என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    சலூன் கடைக்காரர் வீட்டில் நகை, பணம் திருடிய தருமபுரி தம்பதி கைது

    கிருஷ்ணகிரியில் சலூன் கடைக்காரர் வீட்டில் நகை, பணத்தை திருடிய தருமபுரி தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் செல்லும் சாலையில் வசித்து வந்தவர் மணிகண்டன். இவரது மனைவி நித்யா (வயது33). இவர் கிருஷ்ணகிரியில் சலூன் கடை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் நித்யாவுக்கு தருமபுரி ரெயில் நிலைய சாலை பகுதியை சேர்ந்த பாண்டியன் (25), பவானி (25) ஆகிய இருவரும் கடந்த 7 வருட நண்பர்கள் ஆவர்.

    கடந்த 21-ந்தேதி அன்று சலூன் கடைக்கு பாண்டியன், பவானி ஆகியோர் வந்தனர். அப்போது பசிக்குது சாப்பாடு சாப்பிட வேண்டும், அதனால் உனது வீட்டின் சாவியை கொடு என்று நித்யாவிடம் கூறினார். 

    இதையடுத்து அவரும் உடனே சாவியை கொடுத்து விட்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நித்யாவின் வீட்டை திறந்து இருவரும் சாப்பிட்டனர். அப்போது அங்கிருந்த 7 முக்கால் பவுன் தங்க நகை மற்றும் 25 ஆயிரம் பணம் ஆகியவைகளை திருடி விட்டு சென்றனர்.

    பின்னர் இரவு வீட்டிற்கு வந்து பார்த்த போது நித்யா அதிர்ச்சி அடைந்தார். அப்போது வீட்டில் இருந்து நகை, பணம் ஆகியவை திருடுபோனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

    இது குறித்து அவர் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாண்டியன், பவானி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
    Next Story
    ×