என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், எம்.பி.க்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்.
    • தமிழக எம்.பி.க்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக சுதர்சன் ரெட்டி நேற்று சென்னை வந்தார்.

    துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்த பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி நடைபெறுகிறது.

    இதற்காக பா.ஜ.க. கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா கவர்னராக இருந்த தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியா கூட்டணி சார்பில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி களம் இறக்கப்பட்டுள்ளார். அவர் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், எம்.பி.க்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்.

    அந்தவகையில் தமிழக எம்.பி.க்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக சுதர்சன் ரெட்டி நேற்று சென்னை வந்தார். அவரை கூட்டணி கட்சி எம்.பி.க்கள் வரவேற்றனர்.

    பின்னர் சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், எம்.பி.க்களிடம் ஆதரவு திரட்டினார்.

    தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப் பெருந்தகை ஆகியோருடன் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்பி, துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவு மற்றும் வாழ்த்தினை தெரிவித்தார்.

    • தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாவட்டம் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார்.
    • ஓயாசீஸ் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு 2 வகுப்பறைகள் கட்டுவதற்கு 54 லட்சத்து 40 ஆயிரம் ஒதுக்கப்பட்டது.

    ஓயாசீஸ் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பள்ளியில்  தொகுதி மேம்பாட்டு நிதி 54.40 லட்சத்தில் 2 வகுப்பறைகள் கட்ட அடிக்கல் நாட்டினார் குமரி எம்பி விஜய்வசந்த்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாவட்டம் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார்.

    இதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் செட்டிகுளம் அரசு தொடக்க பள்ளியில் அமைந்துள்ள ஓயாசீஸ் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு  2 வகுப்பறைகள் கட்டுவதற்கு 54 லட்சத்து 40 ஆயிரம் ஒதுக்கப்பட்டது அதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்  கலந்து கொண்டு பூமி  பூஜை தொடங்கி வைத்தார்

    நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா மாவட்ட கல்விதுறை அதிகாரி பாலதண்டாயுதபாணி, மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், மாநில காங்கிரஸ் செயலாளர் சீனிவாசன், கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டாக்டர் சிவகுமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆரோக்கியராஜன், வட்டாரத் தலைவர் அசோக்ராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், வார்டு தலைவர் வர்கீஸ், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி சகாய பிரவீன், காங்கிரஸ் விளையாட்டு துறை கிழக்கு மாவட்ட தலைவர் அருண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விஜய் வசந்த் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து குமரி மாவட்ட மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார்.
    • அரசு பள்ளியில் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு வகுப்பறை கட்டுவதற்கு ரூ.54 லட்சத்து 40 ஆயிரம் ஒதுக்கீடு.

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து குமரி மாவட்ட மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார்.

    இதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் செட்டிகுளம் அரசு பள்ளியில் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு வகுப்பறை கட்டுவதற்கு ரூ.54 லட்சத்து 40 ஆயிரம் ஒதுக்கப்பட்டு, அதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக விஜய்வசந்த் எம்.பி பங்கேற்று பூஜையை தொடங்கி வைத்தார்.

    இதில் கலெக்டர் அழகுமீனா, மாவட்ட கல்வி துறை அதிகாரி பாலதண்டாயுதபாணி, மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன் குமார், மாநில காங்கிரஸ் செயலாளர் சீனிவாசன், கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டாக்டர் சிவகுமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆரோக்கியராஜ், வட்டார தலைவர் அசோக்ராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் ராதா கிருஷ்ணன், வார்டு தலைவர் வர்கீஸ், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் மற்றும் அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    மேலும், தக்கலையில் வசந்த் அன்கோவின் 130-வது கிளை இன்று திறக்கப்பட்டது. வசந்த் அன்கோ பார்ட்னர் விஜய்வசந்த் எம்.பி. புதிய கிளையை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், தாரகை கத்பட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
    • கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் டெல்லியில் உள்ள அவரது ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    நாடு முழுவதும் மறைந்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    ராஜீவ் காந்தியின் 81-வது பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் டெல்லி ராஜ்காட் வீர்பூமியில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    • சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
    • டலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி:

    சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் சுதந்திர தின விழா தொடர் விடுமுறை சனி மற்றும் ஞாயிற்றுகிழமை வார இறுதி விடுமுறையையொட்டி கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

    குறிப்பாக வட மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். பின்னர் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் வந்து காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் சுற்றுலா பயணிகள் படகுதுறையில் நீண்ட வரிசையில் காத்திருந்து விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை மற்றும் கடலில் அமைந்துள்ள கண்ணாடி பாலத்தை படகு மூலம் ஆர்வமுடன் சென்று பார்வையிட்டு வந்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 10 ஆயிரத்து 147 சுற்றுலா பயணிகள் படகில் சென்று விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி பாலத்தை பார்வையிட்டு உள்ளனர்.

    மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக பெருஞ்சுவர், காந்தி நினைவு மண்டபம் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • போலி பெயர்களில் வாக்காளர் அடையாள அட்டைகளை உருவாக்கி உள்ளனர்.
    • வெளி மாநிலங்களில் இருந்து வருகின்றவர்கள் முடிவு செய்யக்கூடாது.

    நாம் நமது தேசத்தின் 79வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த நாளில், அனைவருக்கும் எனது சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி, நம் தேசம் அடிமைத்தனத்தின் சங்கிலிகளை முறித்து, சுதந்திரத்தின் ஒளியை கண்டது. அந்த சுதந்திரத்தை பெற, எண்ணற்ற சுதந்திர வீரர்கள் தங்கள் உயிரையும், குடும்பத்தையும், சொத்தையும் தியாகம் செய்தனர்.

    இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தின் ஒவ்வொரு மூச்சிலும், அவர்கள் ரத்தமும், வியர்வையும், உறுதியும் கலந்திருக்கிறது. அவர்களின் தியாகத்தை நினைவு கூர்வது நமது கடமை. நான் பெற்ற இந்த சுதந்திரத்தைப் பாதுகாத்து, வளர்த்து அடுத்த தலைமுறைக்கு பெருமையாகக் கையளிப்பது நமது லட்சியமாக இருக்க வேண்டும்.

    இன்று நாம் பிரிவினையை விட ஒற்றுமையையும், வெறுப்பை விட அன்பையும் தேர்ந்தெடுக்க வேண்டும். பிரிவினை மற்றும் வெறுப்பை விதைக்க நினைக்கும் சக்திகளை இனம் கண்டு தோற்கடிப்போம். நம் தேசத்தின் செழிப்பு, மக்களின் ஒற்றுமை, இளைஞர்களின் முன்னேற்றம், பெண்களின் உரிமைகள், விவசாயிகள் மற்றும் மீனவர்களின் நலன் இவை அனைத்தும் நமது நோக்கமாக இருக்க வேண்டும்.

    சுதந்திர இந்தியாவில் நமக்கு கிடைத்த உரிமைகளை பறிக்க முயற்சிகள் நடக்கிறது. நமது அடிப்படை உரிமையான வாக்குரிமை கூட கேள்விகுறியாக உள்ளது. நமது உரிமைகளை பறிக்க நினைக்கும் சக்திகளை வீழ்த்துவோம்.

    இந்த சுதந்திர தினத்தில், நம் தேசத்தை நீதியிலும் சமத்துவத்திலும் வளர்க்க உறுதிபடுவோம்.

    "நாடு முதலில், நாமெல்லாம் ஒன்றாக" இந்த உணர்வோடு முன்னேறுவோம்.

     

