என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரிஷிவந்தியம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
- இளையராஜா அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
- பருத்தி பயிருக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்தார்.
கள்ளக்குறிச்சி:
ரிஷிவந்தியம் அருகே கீழ் பாடி கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா(37) விவசாயி. இவரது மனைவி உண்ணாமலை. இவர்களுக்கு ஜான்சன்(8), பாரதி(6) என்று 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இளையராஜா அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் உண்ணாமலை கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த இளையராஜா பருத்தி பயிருக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்தார். இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்த புகாரின்பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story






