எருதுவிடும் விழா

காளைகள் அவிழ்த்து விடப்பட்டதுடன் 100 மீட்டர் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன.அசம்பாவிதங்களை தவிர்க்க வேப்பனப்பள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சீறிப்பாய்ந்த காளையை படத்தில் காணலாம்.
சீறிப்பாய்ந்த காளையை படத்தில் காணலாம்.
Published on

வேப்பனப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி 3-ம் ஆண்டு எருதுவிடும் விழா விமரிசையாக நடைபெற்றது.

சூளகிரி, பேரிகை, பாகலூர், ஓசூர், ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, பர்கூர் காவேரிப்பட்டணம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில பகுதிகளில் இருந்தும் 250-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

இதையடுத்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டதுடன் 100 மீட்டர் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. இலக்கை விரைவாக கடந்த காளைக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. மேலும் வெற்றி பெற்ற 50-க்கும் மேற்பட்ட காளைகளுக்கும் பரிசு வழங்கப்பட்டன.

இந்த விழாவை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து கண்டு களித்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்க வேப்பனப்பள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com