search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hindu Organizations Manu"

    • மதுரை ெரயில் நிலைய வளாகத்தில் உள்ள கோவிலை அகற்றக்கூடாது.
    • ெரயில்வே கோட்ட என்ஜினீயர் சூரியமூர்த்தியிடம் பா.ஜனதா, இந்து அமைப்புகள் மனு கொடுத்தது.

    மதுரை

    மதுரை ெரயில் நிலைய கிழக்கு நுழைவு வாயில் பகுதியில் பழமையான செல்வ விநாயகர் கோவில் உள்ளது. தற்போது ரெயில் நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடந்துவரும் நிலையில் விநாயகர் கோவில் அகற்றப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில் பா.ஜனதா மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் விசுவ இந்து பரிஷத் நிர்வாகிகள் பாண்டியன், வெங்கடேசன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கிழக்கு நுழைவு வாயில் பகுதியில் திரண்டு கோவிலை அகற்றக்கூடாது என வலியுறுத்தி முழக்கமிட்டனர். பின்னர் ெரயில்வே கோட்ட என்ஜினீ யர் சூரியமூர்த்தியிடம் அவர்கள் மனு அளித்தனர்.

    ×