என் மலர்
கிருஷ்ணகிரி
தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே.பி. அன்பழகன் வீடு, அலுவலகம் மற்றும் அவரது உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்து வருகிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு தோல்வியடைந்ததை திசை திருப்பவும் தி.மு.க.வின் நிரந்தர எதிரியான அ.தி.மு.க.வை அழிக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி பல்வேறு முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை செய்யப்பட்டது. இன்று முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் சோதனை செய்கின்றனர். அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே கே.பி.அன்பழகன் குடும்பம் பாரம்பரியமாக தொழில் செய்யக்கூடிய செல்வந்தர் குடும்பம் ஆகும். அ.தி.மு.க.வின் தலைவர்களையும் செல்வாக்குமிக்க நபர்களையும் சிறுமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தி.மு.க. இது போன்ற சோதனைகளை நடத்தி வருகிறது. இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஆட்சியாளர்களின் நிர்பந்தத்தின் பெயரால் தற்பொழுது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வருகிறார்கள். அவர்களாகவே ஒரு கணக்கெடுப்பு செய்து ஊடகங்களில் தெரிவிக்கின்றனர். ஆனால் சோதனை நடத்தும் போது எந்தவித ஆதாரங்களும் கிடைப்பதில்லை. இது தான் எதார்த்தமான உண்மை.
எட்டு மாத காலமாக தி.மு.க. அரசு மக்களுக்கு செய்யவேண்டிய எந்தவித பணிகளையும் சேவைகளையும் செய்யவில்லை. பொங்கல் திருநாளில் மக்களுக்கு கொடுக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. 2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் 20 பொருட்களுக்கு 1088 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. கரும்புக்கு மட்டும் 73 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 1159 கோடி ரூபாய் அரசு கொடுத்த பொருட்களை சில்லரை கடையில் சென்று வாங்கினால் கூட அதன் மொத்த விலை 350 ரூபாய்க்குள் அடங்கிவிடுகிறது. ஆனால் அரசு ஒதுக்கிய நிதி கிடைத்தால் ஒரு குடும்பத்திற்கு 570 ரூபாய் வருகிறது. அதாவது ஒரு குடும்ப அட்டைக்கு 275 ரூபாய் ஊழல் செய்து உள்ளது.
இதனை மறைப்பதற்காகவே எங்கள் மீது பழி போட்டு தருமபுரி மாவட்ட செயலாளர் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது. எந்த வழக்காக இருந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். சட்டப்படி நிச்சயமாக வழக்குகளில் வெற்றி பெறுவோம்.
தமிழகத்தில் ஊழலுக்கு வித்திட்ட தலைவர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி. ஊழலைப் பற்றி பேசுவதற்கு எந்தவித தார்மீக உரிமையும் தி.மு.க. அரசுக்கும் தி.மு.க. தலைவர்களுக்கும் கிடையாது. லஞ்ச ஒழிப்பு சோதனை மூலம் அ.தி.மு.க.வின் வாய்களை அடைத்து விடலாம் என்று நினைத்தால் அவர்களைப் போன்ற ஒரு ஏமாளிகள் வேறு யாரும் இருக்க முடியாது.
மாநில அரசு நடத்தும் லஞ்ச ஒழிப்பு சோதனையை மத்திய அரசு விமர்சனம் செய்வது சட்ட ரீதியான முறை கிடையாது. மாநில அரசின் சோதனைகளை மத்திய அரசு கண்காணித்து வருகிறது. நேரம் வரும்பொழுது அது தவறு என்னும் பட்சத்தில் மத்திய அரசு கட்டாயம் நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஜவளகிரி வனப்பகுதியில் 6க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு சுற்றி திரிகின்றன.
