என் மலர்
ஈரோடு
ஈரோடு அருகே உள்ள காஞ்சிக்கோவிலை சேர்ந்தவர் பிரவீன் விவசாயி.
இவர் மஞ்சள் விளை வித்து விற்பனை செய்து வந்தார். மேலும் காங்கயம் காளைகளையும் வளர்த்து விற்பனை செய்தார்.
அவருக்கு மாடு வகைகளை பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. எனவே அந்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்று அவர் நினைத்தார்.
இந்த நிலையில் அவருக்கும் நத்தக்காடு பகுதியை சேர்ந்த ஸ்ரீமதி என்பவருக்கும் திருமண ஏற்பாடு நடந்தது. அவர்களது திருமணம் நேற்று ஈரோட்டில் நடந்தது.
மாடுகளின் வகைகளை பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட பிரவீன் தனது திருமணத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தார்.
திருமணம் என்றாலே மணமக்கள் காரிலும், பல்லக்கிலும் அழைத்துச் செல்லப்படுவது வழக்கமாக உள்ளது. ஆனால் பிரவீன் புதுமையாக தனது புதுமனைவியை அவரது வீட்டுக்கு மாட்டு வண்டியில் அழைத்துச்செல்ல முடிவு செய்தார்.
இதற்காக மாட்டு வண்டி தயார் செய்யப்பட்டது. அதில் மாடுகள் பூட்டப்பட்டு தனது புதுமனைவியை பிரவீன் ஏற்றினார்.
பின்னர் ஈரோட்டில் இருந்து நத்தக்காடு நோக்கி மாட்டு வண்டியை ஓட்டிச் சென்றார். நத்த காட்டில் மணமக்களை உவினர்கள் வரவேற்றனர். மாட்டுவண்டியில் திருமண கோலத்தில் சென்ற புதுமண தம்பதிகளை பார்த்தவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். #Tamilnews
பெருந்துறையை அடுத்துள்ள துடுப்பதி சாணார் பாளையம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரது மகன் செந்தில்குமார் (வயது 21). இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த தேவா (21).
இவர்கள் இருவரும் பெருந்துறையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து முடித்து விட்டு தற்போது எலக்ட்ரீசியனாக வேலைபார்த்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் நேற்று இரவு 10 மணியளவில் அவர்களது நண்பரான சரவணன் என்பவரது ஸ்கூட்டரை வாங்கிக் கொண்டு சீனாபுரம் நோக்கி சென்றனர்.
துடுப்பதியை அடுத்துள்ள துலுக்கபாளையம் பிரிவு அருகே முன்னால்சென்ற ஒரு லாரியை முந்தியபோது, எதிரே திருப்பூரில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற வேனும் ஸ்கூட்டரும் எதிர் பாராதவிதமாக மோதின.
இதில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட இருவரும் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராம்பிரபு, தங்கவேல் ஆகியோர் இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Tamilnews
ஈரோடு:
ஈரோடு சத்திரோடு சூளை பஸ் நிறுத்தம் பாரதி நகர் அருகே கடந்த 2-ந் தேதி ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக எதிரே வந்த ஒரு அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார். வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் விபத்தில் இறந்தவர் ஈரோடு முத்தாம் பாளையத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி இளையராஜா (28) என்பதும் இவருக்கு திருமணமாகி மீனா என்ற மனைவியும் உள்ளார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த இளையராஜாவின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். பிறகு பிரேத பரிசோதனைக்கு பிறகு இளையராஜா உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள தொட்டியபாளையம் சீலம் பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 50). அதே பகுதியை சேர்ந்தவர் மாரிசாமி என்ற மாரநாயக்கர் (49).
உறவினர்களான இருவரும் பெருந்துறை சிலேட்டர் நகரில் இரும்பு அடிக்கும் கொல்லு பட்டறை வைத்து நடத்தி வந்தார்கள்.
சில தினங்களுக்கு முன் பெருந்துறை அருகே உள்ள காஞ்சிகோவில் சூரியம் பாளையம் பகுதியில் கணவர் சுப்பிரமணியம் (50) என்பவர் கொலை செய்யப்பட்டும் அவரது மனைவி மைதிலி (32) விஷம் குடித்த நிலையில் பிணமாக கிடந்தனர்.
அதே பாணியில் பெருந்துறை சிலேட்டர் நகர் பகுதியில் இரும்பு பட்டறை அதிபர்கள் 2 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.
