என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் கணவன் கண்முன்னே மனைவி பரிதாபமாக இறந்தார்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே வேலாவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வைத்திலிங்கம். இவரது மனைவி அம்பிகா (வயது 40).

    இந்த நிலையில் நேற்று திருப்பத்தூரில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்று விட்டு கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு ஒரு வளைவில் திரும்பிய போது பின்னால் மண்எண்ணை பாரம் ஏற்றி வந்த லாரி , மோட்டார் சைக்கிள் மீது மோதி யது. இதில் தூக்கி வீசப்பட்டு அம்பிகா சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந் தார். அவரது கணவர் வைத்தி லிங்கம் படுகாயம் அடைந்தார்.

    இந்தவிபத்து பற்றி தகவல் கிடைத்ததும் மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் பலியான அம்பிகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வைத்திலிங்கம் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தமிழகத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தேவையின்றி வாகனங்களில் வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

    ஓசூர்:

    கொரோனா தொற்று கட்டுப்படுத்தலையொட்டி, தமிழகத்தில் 3-வது ஞாயிற்றுக்கிழமையான இன்றும், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

    இதையொட்டி, அனைத்து சிறிய, பெரியகடைகள் வர்த்தக நிறுவனங்கள், துணிக்கடைகள், டீ கடைகள், பூ மார்க்கெட்டுகள், உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும் பஸ் போக்குவரத்தும் இல்லாததால் பஸ் நிலையமும் வெறிச்சோடி இருந்தது. மக்கள் நடமாட்டமும் இல்லாததால், சாலைகள் அமைதியாக காணப்பட்டது.

    இந்த நிலையில், அண்டை மாநிலமான கர்நாடகாவில் முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதையடுத்து, அங்கிருந்து தமிழகம் நோக்கி வரும் வாகனங்களின் எண்ணிக்கை, இன்று காலை முதலே அதிகரித்தவாறு இருந்தது.

    ஓசூர் அருகே தமிழக எல்லையான ஜுஜுவாடி சோதனைச் சாவடியில், போலீசார் வாகனங்களில் வருபவர்களை தீவிரமாக சோதனையிட்டும், பயணிகளிடம் விசாரித்தும், அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே, மேற் கொண்டு வாகனங்களை செல்ல அனுமதித்தனர்.

    மேலும், தமிழகத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தேவையின்றி வாகனங்களில் வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

    ஒசூர் அருகே பேரண்டப்பள்ளியில் சுற்றித்திரியும் ஒற்றை யானையால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் பதுங்கியிருந்த 50-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்திற்கு விரட்டியடிக்கப்பட்டது.

    இந்த நிலையில், இந்த கூட்டத்திலிருந்து பிரிந்த 2 காட்டுயானைகள் மட்டும் சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டு சுற்றித் திரிந்தன. இந்த 2 காட்டு யானைகளில் ஒரு யானை, கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத் திற்கு சென்றது.  மற்றொரு யானை தற்போது பேரண்ட பள்ளி வனப்பகுதியில் முகாமிட்டு நடமாடி வருகிறது.

    இந்த யானை, பேரண்டபள்ளி வனப்பகுதியில், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து  500 மீட்டர் தொலைவில் முகாமிட்டு சுற்றிதிரிவதால், வனப்பகுதியை ஒட்டியுள்ள காவேரி நகர், கோபசந்திரம், ஆழியாளம், ராமாபுரம், போடூர், காமன்தொட்டி, நாயக்கனப்பள்ளி உள்ளிட்ட கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், பகல் நேரங்களில் விவசாய தோட்டங்களில் எச்சரிக்கையுடன் வேலை செய்ய வேண்டும், இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் சுற்றக் கூடாது  என்றும் வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே பெற்ற மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
    வேப்பனப்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே அத்திகுண்டா பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி. அவருக்கு 8 வயதில் மகள் உள்ளார். 

    நேற்று வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் அவரது தந்தை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

    சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அவரது தந்தை தப்பி ஓடினார். தகவல் அறிந்து தாய் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். 

    இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, பாலியல் தொந்தரவு செய்த தந்தையை போலீசார் தேடி வருகிறார்கள்.
    தங்கையை தவறாக பேசியதால் ஆத்திரத்தில் வாலிபரை அண்ணன் கொலை செய்த சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராம் நகர் ஏ.எஸ்.டி.சி. பள்ளம் பகுதியை சேர்ந்த தண்டாயுதபாணி என்பவரது மகன் வினோத்குமார் (வயது19), கட்டிட தொழிலாளி.