இந்த யானை கூட்டத்தில் இருந்து பிரிந்த 2 வயதான யானைக்குட்டி நேற்று வனப்பகுதியில் ஓரத்தில் உள்ள கம்பி வேலியில் சிக்கியது அதிலிருந்து மீள முயன்ற யானைக்குட்டிக்கு துதிக்கை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை பார்த்த வனத்துறையினர் அதனை மீட்க முயன்றனர் ஆனால் அதற்குள் அங்கு இருந்த குட்டி யானை வனப்பகுதிக்குள் சென்று விட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் கார்த்திகாயினி மற்றும் வனசரகர்கள் முருகேசன், சுகுமார், ரவி, வனத்துறை மருத்துவர் பிரகாஷ் உள்ளிட்டோர் ஜவளகிரி வனப்பகுதிக்கு சென்று யானை குட்டியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வனப்பகுதிக்குள் சென்று யானை குட்டியை தேடி வருகின்றனர். ஜவளகிரி வனப்பகுதி அடர்த்தியாக இருப்பதால் தேடும் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது.
இதனால் வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று டிரோன் கேமரா அனுப்பி குட்டி யானையை எங்குள்ளது என்பதை தீவிரமாக தேடி வருகின்றனர்.
துதிக்கையில் பலத்த காயத்துடன் சுற்றித் திரியும் யானை குட்டியை 2-ம் நாளான இன்று காலையில் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜவளகிரி வனப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாக உள்ளதால் இந்த யானை குட்டியை தேடும் பணி வனத்துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது.
இதுபற்றி வனத்துறையினர் கூறும்போது, ‘படுகாயம் அடைந்த குட்டி யானையை இன்று அல்லது நாளைக்குள் கண்டுபிடித்து விடுவோம். பின்னர் அதற்கு சிகிச்சை அளித்து மீண்டும் அதன் கூட்டத்தோடு சேர்க்கப்படும். ஆனால் குட்டியானை இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு இருப்பதால் தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது’ என்றனர்.
ஓசூர்:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள கிருஷ்ணன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் வசந்த குமார் (வயது 32),
கட்டிட தொழிலாளியான இவர் ஓசூர் பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகிறார்.
மது குடிக்கும் பழக்கம் உடைய வசந்த குமார் நேற்று இரவு கர்நாடக மாநில எல்லையான பள்ளூர் பகுதியில் உள்ள ஒரு மதுபான கடைக்கு மது அருந்த சென்றுள்ளார். இதையடுத்து அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் வசந்தகுமார் அங்கு தள்ளாடியப்படி நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வடமாநில வாலிபர்கள் சிலர் வந்துள்ளனர். அவர்கள், போதையில் நின்ற வசந்தகுமாரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
அப்போது வசந்த குமார் அவர்களுக்கு பணம் கொடுக்க மறுத்து திட்டியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த வடமாநில வாலிபர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியால் வசந்த குமாரை சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் வயிறு, கண் ஆகிய பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதை பார்த்து வடமாநில வாலிபர்கள், அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
காயமடைந்த வசந்தகுமார் மது போதையிலேயே தமிழக எல்லைக்கு நடந்து வந்தார். தொடர்ந்து அவரால் நடக்க முடியாமல் தமிழக எல்லைப்பகுதியில் மயங்கி கீழே விழுந்தார். தொடர்ந்து இரவு முழுவதும் அதே இடத்தில் கிடந்துள்ளார்.
இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் வசந்தகுமார் கத்திக்குத்து காயத்துடன் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து அதில் அவரை ஏற்றி சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓசூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டி வடமாநில வாலிபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியிருந்து தேன்கனிக்கோட்டை நோக்கி தனியார் பஸ் நேற்று மாலை வந்து கொண்டிருந்தது.
அந்தேவனப்பள்ளி கிராமம் அருகே வரும் பொழுது அதே கிராமத்தை சேர்ந்த குப்பண்ணா மகன் மாரிமுத்து (வயது 42), சரவணன் மகன் பிரசாந்த் (22) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று சாலையில் வளைவில் திரும்பும் பொழுது எதிரே வந்த தனியார் பஸ் மீது நேருக்கு நேர் மோதி உள்ளனர்.
இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் தலை, கை, காலில் அடிபட்டு படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக மாரிமுத்துவை பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கும், பிரசாந்தை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு மாரிமுத்து, பிரசாந்த் ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதி 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