    முன்னதாக இந்திய அரசியல் சட்டத்தை அழிக்க நினைக்கும் மத்திய பிஜேபி அரசை கண்டித்து குருந்தன்கோடு கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் குருந்தன்கோடு சந்திப்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு குருந்தன்கோடு கிழக்கு வட்டாரத் தலைவர் பொன். பால் துரை தலைமை தாங்கினார், கண்டன பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தேர்தல் ஆணையம் போட்டோவை பயன்படுத்தி போலி பெயர்களில் வாக்காளர் அடையாள அட்டைகளை உருவாக்கி உள்ளனர். அதேபோல பல இடங்களில் வாக்காளர்களை சேர்த்தும், நீக்கியம் உள்ளனர். இப்படி நிறைய விஷயங்கள் நடந்துள்ளது. இதற்கான தெளிவான விளக்கம் வேண்டுமென ராகுல் காந்தி அவர்கள் தேர்தல் கமிஷனிடம் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு தேர்தல் கமிஷன் மற்றும் பாஜக-வினர், கண்டுகொள்ளாமல் தட்டிக் கழிக்கின்றனர். அவர்கள் ராகுல் காந்தி அவர்கள் பொய் கூறுகிறார்கள் எனவும் பேசி வருகின்றனர். ஓட்டு நமது அடிப்படை உரிமை, அதனை விட்டுக் கொடுக்கக் கூடாது. ராகுல் காந்தி அவர்கள் குரல் கொடுப்பது அவருக்காக அல்ல, நமக்காக பேசி வருகிறார்.

    இதுகுறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென கூறியபோது மத்திய அரசு விவாதிக்க மறுத்துவிட்டது. தேர்தல் கமிஷனரிடம் கேள்வி எழுப்பினால் பதில் அளிக்கவில்லை, எல்லா மாவட்ட தலைவர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் இது குறித்து குரல் கொடுப்பார்கள் அதேபோல மக்களாகிய நீங்களும் ஏதோ இது ஒரு கட்சி கூட்டம் அல்லது நிகழ்ச்சி என நினைக்காமல் இந்தப் போலி வாக்கு சேர்ப்பதன் பின் விளைவுகள் குறித்து நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், இல்லையென்றால் உங்களது ஓட்டு உரிமைகளும் போய்விடும், பீகாரை சேர்ந்த ஆறு லட்சம் பேரை தமிழகத்தில் வாக்காளர்களாக சேர்த்துள்ளனர். அதேபோல 15 லட்சம் பேரை அவர்கள் சேர்க்கும் போது நிலைமை என்ன ஆகும், தமிழகத்தில் இவ்வாறு வாக்காளர்களை சேர்க்கும் போது யார் ஆட்சி அமைக்க வேண்டும் என நாம் தான் முடிவு செய்ய வேண்டும், வெளி மாநிலங்களில் இருந்து வருகின்றவர்கள் முடிவு செய்யக்கூடாது.

    நாம் தெளிவாக இருக்க வேண்டும் காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்காளர் பட்டியலை நம்முடைய பூத்களில் வாக்காளர்களின் பெயர்கள் உள்ளதா என்பதனை பார்க்க வேண்டும். ராகுல் காந்தி அவர்கள் பாரத் ஜோட யாத்திரை நடந்த போது அவர் நடந்து சென்று விடுவாரா என கேலி செய்தனர். எப்படி நடந்து விடுவார் பார்க்கலாம் என கூறினர்.

    அந்த யாத்திரை கன்னியாகுமரியில் இருந்து தொடங்கப்பட்டது. அந்த யாத்திரைக காங்கிரஸ் கட்சி மீது மதிப்பும், காங்கிரஸ் கட்சி மீது பற்றுதலும் மக்களுக்கு ஏற்பட்டது. தமிழக அரசு பெண்களுக்கு உரிமை தொகை, பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை, மகளீர் இலவச பேருந்து பயணம் என்ன பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. எனவே இந்த நல்லாட்சி தொடர நாம் உறுதுணையாக இருப்போம் எல்லோரும் இணைந்து செயல்படுவோம்.

    முன்னதாக பேருந்து பயணிகளின் கோரிக்கையை ஏற்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் பொதுமக்களின் வசதிக்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் நிதியில் பயோ கழிவறை அமைக்கப்பட்டது. அந்தக் கழிவறை தற்போது பயன்பாடின்றி காணப்படுகிறது.

    அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது, குறித்து குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன், பொதுப்பணித்துறை மேற்பார்வையாளர் பிரம்மசக்தி, நகராட்சி பொறியாளர் குறள்செல்வி, நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் பிரவீன்குமார் மற்றும் அதிகாரிகளை நேரில் அழைத்து அதனை பார்வையிட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

    கூட்டத்தில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், மாநில பேச்சாளர்கள் குமரி மகாதேவன், அந்தோணி முத்து, கிழக்கு மாவட்ட தலைவர் கே டி உதயம், அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் ஆண்டனி விஜிலியஸ் உட்பட பேரூராட்சி, ஊராட்சி காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

    • பல்வேறு மக்கள் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
    • கூட்டத்தில் நகராட்சி ஆணையர், நகராட்சி பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன் விவரம் வருமாறு:-

    மார்த்தாண்டம் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் குழித்துறை நகராட்சி அதிகாரிகளுடன் குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளின் பல்வேறு மக்கள் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

    முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தெய்வத்திரு வசந்தகுமார் அவர்களின் முயற்சியால் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் அமைந்துள்ள பொது கழிப்பறை மக்களால் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டி அதை மக்கள் பயன்படுத்தும் வகையில் தயார் செய்ய கேட்டுக் கொண்டார்.

     

    மேலும் மார்த்தாண்டம் நகரின் அனைத்து கழிவு நீர்களும் அட்டைகுளம் கால்வாய் வழியாக கொல்லன் குளத்தில் கலப்பது குறித்தும் அட்டைக் குளத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அதிகாரிகளுடன் சென்று காந்தி மைதானத்தில் உள்ள கழிப்பறை வசதியை ஆய்வு மேற்கொண்டார்.

    இந்தக் கூட்டத்தில் நகராட்சி ஆணையர், நகராட்சி பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

     

    குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் குருந்தன்கோடு சந்திப்பில் நடைபெற்ற பொது கூட்டத்தில் ஜனநாயகத்தை அழிக்க துடிக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக விஜய் வசந்த் எம்.பி. குரல் கொடுத்தார்.

    திருவட்டார் பகுதியை சேர்ந்த பல இளைஞர்கள் காங்கிரஸ் கட்சி மீதும், தலைவர் ராகுல் காந்தி மீதும் நம்பிக்கை கொண்டு காங்கிரஸ் பேரியக்கத்தில் தங்களை இணைத்து கொண்டனர். அவர்களை காங்கிரஸ் கட்சிக்கு விஜய் வசந்த் எம்.பி. வரவேற்றார்.

    • விவேகானந்தர் பாறையை பார்ப்பதற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
    • முன்னதாக கவுண்டர்களில் மட்டுமே டிக்கெட்டுகளை பெறும் வசதி இருந்தது.

    கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சூரிய உதயம், திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறையை பார்ப்பதற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இந்நிலையில், கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு படகுகளில் செல்ல இன்று ( ஆகஸ்ட் 08) முதல் ஆன்லைனில் டிக்கெட்டுகளை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கவுண்டர்களில் மட்டுமே டிக்கெட்டுகளை பெறும் வசதி இருந்த நிலையில், https://www.psckfs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • நாட்டுப்படகு, வள்ளம் போன்றவை கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
    • மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் கன்னியாகுமரி கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பெரியநாயகி தெருவில் மீனவர்கள் பாதுகாப்புடன் மீன்பிடி தொழில் செய்வதற்காக தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாலம் குறுகலாக அமைக்கப்பட்டு உள்ளதால் மீனவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்று புகார்கள் எழுந்து உள்ளன. எனவே பாலத்தை மேலும் நீட்டித்து தர வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதனை வலியுறுத்தி கன்னியாகுமரியை சேர்ந்த விசைப்படகு, நாட்டுப்படகு மற்றும் வள்ளம் மீனவர்கள் சுமார் 5ஆயிரம் பேர் இன்று "திடீர்" என்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாததால் விசைப்படகுகள் அனைத்தும் சின்ன முட்டம் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதேபோல நாட்டுப்படகு, வள்ளம் போன்றவை கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் கன்னியாகுமரி கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. மீன் வரத்தும் அடியோடு நின்று விட்டது. இதனால் கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் அமைந்துள்ள மீன் சந்தைகள் களையிழந்து கிடக்கின்றன. மீன் வரத்து குறைந்ததால் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் மீன்விலையும் "கிடுகிடு" என்று உயர்ந்து உள்ளது.

