என் மலர்
கிருஷ்ணகிரி
அஞ்செட்டி வனப்பகுதியில் ஒற்றை யானை தாக்கி முதியவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள அஞ்செட்டி பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒற்றை யானை தாக்கி ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் அந்த பகுதி மக்கள் காட்டு யானைகளை கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என்று போராட்டம் செய்து இருந்தனர். இதற்கு வனத்துறையினர் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி விடுவோம் என்று கூறியதால் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.
இந்த நிலையில் மாடு மேய்க்க சென்ற முதியவர் ஒற்றை யானை தாக்கி பலியான சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே சித்தாண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 70). விவசாயி. இவருக்கு சரோஜா என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர். இவர் ஆடுகளை வளர்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அந்தக் கிராமத்தை சேர்ந்தவர்கள் சிலர் இவரும் கூட்டமாக ஆடுகளை மேய்க்க சென்றுள்ளனர். ஆடுகளை மேய்த்து மாலையில் அனைவரும் ஆடுகளுடன் வீடு திரும்பியுள்ளனர்.
வரும் வழியில் யானையின் பிளறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் பீதி அடைந்த அவர்கள் வேகமாக ஓடி வீடு திரும்பினர். இதில் கன்னியப்பன் மட்டும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் இரவு முழுவதும் தேடிப் பார்த்தனர். ஆனால் அவரை காணவில்லை.
இந்த நிலையில் இன்று காலை வனப்பகுதியில் உள்ள சின்ன வண்ணாத்திப்பாறை என்ற இடத்தில் கன்னியப்பன் உடலில் காயங்களுடன் முகம் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்ததும் உறவினர்களும் கிராம மக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஒற்றை யானை தாக்கி கன்னியப்பன் பலியானது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அஞ்செட்டி வனச்சரகர் சீதாராமன் மற்றும் வனத்துறையினர் அஞ்செட்டி காவல் ஆய்வாளர் குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் ஒற்றை யானை தாக்கி பலியான கன்னியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அஞ்செட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தொடர்ந்து வனப்பகுதியில் ஒற்றை யானையின் நடமாட்டத்தை வனத் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
ஒற்றை யானை தாக்கி முதியவர் பலியான சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற13 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு மற்றும் போலீசார், நேற்று முன்தினம் நள்ளிரவில் கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி அருகே வாகன சோதனை நடத்தினர். நள்ளிரவு 12.30 மணிக்கு அந்த வழியாக வந்த சரக்கு லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 264 மூட்டைகளில் தலா 50 கிலோ எடையுடன் மொத்தம் 13.2 டன் ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது. குந்தாரப்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடகாவில் அதிக விலைக்கு விற்பதற்காக கொண்டு சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து லாரியை ஓட்டி வந்த குப்பச்சிபாறையை சேர்ந்த மூர்த்தி (வயது 35) என்பவரை கைது செய்து ரேஷன் அரிசியுடன் லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் வாகனம் மோதியதில் முதியவர் பலியானார்.
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே ஜெகதாப் பிரிவு ரோடு அருகே கடந்த 26ந் தேதி அதிகாலை 3 மணியளவில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. மேலும் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தையும் போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாயமான தனியார் நிறுவன ஊழியரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசனட்டி பாரதி நகர் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீகணேஷ் (வயது 32). இவர், தனியார் வாஷிங்மெஷின் நிறுவனத்தின் சர்வீஸ் மையத்தில் வேலை செய்து வருகிறார்.
கடந்த 22-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லையாம். இதனால் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால், அவரது மனைவி ஸ்ரீதேவி, நேற்று ஓசூர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே இருதரப்பினர் மோதலில் பெண் காயமடைந்தார். இதுகுறித்து 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் அடுத்துள்ள காவாபுதூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் கவிதா (வயது28). இவருக்கும், இவரது உறவினர்களுக்கு இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று பழனி, மாது, கார்த்திக்கேயன், ஜெயா, சக்தி, ராஜேஸ்வரி ஆகியோர் சேர்ந்து கவிதாவை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த கவிதாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்து வமனையில் சேர்த்தனர்.
இது குறித்து பாரூர் போலீசில் இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் பழனி, மாது, கார்த்திக்கேயன், ஜெயா, சக்தி, ராஜேஸ்வரி மற்றும் கவிதா 7 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அடுத்த மகராஜகடை அருகே தந்தையை கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், மகராஜகடை அருகே உள்ள ஏக்கல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன் (வயது 68). விவசாயி. ஆடுகளை வளர்த்து வந்தார். இவருக்கு 4மகன்கள், 1மகள் உள்ளனர். தினமும் அவர் பலிகுமாரமத்துபாறை ஏறுமலை வனப்பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்காக கொண்டுசென்று வருவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி அவர் ஆடுகளை மேய்ச்சலுக்காக கொண்டு சென்றார். ஆனால் மாலை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர்கள் தேடி பார்த்தனர். அப்போது வனப்பகுதியில் முனியப்பன் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் சந்தேக மரணம் என மகராஜகடை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், முனியப்பனை அவரது இரண்டாவது மகன் வெங்கடேசன் (எ) சின்னபையன் (37), தந்தையை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து வெங்கடேசனை போலீஸார் கைது செய்தனர்.
தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடுகளால் குறைந்த அளவிலேயே பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவர் கோயிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.
காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், அஸ்டதிக்பதி ஹோமம், நவகிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், காலபைரவ மஹா ஹோமம், பூர்ணாஹூதி, காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, தீர்த்தப்பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. பகல் 12 மணிக்கு கால பைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது.
இதில், பெண்கள் பங்கேற்று பூசணி மற்றும் தேங்காயில் விளக்கேற்றி நேர்த்திக் கடன் செலுத்தினர். கொரோனா கட்டுப்பாடுகளால் குறைந்த அளவிலேயே பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, 165 கிராமங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டன.
இதே போல், கிருஷ்ணகிரி அடுத்த சூரன் குட்டையில் உள்ள தஷ்ண கால பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. இதில் சூரன் குட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரிக்கு 2 பேர் தங்களது உடலை தானம் செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் செஞ்சிலுவை சங்கம் சார்பில், காவேரிப்பட்டணம் சந்தைபாளையம் பாண்டியன் (வயது56), எர்ரஹள்ளி ராமசாமி(71) ஆகிய இருவரும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பயிற்சி மற்றும் ஆய்விற்காக தங்களது உடலை தானம் செய்தனர்.
காவேரிப்பட்டணம் செஞ்சிலுவை சங்கம் சார்பில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு ஏற்கனவே 21 பேர் உடல் தானம் செய்துள்ளனர்.
இது குறித்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் அசோகன் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டு முதல் அரசு மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும், 150 மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மாணவர்களின் கல்வி ஆராய்ச்சிக்காக ஒவ்வொரு வருடமும் 10 முதல் 15 பிரேத உடல்கள் தேவைப்படுகிறது.
உடல் தானம் அளிக்க முன்வருபவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி உள்ளிருப்பு மருத்துவ அலுவலரை தொடர்பு கொண்டு முழு உடல் தான உறுதிமொழிப் படிவத்தை பூர்த்தி செய்தோ, செஞ்சிலுவை சங்கம் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலமாகவோ பதிவு செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கிருஷ்ணகிரியில் சலூன் கடைக்காரர் வீட்டில் நகை, பணத்தை திருடிய தருமபுரி தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் செல்லும் சாலையில் வசித்து வந்தவர் மணிகண்டன். இவரது மனைவி நித்யா (வயது33). இவர் கிருஷ்ணகிரியில் சலூன் கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நித்யாவுக்கு தருமபுரி ரெயில் நிலைய சாலை பகுதியை சேர்ந்த பாண்டியன் (25), பவானி (25) ஆகிய இருவரும் கடந்த 7 வருட நண்பர்கள் ஆவர்.
கடந்த 21-ந்தேதி அன்று சலூன் கடைக்கு பாண்டியன், பவானி ஆகியோர் வந்தனர். அப்போது பசிக்குது சாப்பாடு சாப்பிட வேண்டும், அதனால் உனது வீட்டின் சாவியை கொடு என்று நித்யாவிடம் கூறினார்.
இதையடுத்து அவரும் உடனே சாவியை கொடுத்து விட்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நித்யாவின் வீட்டை திறந்து இருவரும் சாப்பிட்டனர். அப்போது அங்கிருந்த 7 முக்கால் பவுன் தங்க நகை மற்றும் 25 ஆயிரம் பணம் ஆகியவைகளை திருடி விட்டு சென்றனர்.
பின்னர் இரவு வீட்டிற்கு வந்து பார்த்த போது நித்யா அதிர்ச்சி அடைந்தார். அப்போது வீட்டில் இருந்து நகை, பணம் ஆகியவை திருடுபோனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டியன், பவானி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
தங்க நகைகள் திருடு போனதாக போலீசில் புகார் அளித்து மோசடியில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட மொத்தம் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஓசூர்:
ஓசூர் தாலுக்கா பாகலூர் அருகே எல்லையில் உள்ள கர்நாடக மாநிலம் சர்ஜாபுரா பகுதியில் தங்க நகைகள் திருடு போனதாக போலீசில் புகார் அளித்து மோசடியில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட மொத்தம் 7 பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
சர்ஜாபுரா பகுதியை சேர்ந்தவர் ரவி பிரகாஷ் (வயது60). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்ஜாபுரம் காவல் நிலையத்தில், தனது வீட்டில் 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ தங்க நகைகள் திருடு போனதாக புகார் அளித்தார்.
அந்தப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சர்ஜாபுரா போலீசார், திருட்டு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது போலீசாருக்கு எந்தவித துப்பும் கிடைக்க வில்லை. குற்றவாளிகளும் சிக்கவில்லை.
இதனைத்தொடர்ந்து போலீசார் ரவிபிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் திருட்டு சம்பவம் எப்படி நடந்தது? என தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் போலீசாருக்கு பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.
