search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேன்கனிக்கோட்டையில் எருதுவிடும் விழா  கோலாகலம்
    X

    தேன்கனிக்கோட்டையில் எருதுவிடும் விழா கோலாகலம்

    • காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்து அடக்கி பரிசுகளையும் அலங்கார தட்டிகளையும் பறித்து சென்றனர்.
    • ஆயிரக்கணக்கான பொதுக்கள் கலந்து கொண்டு எருது விடும் நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்தனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை பேட்டராயசுவாமி கோவில் தேர்திருவிழாவை முன்னிட்டு முதன்முதலாக எருதுவிடும் விழா நடைபெற்றது.

    இந்த எருது விடும் நிகழ்ச்சிகளில் அலங்கார தட்டிகள் மற்றும் பரிசுபொருட்களுடன் கிராமத்தின் மையப்பகுதியிலிருந்து அவிழ்த்து விடப்படும் காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்து அடக்கி பரிசுகளையும் அலங்கார தட்டிகளையும் பறித்து செல்வார்கள்.

    இதில் இளைஞர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்டு மாடுகளை பிடித்து அடக்குவார்கள்.

    இந்த நிலையில் இன்று தேன்கனிகோட்டை எருது விடும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான காளைகள் கொண்டுவரப்பட்டன.

    வண்ண வண்ண கொடிகள், அலங்கார தட்டிகள் மற்றும் பரிசுப்பொருட்கள் கட்டப்பட்ட ஆயிரக்கணக்கான காளைகள் அணி அணியாக கூட்டத்தில் சீறிப்பாய்ந்தன. களத்தில் சீறி வந்த காளைகளை மாடு பிடி வீரர்கள் பிடித்து அடக்கினர். அப்போது காளைகளின் மேல் இருந்த பரிசு பொருட்களையும் அலங்கார தட்டிகளையும் பறித்து சென்றனர்.

    இந்த விழாவில் தேன்கனிகோட்டை மற்றும் அதன் அருகேயுள்ள அஞ்செட்டி ராயகோட்டை கெலமங்கலம் சூளகிரி உள்ளிட்ட கிருஷ்ணகிரி மாவட்ட சுற்றுப்புற கிராமங்களிலிருந்தும் கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பொதுக்கள் கலந்து கொண்டு எருது விடும் நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்தனர்.

    தேன்கனிகோட்டையில் முதன்முறையாக எருதுவிடும் விழா நடைபெறுவதால் இப்பகுதியோ திருவிழா போல் காட்சி அளிக்கிறது.

    பேட்டராயசுவாமி கோயில் தேர்திருவிழா குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    Next Story
    ×