    இந்த நிலையில் நேற்று சீனிவாஸ் (18) மற்றும் மதன்குமார்(18) ஆகிய சக நண்பர்களுடன், ஓசூர் ஜீவா நகரில், முருகேஷ் என்பவரது கட்டிடத்தில் சென்ட்ரிங் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

    நள்ளிரவு 12 மணியளவில், அவர்கள் 3 பேரும் அந்த பகுதியில் இருந்தபோது, அங்கு வந்த 2 பேர் வினோத்குமாரையும், தடுக்கச் சென்ற சீனிவாசையும் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதில் வினோத்குமார், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சீனிவாசுக்கு தோள் பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மதன்குமாருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

    இதுபற்றி ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து கொலையுண்ட வினோத் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்துவந்தனர்.

    இதில் வினோத்குமாரை ஓசூர் தின்னூர் பகுதியை சேர்ந்த குல்லா என்கிற சந்தோஷ் (19) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சுல்தான் ஆகியோர் குத்தி கொன்றது தெரிய வந்தது.

    அதாவது குல்லாவின் தங்கையை பற்றி வினோத்குமார் அவதூறாக பேசியது தெரியவந்தது. இதையடுத்து மதுபோதையில் அவர்கள் 2 பேரும், வினோத்குமாரை கத்தியால் குத்திக்கொன்றது தெரிய வந்தது.

    இதுதொடர்பாக ஒசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு வினோத்குமாரை கொலை செய்த குல்லா மற்றும் சுல்தான் ஆகியோரை கைது செய்தனர்.

    தங்கையை தவறாக பேசியதால் ஆத்திரத்தில் வாலிபரை அண்ணன் கொலை செய்த சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கெலமங்கலம் அருகே வாலிப˜ தலையில் கல்லை போட்டு கொன்ற வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே எச்.செட்டிப்பள்ளி ஊராட்சி கூட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜூன். விவசாயி. இவரது மகன் பழனி (வயது 26). இவர் டைல்ஸ் தொழிலாளியாக இருந்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை அப்பகுதிய¤ல் உள்ள அரசு பள்ளியின் பின்புறம் உள்ள சுடுகாட்டில் பழனி ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது உடல் அருகே ஒரு பெரிய கல் கிடந்தது. இதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து கெல மங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து தேன்கனிக் கோட்டை டி.எஸ்.பி. கிருத்திகா, ராயக்கோட்டை இன்ஸ் பெக்டர் சுப்பிர மணி, கெலமங்கலம் சப்& இன்ஸ் பெக்டர்கள் கார்த்தி கேயன், பார்த்திபன் மற்றும் போலீசார் விரைந்து வந்த னர்.
    போலீசாரின் விசார ணையில் பழன¤யை மர்ம கும்பல் தலையில் கல்லை போட்டு கொன்றது தெரிய வந்தது.  பின்னர் கொலையுண்ட பழனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் மது குடிக்கும் தகராறில் பழனி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளிகளான முனிராஜ் மகன் சாமி (19), மாதேஸ் மகன் விஜய்(23) ஆகியோருடன் பழனி மது குடித்துள்ளார். அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சாமி, விஜய் ஆகியோர் பழனியை சரமாரியை தாக்கி அவரது தலையில் கல்லை போட்டு கொன்றது தெரிய வந்தது. 

    இதையடுத்து பழனியை கொலை செய்த வாலிபர்கள் சாமி, விஜய் ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
    தலையில் கல்லை போட்டு வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் , கெலமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஓசூர் சிப்காட் பகுதியில் கர்நாடக மதுபாட்டில்களை விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் போலீசார் பேகேபள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு மறைவான பகுதியில், கர்நாடக மதுபானங்களை விற்ற பெண் ஒருவர் பிடிபட்டார். 

    போலீசார் விசார ணையில், அவர் கோவிந்த அக்ரஹாரத்தை சேர்ந்த ஜெயேந்திரன் என்பவரது மனைவி நீலம்மா (வயது50) என்பது தெரியவந்தது.இதைதொடர்ந்து, நீலம்மாவை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ரூ.2,686 மதிப்பிலான 48 கர்நாடக மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே நிலத்தகராறில் ஏற்பட்ட மோதலில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள கே.மோட்டூர் பகுதியை சேர்ந்த சண்முகம் (வயது45) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த உறவினர்களான ரவி (34) ஆகிய இவர்களுக்கு நீண்ட நாட்களாக வழிதகராறு பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

    இந்த நிலையில் இரு தரப்பை சேர்ந்தவர்களும்  கடந்த 18-ந்தேதி அன்று மீண்டும் வழி தகராறு காரணமாகி சண்டை போட்டு தாக்கி கொண்டுள்ளனர். 

