என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
ஓசூரில் தனியார் நிறுவன ஊழியர் மாயம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மாயமான தனியார் நிறுவன ஊழியரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசனட்டி பாரதி நகர் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீகணேஷ் (வயது 32). இவர், தனியார் வாஷிங்மெஷின் நிறுவனத்தின் சர்வீஸ் மையத்தில் வேலை செய்து வருகிறார்.
கடந்த 22-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லையாம். இதனால் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால், அவரது மனைவி ஸ்ரீதேவி, நேற்று ஓசூர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






