெடுப்பு நடந்தது.
- 3 நாட்கள் தென்னக ெரயில்வே முழுவதும் ரகசிய வாக்கெடுப்பு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமங்கலம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வு திட்டத்தையே செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ. ரெயில்வே தொழிற்சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம், பேரணி என பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப் பட்டது. போராட்டத்தின் எதிரொலியாக மத்திய அரசு கமிட்டி ஒன்றை அமைத்து கோரிக்கை குறித்த பரிசீலனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ-ஏ.ஐ.ஆர்.எப். தொழிற்சங்கம் சார்பில் ரெயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத் தில் ஈடுபடுவதாக முடி வெடுக்கப்பட்டது.
அந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்னதாக எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கம் சார்பில் உறுப்பினர்கள் மன நிலையை அறிய ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நவம்பர் 21, 22, 23 ஆகிய 3 நாட்கள் வாக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று திருமங்க லத்தில் ெரயில் நிலையத்தில் எஸ்.ஆர்.எம்.யூ. மதுரை கோட்ட செயலாளர் எஸ்.எம்.ரபீக் வழிகாட்டு தலின் பேரில் சிவகாசி கிளை பொறுப்பாளர் ஜோதிராஜா, கிளைச் செய லாளர் ஹரிநாராயணன், பொருளாளர் முத்துவேல், உதவிச் செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் முன்னிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மதுரை அழகப்பன் நகர் ெரயில்வே கேட்டில் இருந்து விருதுநகர் வரை உள்ள ெரயில்வே நிலையங்கள் ெரயில்வே கேட் பகுதியில் பணியாளர்களிடம் அலுவலர்களிடம் கருத்து கேட்பு எஸ்.ஆர்.எம்.யூ.தொழிற்சங்கத்தினர் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். 3 நாட்கள் தென்னக ெரயில்வே முழுவதும் ரகசிய வாக்கெடுப்பு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
- கள்ளழகர் கோவில் ராஜ கோபுர கும்பாபிஷேகம் நாளை விமரிசையாக நடக்கிறது.
- இன்று 2-ம் கால யாக பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மதுரை
மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இந்த கோவிலில் வருடந்தோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவில் சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடமிட்டு மதுரைக்கு எழுந்தருளுவார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
கள்ளழகர் கோவிலில் ராஜகோபுரத்தில் 18ம் படி கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. காவல் தெய்வமாக விளங்கும் இங்கு நாள்தோறும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். வருடத்தின் ஆடி அமாவாசை நாளில் மட்டும் ராஜ கோபுரத்தின் 18-ம் படி வாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இந்த நிலையில் 18-ம்படி கருப்பண்ணசாமி கோவிலில் ராஜ கோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.2 கோடியில் பழமை மாறாமல் கோபுரத்தை புனரமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. பணிகள் முடிந்த நிலையில் நாளை (23-ந்தேதி) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று கோவில் திருமண மண்டபத்தில் முதல்கால யாகபூஜைகள் தொடங்கின. முன்னதாக நூபுர கங்கையில் இருந்து 160 குடங்களில் தீர்த்தங்கள் கொண்டுவரப்பட்டது. அதனைத்தொடர்ந்து யாகசாலையில் 8 குண்டங்கள் அமைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. இன்று 2-ம் கால யாக பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் நாளை (23ந்தேதி) காலை 9.15 மணி முதல் 10 மணிக்குள் ராஜகோபுர கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதை யொட்டி கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்ககப்பட்டுள்ளது.
நாளை கும்பாபிஷேகத்தையொட்டி மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இதை யொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், கோவிலில் செய்யப்பட்டு ள்ள பாதுகாப்பு ஏற்பாடு களை ஆய்வு செய்தார்.
- தன் மீது உள்ள வழக்குகள் அரசியல் பழிவாங்கும் நோக்கத்திற்காக பதிவு செய்யப்பட்டவை.
- பயண உரிமையை மறுப்பது அடிப்படை உரிமையை மறுப்பதாகும்.
மதுரை:
நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகி மற்றும் சாட்டை என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருபவர் சாட்டை துரைமுருகன். அரசியல் கட்சி தலைவர்களை தொடர்ந்து யூடியூப் மற்றும் கட்சி பொதுக்கூட்டங்களில் விமர்சித்து வரும் சாட்டை துரைமுருகன் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் அவதூறு வழக்கு ஒன்றில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் சாட்டை துரைமுருகன் கடந்த 2018-ம் ஆண்டு வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்த நிலையில் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறி பாஸ்போர்ட் வழங்க மறுத்தனர். இதற்கிடையே இந்தாண்டு ஜூலை மாதம் மீண்டும் பாஸ்போர்ட் வழங்கக்கோரி விண்ணப்பித்த நிலையில் எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை.
தன் மீது உள்ள வழக்குகள் அரசியல் பழிவாங்கும் நோக்கத்திற்காக பதிவு செய்யப்பட்டவை. அதனை நான் சட்டரீதியாக எதிர்கொண்டு வருகிறேன். நான் வெளிநாட்டில் குடியேற பாஸ்போர்ட் கேட்கவில்லை. வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் என்னை உரையாற்ற அழைக்கின்றனர். இருப்பினும் பாஸ்போர்ட் இல்லாததால் என்னால் செல்ல முடியவில்லை.
பயண உரிமையை மறுப்பது அடிப்படை உரிமையை மறுப்பதாகும். எனவே பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்த தனது மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க பாஸ்போர்ட் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சாட்டை துரைமுருகனுக்கு பாஸ்போர்ட் வழங்குவது குறித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் காவல்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 1-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
- புதுக்குளம் கண்மாய் நீர் நிலையை ஆக்கிரமித்து தற்காலிக செட் அமைத்து உள்ளார். அதற்கு பட்டா வேண்டும் என கூறுவது ஏற்கத்தக்கது.
- பொதுப்பணித்துறையினர், வருவாய் துறையினர் இந்த ஆக்கிரமிப்புகளையும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அகற்ற வேண்டும்.
மதுரை:
மதுரையை சேர்ந்த பவுன்ராஜ் உயர்நீதிமன்ற மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மதுரை விராட்டிபத்து பகுதியில் நத்தம் புறம்போக்கு இடத்தில் பல வருடங்களாக வசித்து வருவதாகவும், தற்போது அரசு அதிகாரிகள் அதனை நீர் நிலை ஆக்கிரமிப்பு என்று கூறி வீட்டை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பொதுப்பணி துறையினர் ஆக்கிரமிப்பு அகற்ற நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இதற்கு தடை விதித்து நத்தம் புறம்போக்கு இடத்திற்கு எங்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் மனுதாரர், புதுக்குளம் கண்மாய் நீர் நிலையை ஆக்கிரமித்து தற்காலிக செட் அமைத்து உள்ளார். அதற்கு பட்டா வேண்டும் என கூறுவது ஏற்கத்தக்கது அல்ல எனவாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து அதற்கு பட்டா வேண்டும் என கூறுவது ஏற்கதக்கதல்ல. மேலும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து உள்ளவர்களுக்கு பட்டா வழங்க வருவாய் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என கூறிய நீதிபதிகள் பட்டா வழங்கக்கூடிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும் அரசு ஆவணங்களின்படி, புதுக்குளம் மற்றும் பெரியகுளம் கண்மாய் பகுதிகளில் மனுதாரர் மட்டுமல்லாமல் மேலும் பலர் நீர்நிலைப் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே பொதுப்பணித்துறையினர், வருவாய் துறையினர் இந்த ஆக்கிரமிப்புகளையும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.






