என் மலர்
கள்ளக்குறிச்சி
- சின்னசேலம் அருகே கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட வீ.கூட்ரோடு பகுதியில் சின்னசேலம் போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது வீ.கூட்டுரோடு அருகே வேப்பூர் ரோட்டில் உள்ள பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்துக்குரிய 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர்.
அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ள னர். பின்னர் அவர்களை சோதனை செய்ததில் 250 கிராம் கஞ்சா பிடிபட்டது. 2 வாலிபர்களையும் சின்ன சேலம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் சின்னசேலம் அருகே உள்ள பூசப்பாடி கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் (வயது28) என்பதும், மற்றொரு நபர் சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம் சாத்தப்பாடி கிராமம் மடத்தெருவைச் சேர்ந்த அரங்கநாதன் (வயது 28) என்பதும் தெரியவந்தது. பின்பு 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
- ஊரக வளர்ச்சித் துறையின் தலைமை பொறியாளர்தரைத்தளம் மற்றும் முதல் மாடியில் நடைபெறும் வேலைகளை பார்வையிட்டார்.
- பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க ஒப்பந்த தாரரிடம் அறிவுறுத்தினார்
கள்ளக்குறிச்சி,:
தியாகதுருகத்தில் ரூ.3 கோடியே 55 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டும் பணி கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஊரக வளர்ச்சித் துறையின் தலைமை பொறியாளர் குட்டாலிங்கம் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டும் பணியை ஆய்வு செய்தார். அப்போது தரைத்தளம் மற்றும் முதல் மாடியில் நடைபெறும் வேலைகளை பார்வையிட்டார்.
கட்டிடத்தில் காற்றோட்ட வசதிக்காக கூடுதல் ஜன்னல் அமைக்க வேண்டும். சிமெண்ட், ஜல்லி, மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை சரியான விகிதத்தில் கலக்க வேண்டும். சிமெண்ட் கான்கிரீட் மற்றும் பூச்சு வேலைகளுக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு தண்ணீர் தெளிக்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க ஒப்பந்த தாரரிடம் அறிவுறுத்தினார். இதில் ஒன்றிய குழு தலைவர் தாமோதரன், துணைத் தலைவர் நெடுஞ்செழியன், ஊரக வளர்ச்சித் துறை மாவட்ட செயற்பொறியாளர் மலர்விழி, வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் முருகன், ஒன்றிய உதவி பொறியாளர்கள் ஜெயபிரகாஷ், விஜயன், இளந்தென்றல், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கொளஞ்சிவேலு உள்பட அலுவலர்கள் அருகில் உள்ளனர்.
- திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்று போதை விழி்ப்புணர்வு கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக சென்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவின் பேரில், உளுந்தூர்பேட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் மேற்பார்வையில், திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கெடிலம் கூட்ரோட்டில் நடைபெறற இந்த விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்று போதை விழி்ப்புணர்வு கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக சென்றனர். இப்பேரணியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமதாஸ், பசவராஜ் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.
- சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு கணவன் மனைவி காரில் சென்று கொண்டிருந்தனர்.
- முன்னால் சென்ற கார் தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது.
கள்ளக்குறிச்சி:
புதுவையில் இருந்து மீன் ஏற்றிக்கொண்டு மினி லாரி தூத்துக்குடி நோக்கி சென்றது. இந்த மினி லாரியை புதுவை தேங்காய்திட்டை சேர்ந்த தீனதயாளன் (வயது 30) ஓட்டிச் சென்றார். இந்த மினி லாரி இன்று காலை 10.50 மணியளவில் மடப்பட்டு மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது லாரிக்கு முன்னால், சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு கணவன் மனைவி காரில் சென்று கொண்டிருந்தனர்.
இந்த காரை மீன் ஏற்றிச் சென்ற மினி லாரி முந்த முயன்றது. அப்போது கார் மீது மினி லாரி உரசியது. இதில் நிலை தடுமாறிய மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. முன்னால் சென்ற கார் தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் சென்ற கணவன், மனைவி, மினி லாரி டிரைவர் படுகாயமடைந்தனர். அப்பகுதி இளைஞர்கள் 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்சில் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- Arrested for assaulting mother-brother over land dispute near ரிஷிவந்தியம் கைது செய்யப்பட்டார்.
