search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எருதுவிடும் விழா"

    • காளைகள் அவிழ்த்து விடப்பட்டதுடன் 100 மீட்டர் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன.
    • அசம்பாவிதங்களை தவிர்க்க வேப்பனப்பள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி 3-ம் ஆண்டு எருதுவிடும் விழா விமரிசையாக நடைபெற்றது.

    சூளகிரி, பேரிகை, பாகலூர், ஓசூர், ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, பர்கூர் காவேரிப்பட்டணம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில பகுதிகளில் இருந்தும் 250-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

    இதையடுத்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டதுடன் 100 மீட்டர் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. இலக்கை விரைவாக கடந்த காளைக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. மேலும் வெற்றி பெற்ற 50-க்கும் மேற்பட்ட காளைகளுக்கும் பரிசு வழங்கப்பட்டன.

    இந்த விழாவை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து கண்டு களித்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்க வேப்பனப்பள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்து அடக்கி பரிசுகளையும் அலங்கார தட்டிகளையும் பறித்து சென்றனர்.
    • ஆயிரக்கணக்கான பொதுக்கள் கலந்து கொண்டு எருது விடும் நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்தனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை பேட்டராயசுவாமி கோவில் தேர்திருவிழாவை முன்னிட்டு முதன்முதலாக எருதுவிடும் விழா நடைபெற்றது.

    இந்த எருது விடும் நிகழ்ச்சிகளில் அலங்கார தட்டிகள் மற்றும் பரிசுபொருட்களுடன் கிராமத்தின் மையப்பகுதியிலிருந்து அவிழ்த்து விடப்படும் காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்து அடக்கி பரிசுகளையும் அலங்கார தட்டிகளையும் பறித்து செல்வார்கள்.

    இதில் இளைஞர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்டு மாடுகளை பிடித்து அடக்குவார்கள்.

    இந்த நிலையில் இன்று தேன்கனிகோட்டை எருது விடும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான காளைகள் கொண்டுவரப்பட்டன.

    வண்ண வண்ண கொடிகள், அலங்கார தட்டிகள் மற்றும் பரிசுப்பொருட்கள் கட்டப்பட்ட ஆயிரக்கணக்கான காளைகள் அணி அணியாக கூட்டத்தில் சீறிப்பாய்ந்தன. களத்தில் சீறி வந்த காளைகளை மாடு பிடி வீரர்கள் பிடித்து அடக்கினர். அப்போது காளைகளின் மேல் இருந்த பரிசு பொருட்களையும் அலங்கார தட்டிகளையும் பறித்து சென்றனர்.

    இந்த விழாவில் தேன்கனிகோட்டை மற்றும் அதன் அருகேயுள்ள அஞ்செட்டி ராயகோட்டை கெலமங்கலம் சூளகிரி உள்ளிட்ட கிருஷ்ணகிரி மாவட்ட சுற்றுப்புற கிராமங்களிலிருந்தும் கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பொதுக்கள் கலந்து கொண்டு எருது விடும் நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்தனர்.

    தேன்கனிகோட்டையில் முதன்முறையாக எருதுவிடும் விழா நடைபெறுவதால் இப்பகுதியோ திருவிழா போல் காட்சி அளிக்கிறது.

    பேட்டராயசுவாமி கோயில் தேர்திருவிழா குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் எருது விடும் விழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறி இளைஞர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
    • ஏராளமான அரசு பஸ்கள், லாரிகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது கல்வீசி தாக்கியதில் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

    சூளகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் எருது விடும் விழா நடைபெற்று வருகிறது.

    இதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது.

    இதனிடையே ஓசூர் அருகே கோபசந்திரம் பகுதியில் சின்னதிருப்பதி கோவில் திருவிழாவையொட்டி இன்று எருது விடும் விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    ஆனால் இதற்கு, உாிய அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் விழாவையொட்டி அந்த பகுதியில் உள்ள காலி இடத்தை சீரமைத்து, தடுப்புகள் மற்றும் மேடை உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    100-க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டன. காளைகளை பிடிக்க எராளமான இளைஞர்களும் அங்கு திரண்டனர். ஆனால், எருது விடும் விழாவை நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெறாததால் தடை விதிக்கப்பட்டது.

    அதிகாரிகளும், போலீசாரும் அங்கு வந்து விழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை கூறி அனைவரையும் கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.

