search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    பேரண்டப்பள்ளி பகுதியில் சுற்றிதிரியும் ஒற்றை யானை பொதுமக்கள் பீதி

    ஒசூர் அருகே பேரண்டப்பள்ளியில் சுற்றித்திரியும் ஒற்றை யானையால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் பதுங்கியிருந்த 50-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்திற்கு விரட்டியடிக்கப்பட்டது.

    இந்த நிலையில், இந்த கூட்டத்திலிருந்து பிரிந்த 2 காட்டுயானைகள் மட்டும் சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டு சுற்றித் திரிந்தன. இந்த 2 காட்டு யானைகளில் ஒரு யானை, கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத் திற்கு சென்றது.  மற்றொரு யானை தற்போது பேரண்ட பள்ளி வனப்பகுதியில் முகாமிட்டு நடமாடி வருகிறது.

    இந்த யானை, பேரண்டபள்ளி வனப்பகுதியில், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து  500 மீட்டர் தொலைவில் முகாமிட்டு சுற்றிதிரிவதால், வனப்பகுதியை ஒட்டியுள்ள காவேரி நகர், கோபசந்திரம், ஆழியாளம், ராமாபுரம், போடூர், காமன்தொட்டி, நாயக்கனப்பள்ளி உள்ளிட்ட கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், பகல் நேரங்களில் விவசாய தோட்டங்களில் எச்சரிக்கையுடன் வேலை செய்ய வேண்டும், இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் சுற்றக் கூடாது  என்றும் வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினர்.
    Next Story
    ×