- வீரம்மாள் முனியனின் பங்கை அவாிடம் கொடுத்து விடு, என்று கூறியுள்ளார்
கள்ளக்குறிச்சி:
ரிஷிவந்தியம் அருகே வெங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி வீரம்மாள் (வயது50). இவர் தனக்கு சொந்தமான விளை நிலத்தை தனது மகன்கள் ஏழுமலை(30), முனியன்(28) ஆகியோருக்கு சமமாக பிரித்துக் கொடுத்துள்ளார். இந்நிலையில் மொத்த நிலத்திலும் ஏழுமலை விவசாயம் செய்து வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று வீரம்மாள், ஏழுமலையிடம் உன்னுடைய பங்கில் மட்டும் விவசாயம் செய்ய வேண்டும், முனியனின் பங்கை அவாிடம் கொடுத்து விடு, என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஏழுமலை மற்றும் அவரது மனைவி கிரிஜா ஆகியோர் வீரம்மாளை ஆபாசமாக திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதை தடுத்த முனியனையும் அவர் தாக்கியதாக தொிகிறது. இதுகுறித்து வீரம்மாள் கொடுத்த புகாரின் பேரில் ஏழுமலை, கிரிஜா ஆகிய 2 பேர் மீது ரிஷிவந்தியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
- கூழாங்கற்கள் கடத்திலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என தொடர்ந்து எச்சரிக்கப்படுகிறது.
- யார் பிடித்தாலும் லாரியின் டிரைவர் தப்பிவிடுகிறார். லாரியின் உரிமையாளரும் கைது செய்யப்படுவதில்லை.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் பகுதியில் கூழாங்கற்கள் அதிளவில் உள்ளது. இதனை விற்பனை செய்யவோ அல்லது கடத்தவோ தடை உள்ளது. இதனை மீறி இந்த கூழாங்கற்கள் அடிக்கடி லாரிகளில் கடத்திச் செல்லப்படுகிறது. கூழாங்கற்கள் கடத்திலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என தொடர்ந்து அதிகாரிகள் எச்சரித்து வரும் நிலையில் கடத்தல் சம்பவம் நடந்து வருகிறது. சேந்தநாடு அடுத்த கள்ளமேடு பகுதியில் இருந்து அழகு வாய்ந்த கூழாங்கற்களை லாரியில் கடத்துவதாக உளுந்தூ ர்பேட்டைதாசில்தார் ராஜ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தாசில்தார் கூழாங்கல் கடத்திய லாரியை மடக்கி பிடித்தார். அப்போது லாரியை நிறுத்திய டிரைவர் அங்கிருந்து தப்பிவிட்டார்.
இது குறித்து தாசில்தார் ராஜ், திருநாவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் லாரியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். திருநாவலூர் பகுதியில் கூழாங்கற்களை கடத்தும் லாரிகளை போலீசார், வருவாய் துறை அதிகாரிகள், புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் அடிக்கடி மடக்கி பிடிக்கின்றனர். யார் பிடித்தாலும் லாரியின் டிரைவர் தப்பிவிடுகிறார். லாரியின் உரிமையாளரும் கைது செய்யப்படுவதில்லை. குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். டிரைவரையோ, உரிமையாளரையோ கைது செய்யாமல், இது தொடர்பாக யாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்போகிறார்கள். இது போன்ற வழக்கில் எத்தனை பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
- மகாலட்சுமி பிளஸ்-2 முடித்து விட்டு அதே பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார்.