    இதனால் அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் ஆத்திரம் அடைந்தனர். திடீரென கிருஷ்ணகிரி-ஓசூர் சாலையில் திரண்ட அவர்கள் சாலையின் நடுவே கற்களை கொட்டி போக்குவரத்தை முடக்கினர்.

    மேலும் அவ்வழியாக வந்த வாகனங்களை மறித்து அவற்றின் மீது ஏறிநின்று மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி அவர்களை அங்கிருந்து விரட்டி அடித்தனர்.

    இந்நிலையில் இளைஞர்களின் போராட்டம் எதிரொலியாக மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி எருதுவிடும் விழா நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

    ஆனாலும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் எருது விடும் விழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.

    ஏராளமான அரசு பஸ்கள், லாரிகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது கல்வீசி தாக்கியதில் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

    இதனால் மீண்டும் அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசார் மீது கல்வீசினர்.

    இதில் போலீசார் சிலருக்கு மண்டை உடைந்து காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது.

    வாகனங்கள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. பின்னர் போலீசார் படிப்படியாக போக்குவரத்தை சீர் செய்தனர்.

    • கலெக்டர் எச்சரிக்கை
    • காவல்துறையினரின் அறிவுரைகளை கடைபிடிக்கப்படுவதில்லை என புகார்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    வேலுர் மாவட்டத்தில் எருதுவிடும் திருவிழா நடத்துவது தொடர்பாக அரசினால் தெரிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    எனினும் நிபந்தனை களை விழாக்குழுவினர் சரியான முறையில் கடைபிடிக்காமல் அலட்சியத்துடன் விழா நடத்தி வருவதாக புகார்கள் வரப்பெற்றுள்ளன. அச்சு மற்றும் சமூக ஊடகங்கள் மூலமும் அரசால் வழங்கப்பட்ட அறிவுரைகள் மீறப்படுவது தெரியவருகிறது.

    அரசின் விதிகளின்படி இரட்டை தடுப்பான்கள் அமைத்திருக்க வேண்டும். மாடுகள் ஓடும் இடத்தில் அதிபட்சமாக குறிப்பிடப்பட்ட 25 தன்னார்வ தொண்டர்களுக்கு அதிகமாகவும், எராளமான பொது மக்களும், காளை உரிமையாளர்களும் கூடி மாடுகள் எளிதான ஓடுவதற்கு தடையாக உள்ளனர்.

    விழா ஆரம்பம் மற்றும் முடிக்கும் நேரங்கள் நிபந்தனைகளில் உள்ளவாறு கடைபிடிக்கப்பது இல்லை. வருவாய் மற்றும் காவல்துறையினரின் அறிவுரைகளை கடைபிடிக்கப்படுவதில்லை. விழாக்குழுவினர் அதை கண்டுகொள்ளுவதும் இல்லை.

    அவ்வப்போது காளைகள் பொதுமக்கள் பகுதியில் எதிர்பாராத விதமாக புகுந்து பொது மக்களுக்கு காயத்தையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகிறது.

    அரசு வழங்கி உள்ள உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்து விழாக்குழுவினர் அந்தந்த கிராமங்களில் மிகவும் பாதுகாப்பான முறையிலும், பொதுமக்கள் மற்றும் காளைகளுக்கு பாதுகாப்பான முறையில் விழாக்கள் நடத்திக் கொள்ள சம்மந்தப்பட்ட விழாக்குழுவினருக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் பட்சத்தில் எருதுவிடும் விழா தடை செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • 50 கன்றுகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.
    • விழாவினை காண ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் வந்திருந்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை முடிந்த பின்பு தொடர்ந்து 3 மாதங்கள் பல்வேறு கிராமங்களில் எருதுவிடும் திருவிழா, எருதாட்டம் மற்றும் கன்று விடும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

    இந்த விழாவினை கிராம மக்கள் சிறப்பாக நடத்தி, போட்டி போட்டுக்கொண்டு பரிசுகளை வழங்கி வருகின்றனர்.

    அந்த வகையில் கிருஷ்ணகிரி அருகே உள்ள கே.திப்பனப்பள்ளி கிராமத்தில் கன்று விடும் விழா நடந்தது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட கன்றுகள் அழைத்துவரப்பட்டு, போட்டியில் பங்கேற்க செய்தனர்.

    இதில் குறைந்த தூரத்தை விரைவில் கடந்த கன்றுகளின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.30 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.25 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.20 ஆயிரம் என மொத்தம் 50 கன்றுகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். இந்த விழாவினை காண ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் வந்திருந்தனர்.

    ×