ஓடும் பேருந்தில் சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் 9 பவுன் நகை பறிப்பு

ஓடும் பேருந்தில் சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் 9 பவுன் நகை பறிக்கப்பட்டது. இதுகுறித்து அவர் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் அளித்தார்.
ஓடும் பேருந்தில் சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் 9 பவுன் நகை பறிப்பு
Published on

திருமங்கலம்

மதுரை தேனூர் பகுதி யைச் சேர்ந்தவர் ஜோதி முத்து. மதுரை ஆயுதப்படை யில் சிறப்பு சப்-இன்ஸ் பெக்டராக பணிபுரிந்து கடந்தாண்டு உயிரிழந்தார். இவரது மனைவி தனலட்சுமி (வயது 54). இவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ளனர்.

இதற்கிடையே தனலட்சுமி கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் திருமங்கலம் அருகேயுள்ள தொட்டியபட் டியில் உள்ள மகள் வீட்டிற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து மீண்டும் தேனூருக்கு கிளம் பினார். திருமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து தேனூர் வழியாக செல்லும் ஊமச்சிகுளம் டவுன் பஸ் சில் ஏறி தனலட்சுமி அமர்ந் திருந்தார்.

அப்போது அந்த பஸ்சில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது. இதனை பயன்படுத்தி பஸ் சில் இருந்த மர்ம நபர் ஒருவர் தனலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்து சென்று விட்டார். சிறிது நேரம் கழித்த பிறகே இதனை உணர்ந்த தனலட்சுமி அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இதுகுறித்து அவர் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் நகை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com