நேற்று இரவு பட்டறை முன் என்ன நடந்தது என்று தெரியவில்லை. அறையின் முன் வரண்டாவில் மாரிசாமி தூக்கில் பிணமாக தொங்கினார். அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இனஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அங்கு மாரிசாமி தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். பக்கத்து அறைக்குள் சென்ற போலீசாருக்கு அங்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த அறையில் பழனிசாமி கத்தியால் குத்தப்பட்டு பிணமாக கிடந்தார். நண்பர்கள் இருவரில் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்க இன்னொருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதை கண்டதும் இந்த சம்பவம் எப்படி நடந்தது? இருவருக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரை கொலை செய்து விட்டு இன்னொருவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாரோ ஒருவரை கொன்று விட்டு மற்றொருவரை அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்டு சென்று விட்டார்களா? என்றும் பல கோணங்களில் போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கி உள்ளனர்.
இரும்பு பட்டறை அதிபர்கள் 2 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.
இறந்த பழனிசாமிக்கு மாராத்தாள் (45) என்ற மனைவியும், கவிதா (26), ஹேமா (23) என்ற 2 மகள்களும் நவீன் (20) என்ற ஒரு மகனும் உள்ளனர்.
இதே போல் மாரிசாமிக்கு மகாலட்சுமி (45) என்ற மனைவியும், சுரேஷ்குமார் (25), நாகராஜ் (23) என்ற 2 மகன்களும், சித்ராதேவி (20) என்ற ஒரு மகளும் உள்ளனர். #tamilnews
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது65). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி நல்லம்மாள். இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
மணி கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் அவதிபட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலுxம் அவர்களின் மகன்கள், மகளுக்கு இன்னும் திருமணம் ஆகிவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மணி மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று மணி தற்கொலை செய்ய முடிவெடுத்து வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். இதில் மணிக்கு லேசான காயம் ஏற்பட்டதால் ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் வீட்டு விட்டனர்.
பின்னர் மாலையில் மணிக்கு உடலில் கொப்பளம் கொப்பளமாக வெடித்தது. இதை தொடர்ந்து மணியை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
ஈரோடு:
ஈரோடு, சூளை சி.என்.சி. கல்லூரியில் தமிழ்துறை சார்பில் இன்று கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தஞ்சை பெரிய கோவிலில் சிலைகள் கொள்ளை போனது அதிர்ச்சி அளிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அமைச்சர்கள் கருத்து கூறுவது நீதிமன்றத்திற்கு எதிரானது.
வெளிநாட்டில் இருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்கு பதிலாக நம்நாட்டில் உள்ள வங்கிகளில் கடன் பெற்று வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வது அவமானமாக உள்ளது.
தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு இது வரை வழங்கவில்லை. காவிரி மேலாண்மை குறித்து முதல்வரும் எதிர்கட்சி தலைவரும் சந்திப்பது வரவேற்கதக்கது.
இவ்வாறு அவர் பேசினார். #tamilnews
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள தொட்டியபாளையம் சீலம்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 50). அதே பகுதியை சேர்ந்தவர் மாரி சாமி என்ற மாரநாயக்கர் (49).
உறவினர்களான இருவரும் பெருந்துறை சிலேட்டர் நகரில் இரும்பு அடிக்கும் கொல்லு பட்டறை வைத்து நடத்தி வந்தார்கள்.
சில தினங்களுக்கு முன் பெருந்துறை அருகே உள்ள காஞ்சிகோவில் சூரியம்பாளையம் பகுதியில் கணவர் சுப்பிரமணியம் (50) என்பவர் கொலை செய்யப்பட்டும் அவரது மனைவி மைதிலி (32) என்பவர் தூக்கில் பிணமாகவும் தொங்கி கொண்டிருந்தனர்.
அதே பாணியில் பெருந்துறை சிலேட்டர் நகர் பகுதியில் இரும்பு பட்டறை அதிபர்கள் 2 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.
நேற்று இரவு பட்டறை முன் என்ன நடந்தது என்று தெரியவில்லை. அறையின் முன் வரண்டாவில் மாரி சாமி தூக்கில் பிணமாக தொங்கினார். அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அங்கு மாரிசாமி தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். பக்கத்து அறைக்குள் சென்ற போலீசாருக்கு அங்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த அறையில் பழனிசாமி கத்தியால் குத்தப்பட்டு பிணமாக கிடந்தார். நண்பர்கள் இருவரில் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்க இன்னொருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதை கண்டதும் இந்த சம்பவம் எப்படி நடந்தது? இருவருக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரை கொலை செய்து விட்டு இன்னொருவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாரோ ஒருவரை கொன்று விட்டு மற்றொருவரை அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்டு சென்று விட்டார்களா? என்றும் பல கோணங்களில் போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கி உள்ளனர்.
