என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tank Operator"

    • மணிகண்டன் டேங்க் ஆப்ரேட்டராக பணி செய்து வந்தார்.
    • தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி மணிகண்டன் நேற்று இரவு இறந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    திருநாவலூர் ஒன்றியம் களமருதூர் ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மணிகண்டன் (வயது 40) டேங்க் ஆப்ரேட்டராக பணி செய்து வந்தார். இவர் கடந்த 12-ந்தேதி அதிகாலை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீரை திறந்து விட்டு, டீ குடிக்க நடந்து சென்றார். அப்போது அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது. இதில் டேங்க் ஆப்ரேட்டர் மணிகண்டன், மோட்டார் சைக்கிளில் வந்த நாராயணன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் 2 பேரையும் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு டேங்க் ஆப்ரேட்டர் மணிகண்டன் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி மணிகண்டன் நேற்று இரவு இறந்தார். இது தொடர்பாக திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×