- பூச்சி மருந்து குடித்து விட்டதாக கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே ஈய்யனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிராஜ் (வயது 53). கூலித் தொழிலாளி, இவரது மகள் மகாலட்சுமி (21) இவர் பிளஸ்-2 முடித்து விட்டு அதே பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு ஒவ்வொரு மாதமும் வயிற்று வலி வருவதாகவும் அவ்வாறு வயிற்றை வலிக்கும் போது தனியார் மருந்தகத்தில் மருந்தை வாங்கி சாப்பிடுவது வழக்கம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை கூலி வேலைக்கு சென்று விட்டு மீண்டும் மதியம் வீட்டுக்கு திரும்பி னார். அப்போது வயிற்று வலி அதிகமாக இருந்ததால் பருத்தி வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டு வாந்தி எடுத்துள்ளார். வீட்டில் இருந்தவர்கள் ஏன் வாந்தி எடுக்கிறாய்? என கேட்டபோது பூச்சி மருந்து குடித்து விட்டதாக கூறி யுள்ளார். அதிர்ச்சியடைந்த வீட்டில் இருந்தவர்கள் மகாலட்சுமியை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து இவரது தந்தை மணிராஜ் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செந்தில் பாலாஜியை நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை யை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஸ்டாலின் செய்த ஒரே சாதனை செந்தில் பாலாஜியை கைது செய்ததுதான்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி பஸ் நிலை யம் அருகே அ.தி.மு.க. சார்பில் லஞ்ச வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை யை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்க்கு முன்னாள் எம்.எல்.ஏ. அழகுவேல்பாபு, ஜெய லலிதா பேரவை இணை செயலாளர் பிரபு, முன்னாள் காமராஜ் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பாபு வரவேற்றார். கள்ளக்கு றிச்சி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார் தொடக்க உரையாற்றினார். கள்ளக் குறிச்சி மாவட்ட செயலாள ரும், திருப்பதி திருமலை தேவஸ்தான சிறப்பு அறங்காவலர் குழு பிரதி நிதியுமான குமரகுரு தலைமை தாங்கி பேசிய தாவது:-
நாங்கள் எதிர்க்கட்சியாக உள்ளோம். எனவே மக்கள் பிரச்சனைகளை சொல்லு கிறோம். ஆளுங்கட்சியினர் கள்ளக்குறிச்சி மாவட்டத் திற்க்கு கொண்டு வந்த திட்டங்களை மேடையில் சொல்லுங்கள். தி.மு.க. ஆட்சியில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் வீதம் வாங்கி ஒரு ஆண்டுக்கு 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் முறைகேடாக கொள்ளையடித்துள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செந்தில் பாலாஜி யை சிறை வைப்போம் என ஸ்டாலின் ஏற்கனவே கூறி னார். அதுதான் தற்போது நடந்துள்ளது. ஸ்டாலின் செய்த ஒரே சாதனை செந்தில் பாலாஜியை கைது செய்ததுதான். தற்போது ஆட்சியாளர்கள் அரசு ஊழியர்களை மிரட்டி கொத்தடிமை போல் வைத்துள்ளனர். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் அரசு ஊழியர்கள் சுதந்திரமாக பணியாற்றினார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டத் தில் பல்வேறு மக்கள் திட்ட பணிகள் எடப்பாடி ஆட்சி யின் போது கொண்டு வரப் பட்டன. ஆனால் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் அலுவல கம் கட்டும் பணி, ெரயில் பாதை அமைக்கும் பணி, வெளிவட்ட சாலை அமைக்கும் பணி ஆகியவை கிடப்பில் போடப் பட்டுள்ளன. இந்த பணி களை உடனடியாக நிறை வேற்ற வேண்டும். இல்லை யெனில் அ.தி.மு.க .மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் பேசி னார்.
தொடர்ந்து தமிழக அரசை கண்டித்துகண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட அவைத் தலைவர் பச்சையாப் பிள்ளை, ஒன்றிய செயலா ளர்கள் தேவேந்திரன், அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, நகர செயலாளர் ஷியாம் சுந்தர் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஞான வேல், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில்தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணைய தலைவர் ராஜ சேகர் நன்றி கூறினார்.
- கலியன் ஓரியன்டல் கம்பெனி கல்குவாரியில் ஒப்பந்த அடிப்படையில் காவளராக பணி புரிந்து வந்தார்.
- கம்பெனியில் வேலை பார்த்து வந்த கலியனை பாம்பு கடித்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் குருபீடபுரம் பகுதியை சேர்ந்தவர் கலியன் (வயது 45). இவர் எலவனசூர்கோட்டை அருகே கொட்டயூர் பகுதியில் உள்ள ஓரியன்டல் கம்பெனி கல்குவாரியில் ஒப்பந்த அடிப்படையில் காவளராக பணி புரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கம்பெனியில் வேலை பார்த்து வந்த கலியனை பாம்பு கடித்தது. இதில் அலறி கீழே விழுந்தார். இதனை பார்த்த சக பணியாளர்கள் கலியனை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கலியன் இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கலியனின் உறவினர்கள் கொட்டயூர் பகுதியில் உள்ள கல்குவாரி கம்பெனி முன்பு திரண்டனர். இறந்த கலியனிற்கு 2 குழந்தைகள் உள்ளனர். அதனால் கலியன் குடும்பத்திற்கு இழப்பீடாக 50 லட்சம் வழங்க வேண்டும் எனக் கூறி முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த எலவனசூர்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால், தனிப்பிரிவு ேபாலீசார் சுரேஷ் மற்றும் போலீசார்கள் சம்பவ இடத்திற்கு சென்று முற்றுகையிட்ட கலியன் உறவினர்களிடம் இறந்த கலியன் குடும்பத்திற்கு உரிய முறையில் இழப்பீட்டு தொகை வாங்கி தரப்படும் என்று கூறி பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை முன்னிட்டு கம்பெனியின் ஒப்பந்ததாரர் இழப்பீட்டு தொகையாக 10 லட்சம் கலியன் குடும்பத்திற்கு வழங்கப்படும் என்று கூறியதின்பேரில் முற்றுகையிட்ட கலியன் உறவினர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
- பக்ரீத் பண்டிகையொட்டி அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்தது.
