என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மின்கம்பத்தில் சிக்கி உயிருக்கு போராடிய இரு காகங்களை சக காகங்கள் சுற்றி வட்டமடித்து மீட்டகாட்சி.
  X
  மின்கம்பத்தில் சிக்கி உயிருக்கு போராடிய இரு காகங்களை சக காகங்கள் சுற்றி வட்டமடித்து மீட்டகாட்சி.

  போச்சம்பள்ளியில் மின்கம்பியில் சிக்கிய 2 காகங்கள்- காப்பாற்றிய காக்கை கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  போச்சம்பள்ளியில் மின்கம்பியில் சிக்கிய 2 காகங்களை கூட்டமாக வந்த காகங்கள் உயிருடன் மீட்டன.
  மத்தூர்:

  கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் நான்கு வழி சாலை சந்திப்பில் உள்ள ஒரு மின்கம்பத்தில் இரு காகங்கள் அமர்ந்திருந்தன. 

  தொடர்ந்து இரு காகங்களும் விளையாடி கொண்டிருந்த போது திடீரென எதிர்பாராதவிதமாக மின்கம்பியில் காகங்களின் கால்கள் சிக்கின. 

  இதனால் இரு காகங்களும் உயிருக்கு போராடிய நிலையில் கத்திக் கொண்டிருந்தது. இதை பார்த்து அங்கு நின்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

  அந்த சமயத்தில்  நாலாபுறமும் இருந்து 100-க்கும் மேற்பட்ட காகங்கள் கூட்டம் பறந்து வந்தன. 2 காகங்களையும் உயிருடன் மீட்க போராடின. சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு 2 காகங்களும் மற்ற காகங்கள் உயிருடன் மீட்டன.

  இந்த காட்சியை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து அதிசயித்து நின்றனர். தன் இனத்துக்கு ஒரு கஷ்டம் என்றால் ஒரணியில் நின்று போராடிய காகங்களின் குணத்தை கண்டு அனைவரும் பாராட்டி வியந்தனர்.
  Next Story
  ×