    இது குறித்து போச்சம்பள்ளி போலீசில் ரவி அளித்த புகாரின் பேரில் சண்முகம் (45), அவரது மகன் ராக்கேஷ் (22) வழக்குபதிவு செய்தும், அதே போல் சண்முகம் அளித்த புகாரின் பேரில் சங்கர் (31), ரவி (34) ஆகிய இரு தரப்பை சேர்ந்த 4 பேர் மீது வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.
    மத்தூர் அருகே கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மாணவி மாயமானார்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள அத்திப் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் செங்டுட்டுவன். இவரது மகள் ஜெய்சூரியா (வயது23). இவர் எம்.காம் வரை படித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார்.

    இவர் நேற்று முன்தினம் கடைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.இதனால் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 

    இது குறித்து மாணவியின் தந்தை செங்குட்டுவன் மத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவி ஜெய்சூரியாவை தேடி வருகின்றார்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பகுதியில் வேலைக்கு சென்ற 2 பெண்கள் மாயமாகி உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகள் சங்கவி (வயது 19). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து அப்பகுதியில் உள்ள பேன்சி கடையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சங்கவி, அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிவக்குமார், உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தார். ஆனால் காணவில்லை.

    இதுபற்றி மத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி றார்கள்.

    இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அடுத்த காவாப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த், விவசாயி. இவரது மனைவி அமிர்தவள்ளி (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. கவுசல்யா என்ற 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் அமிர்தவள்ளி, போச்சம்பள்ளியில் உள்ள ஒரு தனியார் ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த 10 மாதமாக அங்கு வேலை பார்த்து வருகிறார். இதற்கிடையே கடந்த 17-ந் தேதி அமிர்தவள்ளிவேலைக்கு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் அவரது கணவர் பிரசாந்த், பல இடங்களில் மனைவியை தேடி பார்த்தார். ஆனால் காணவில்லை. இதுபற்றி அவர் நாகரசம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஓசூரில் தலைமறைவாக இருந்த 2 குற்றவாளிகள் நீதிபதி முன்னிலையில் சரண் அடைந்தனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்திற் குட்பட்ட பகுதியில் கடந்த 2013-ஆம் ஆண்டு கொள்ளை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக 8 பேர் மீது வழக்குபதிவு செய்யப் பட்டது. 

    இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கோணிக்கரையை சேர்ந்த பாபு (33) மற்றும் கிருஷ்ணகிரியை சேர்ந்த தியாகு (44) ஆகிய 2 பேருக்கும் கடந்த 2019- ஆம் ஆண்டு ஓசூர் சப் கோர்ட்டில் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதிக் கப்பட்டது. 

    இந்த தீர்ப்பை எதிர்த்து ஓசூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோதிலும், கடந்த 27-07-&2021 அன்று மேற்கண்ட தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த குற்றவாளிகள் இருவரும் தலைமறை வாகிவிட்டனர்.

    இந்த நிலையில் குற்றவாளிகள் பாபு மற்றும் தியாகு ஆகிய இருவரும் நேற்று ஓசூர் கூடுதல் மாவட்ட நீதிபதி ரோசலின் துரை முன்னிலையில் சரணடைந்தனர்.
    போச்சம்பள்ளி அருகே பட்டதாரி மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி  அருகே உள்ள ஜம்புகுட்டப்பட்டியை அடுத்துள்ள் காரகுட்டை பகுதியை சேர்ந்தவர் மாது. இவரது மகள் பவித்ரா (வயது19). இவர் தருமபுரி தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு பி.காம் படித்து வருகிறார். 
     
    இந்த நிலையில் இவருக்கும் போச்சம்பள்ளி அருகே உள்ள பழனிஆண்டவர் கோவில் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (22) என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப் படுகிறது. 

    நேற்று திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பவித்ராவை விக்னேஷ் கடத்தியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து  மாணவியின் சகோதரர் பார்தீபன் போச்சம்பள்ளி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி  விசாரித்து வருகின்றார்.
    ×