- 5000 முதல் 15 ஆயிரம் வரை உள்ள ஆடுகள் விற்பனைக்கு வந்தது.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் திரு.வி.க நகர் அருகே உள்ள வியாழக்கிழமை தோறும் நடைபெறும் வார சந்தை நடைபெறுவது வழக்கம். வருகின்ற 29-ந் தேதி பக்ரீத் பண்டிகையொட்டி அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்தது. இதில் 4 மணி நேரத்தில் ரூ.50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது. அடுத்த வாரம் பக்ரீத் பண்டிகை வரவுள்ள நிலையில் ஆடுகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பல்வேறு மாவட்டங்களில் வியாபாரிகள் சந்தைகளில் ஆடுகளை விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் சின்னசேலம் வார சந்தையில் காலை 5 மணி முதல் வியாபாரிகள் ஆடுகளை விற்க தொடங்கினர். சுமார் 5000 முதல் 15 ஆயிரம் வரை உள்ள ஆடுகள் விற்பனைக்கு வந்தது.50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- அடுத்த வாரம் பக்ரீத் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் சந்தையில் ஆடுகள் விற்பனை களை கட்டியது.
- பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆயிரக்கணக்கான ஆடுகளை வாங்கி குவித்தனர்
உளுந்தூர்பேட்டை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம்.
இந்த வார சந்தைக்கு காட்டுசெல்லூர், வட குரும்பூர், கிளியூர், மடப்பட்டு ,சேந்தநாடு, ஆசனூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். வழக்கமாக இந்த சந்தையில் சுமார் 25 லட்சம் முதல் 50 லட்சம் வரை ஆடுகள் விற்பனை நடை பெறும்.
இந்த நிலையில் அடுத்த வாரம் பக்ரீத் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் சந்தையில் ஆடுகள் விற்பனை களை கட்டியது. இன்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த சந்தையில் திண்டுக்கல், மதுரை, திருச்சி, வேலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆயிரக்கணக்கான ஆடுகளை வாங்கி குவித்தனர்
8 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனையான நிலையில் சுமார் 3 மணி நேரத்தில் ஆடுகள் 3 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
- மேப்பிலியூர் கிராமத்தில் இருந்து குழாங்கற்கள் கடத்தபடுவதாக பல்வேறு புகார்கள் வந்தது.
- சந்தேகமடைந்த ஊழியர்கள் லாரியில் சோதனையிட்டனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா மேப்பிலியூர் கிராமத்தில் இருந்து குழாங்கற்கள் கடத்தபடுவதாக பல்வேறு புகார்கள் வந்தது. இதையடுத்து விழுப்புரம் உதவி புவியிலாளர் மற்றும் சுரங்கத் துறை அதிகாரி பாலசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே ஒரு லாரி வந்தது. அதனை நிறுத்தி சோதனையிட்ட போது, லாரியின் டிரைவர் தப்பியோடினார். இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் லாரியில் சோதனையிட்டனர். இதில் லாரியில் குழாங்கற்கள் இருந்ததை கண்டறிந்தனர்.தொடர்ந்து இது குறித்து புவியிலாளர் துறை அதிகாரி பாலசுப்பிரமணியன் உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த போலீசார் லாரியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர். மேலும், லாரியின் உரிமையாளர் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இது போல கனிம வளக் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என புவியிலாளர் மற்றும் சுரங்கத் துறை அதிகாரி பாலசுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.