அதன்படி, ரவி பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் என மொத்தம் 7 பேர் சேர்ந்து தங்களுக்கு சொந்தமான தங்க நகைகளை அடமானம் வைத்து விட்டு அதனை காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் அளித்து காவல் நிலையத்திலிருந்து தங்க நகைகளை மீண்டும் ரெக்கவரி மூலம் பெற்றுக்கொள்ளலாம் என மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
போலீசார் விசாரணையில், ரவி பிரகாஷ், அவரது மகன் மிதுன் குமார், மருமகள் சங்கீதா மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என 7 பேரும், இந்த மோசடி சம்பவத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
ரவி பிரகாஷ் உள்பட இந்த 7 பேரும் தங்களது தங்க நகைகளை தீபக் மூலம் அங்குள்ள அடகு கடை ஒன்றில் அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர்.
பின்னர் தங்களது வீட்டில் 1 கிலோ எடையுள்ள தங்க நகைகள் திருடு போனதாக சர்ஜாபுரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
போலீசார் திருட்டு நகைகள் குறித்து விசாரணை நடத்தி ஏதாவது ஒரு வழக்கில் கொள்ளையர்களிடம் இருந்து தங்க நகைகளை மீட்டால், அந்த நகைகளை தங்களுக்கு வழங்குவார்கள். அதனை பெற்று கொள்ளலாம், என்ற அடிப்படையில் இந்த மோசடி சம்பவத்தில் இவர்கள் அனைவரும் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
போலீசார் ரவிபிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் திருட்டு சம்பவம் எப்படி நடந்தது? என தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.
ஓசூர்:
ஓசூர் தாலுக்கா பாகலூர் அருகே எல்லையில் உள்ள கர்நாடக மாநிலம் சர்ஜாபுரா பகுதியில் தங்க நகைகள் திருடு போனதாக போலீசில் புகார் அளித்து மோசடியில் ஈடுபட்ட 3 பெண்கள் உட்பட மொத்தம் 7 பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
சர்ஜாபுரா பகுதியை சேர்ந்தவர் ரவி பிரகாஷ் (வயது60). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்ஜாபுரம் காவல் நிலையத்தில், தனது வீட்டில் 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ தங்க நகைகள் திருடு போனதாக புகார் அளித்தார்.
அந்தப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சர்ஜாபுரா போலீசார், திருட்டு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டும் திருட்டு சம்பவம் குறித்து எந்தவித துப்பும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. குற்றவாளிகளும் சிக்கவில்லை.
இதனைத்தொடர்ந்து போலீசார் ரவிபிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் திருட்டு சம்பவம் எப்படி நடந்தது? என தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் போலீசாருக்கு பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.
அதன்படி, ரவி பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் என மொத்தம் 7 பேர் சேர்ந்து தங்களுக்கு சொந்தமான தங்க நகைகளை அடமானம் வைத்து விட்டு அதனை காணாமல் போனதாக காவல்நிலையத்தில் புகார் அளித்து காவல் நிலையத்திலிருந்து தங்க நகைகளை மீண்டும் ரெக்கவரி மூலம் பெற்றுக்கொள்ளலாம் என மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
போலீசார் விசாரணையில், ரவி பிரகாஷ், அவரது மகன் மிதுன் குமார், மருமகள் சங்கீதா மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என 7 பேரும், இந்த மோசடி சம்பவத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
ரவி பிரகாஷ் உள்பட இந்த 7 பேரும் தங்களது தங்க நகைகளை தீபக் மூலம் அங்குள்ள அடகு கடை ஒன்றில் அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர்.
பின்னர் தங்களது வீட்டில் 1 கிலோ எடையுள்ள தங்க நகைகள் திருடு போனதாக சர்ஜாபுரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
போலீசார் திருட்டு நகைகள் குறித்து விசாரணை நடத்தி ஏதாவது ஒரு வழக்கில் கொள்ளையர்களிடம் இருந்து தங்க நகைகளை மீட்டால், அந்த நகைகளை தங்களுக்கு வழங்குவார்கள். அதனை பெற்று கொள்ளலாம், என்ற அடிப்படையில் இந்த மோசடி சம்பவத்தில் இவர்கள் அனைவரும் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல கர்நாடக மாநிலம் கே.ஆர். புரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் இதுபோன்று புகார்கள் அளித்து காவல் நிலையங்களில் இருந்து தங்க நகைகளை இவர்கள் வாங்கியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி அருகே அண்ணன் உறவுமுறை வாலிபருடன் கொண்ட காதலால் மனமுடைந்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் கானமுட்லு அருகே பெரிய மோட்டூர் கிராமத்தை சேர்ந்த 16 வயதுடைய இளம்பெண், அண்ணன் உறவு முறையில் உள்ள ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அந்த பெண்ணின் உறவினர்கள், கண்டித்து பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இளம்பெண் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அண்ணன் முறை வாலிபருடன் காதல் செய்த இளம்பெண், விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.