    • மணல் பரப்பு முழுவதும் கடல் நீராக காட்சி அளித்தது.
    • கடற்கரை பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. தற்போது கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. ராஜாக்கமங்கலம் அருகே லெமூர் கடற்கரை பகுதியில் நேற்று கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. ராட்சத அலைகள் 3 மீட்டர் உயரத்திற்கு எழும்பியது. இதனால் ராட்சத அலைகள் கடற்கரையை தாண்டி உள்ள பகுதிகளில் புகுந்தது. அந்த பகுதியில் இருந்த கோவிலுக்குள் கடல்நீர் சூழ்ந்தது.

    அங்கு வைக்கப்பட்டிருந்த கடைகளையும் தண்ணீர் சூழ்ந்தது. மணல் பரப்பு முழுவதும் கடல் நீராக காட்சி அளித்தது. இதையடுத்து போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் இன்று 2-வது நாளாகவும் கடல் சீற்றமாகவே காணப்படுகிறது. ராட்சத அலைகள் அவ்வப்போது எழும்பி வருகின்றன. இதனால் இன்று 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். குமரி மேற்கு மாவட்டம் பகுதிகளிலும் கடல் இன்று சீற்றமாக இருந்தது. 

    • குளச்சல் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற பொது கூட்டத்தில் கண்டன உரை.
    • பொது தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு விருது.

    கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிந்துள்ளதாவது:-

    புத்தன்துறை கடற்கரை கிராமத்தில் கடலரிப்பினால் ஏற்பட்ட சேதங்களை மாவட்ட ஆட்சியருடன் சென்று ஆய்வு செய்தோம். இங்கு, தடுப்பு சுவர் கட்டுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

    நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்று வரும் தொடர் பரப்புரை தெருமுனை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன். 

    மாவீரர் தீரன் சின்னமலை அவர்கள் நினைவு தினத்தில் அவர் நமது தாய் நாட்டிற்கு ஆற்றிய ஒப்பற்ற சேவைகளை நன்றியுடன் நினைவு கூர்வோம். 

    இந்திய அரசியலமைப்பை அழிக்க முயற்சிக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக குளச்சல் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற பொது கூட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினேன்.

    நாகர்கோவில் பட்டு வளர்ப்பு அலகில் பல்நோக்கு கட்டிடம் அமைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25 லட்சம் ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகளை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ், துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நவீன் குமார் அரசு துறை சார்ந்த அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுடன் தொடங்கி வைத்தோம். 

    பொது தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் வசந்த் & கோ கல்வி விருதுகள் 2025 இன்று குமரி மாவட்டம் மேற்கு பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. 

    முளகுமூடு குழந்தை ஏசு மகளிர் கல்லூரியில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • வழக்கறிஞர் அமர போடப்பட்டிருந்த நாற்காலியில் அருணாச்சலம் அமர்ந்துள்ளார்.
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அருணாச்சலத்தை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    நாகர்கோவில்:

    தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு சென்னல்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 36). இவர் நெல்லை டவுன் போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக உள்ளார்.

    இவர் மீது கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் வன்கொடுமை பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளில் ஒரு வழக்கு உள்ளது. இந்த வழக்குக்காக அருணாச்சலம் நாகர்கோவில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஐந்தாவது மாடியில் செயல்படும் பட்டியல் ஜாதியினர், பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை சட்டம்) சிறப்பு அமர்வு நீதிமன்றத்திற்கு வந்தார். அப்போது வழக்கறிஞர் அமர போடப்பட்டிருந்த நாற்காலியில் அருணாச்சலம் அமர்ந்துள்ளார். அங்கிருந்த வழக்கறிஞர்கள் அங்கு அமரக்கூடாது எனக் கூறினார்கள். இதையடுத்து அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது .

    அப்போது நீதிமன்ற அலுவலர், அருணாச்சலத்திடம் அமைதி காக்க கூறினார். அவரிடமும் அருணாச்சலம் வாக்குவாதம் செய்தார். அங்கு வந்த கோட்டார் போலீசார் அருணாச்சலத்தை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து சிறப்பு நீதிமன்ற சிரஸ்தார் சிபு, கோட்டார் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின்பேரில் அருணாச்சலத்தின் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் தலைமையிலான போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அருணாச்சலத்தை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அருணாச்சலம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறித்து நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அருணாச்சலத்தை சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    ×