இரும்பு பட்டறை அதிபர்கள் 2 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இறந்த பழனிசாமிக்கு மாராத்தாள் (45) என்ற மனைவியும், கவிதா (26), ஹேமா (23) என்ற 2 மகள்களும் நவீன் (20) என்ற ஒரு மகனும் உள்ளனர்.
இதே போல் மாரிசாமிக்கு மகாலட்சுமி (45) என்ற மனைவியும், சுரேஷ்குமார் (25), நாகராஜ் (23) என்ற 2 மகன்களும், சித்ராதேவி (20) என்ற ஒரு மகளும் உள்ளனர். #Tamilnews
திருப்பூர் மாவட்டம், முத்தூர் கரட்டுப்பாளையம், ஆலாம்பாளையத்தை சேர்ந்தவர் அருண். இவரது உறவினர் ஈரோடு மரப்பாளையத்தை சேர்ந்த ஜோதிரா. இவர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.31 லட்சம் பெற்று 5 பேர் கொண்ட கும்பல் மோசடியில் ஈடுப்பட்டது.
இது குறித்து அருண் கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு கொடுமுடி நல்லசெல்லி பாளையம் ராஜேந்திரன் (29), பவானியை சேர்ந்த முனியப்பன் (28), ஈரோடு பெரிய சேமூரை சேர்ந்த சித்திக் (29), நாமக்கல் மாவட்டம் குமார பாளையத்தை சேர்ந்த சுலைமான் (27), சித்திக் மனைவி ஆயிஷா (27) ஆகியோரை கைது செய்தனர்.
இவர்களுக்கு உடந்தையாக இருந்த பெண் துப்புரவு பணியாளர் கண்ணம்மாள் என்பவரும் கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இது குறித்து குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது.-
முனியப்பன், கலைமான், ஆயிஷா ஆகிய மூவருக்கும் தான் பணம் மறைத்து வைக்கப்பட்ட இடம், மற்றும் யார் யாருக்கெல்லாம் எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது?. இந்த மோசடிக்கு யாரெல்லாம் உடந்தையாக இருந்துள்ளனர்? என்ற விவரம் தெரியும். எனவே அவர்கள் மூவரையும் மூன்று நாள் காவல் எடுத்து விசாரணை நடத்தி வருகிறோம்.
இந்த மோசடி கும்பலுக்கு நேரடியாகவும், மறை முகமாகவும் சிலர் உதவி உள்ளனர். அவர்கள் யார்? என்ற விவரத்தையும் சேகரித்து வருகிறோம். அவர்கள் விரைவில் சிக்குவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
ஈரோடு அருகே உள்ள பெருமாள் மலை பகுதியை சேர்ந்தவர் முருகதாஸ் (வயது 46). இவரது மகன் ஜீவா பத்மநாபன் (25) கூலி தொழிலாளியான இவருக்கு மது பழக்கம் இருந்தது. இதனால், வேலைக்கு சரியாக போகாமல் குடித்து விட்டு ஊரை சுற்றி வந்துள்ளார்.
இதையொட்டி அவரது தந்தை சத்தம் போட்டார். வேலைக்கு போகாமல் இப்படி குடித்து விட்டு வந்து ரகளை செய்கிறாயே... ஒழுங்காக இருக்க மாட்டாயா? என்று கேட்டு திட்டுவராம். இதனால் அவர்களிடையே தகராறு இருந்து வந்தது.
நேற்று இரவும் தந்தை- மகன் இடையே வாய் தகராறு ஏற்பட்டு முற்றியது. ஆத்திரம் அடைந்த தந்தை முருகதாஸ் வீட்டில் இருந்த அடுப்பு ஊதும் ஊதுகோலால் (இரும்பு கம்பி) சரமாரியாக அடித்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த ஜீவா பத்மநாபன் மயங்கி சரிந்தார். சிறிது நேரத்தில் சம்பவ இடத்தி லேயே அவர் பரிதாபமாக இறந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
இது குறித்து சிதோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட ஜீவா பத்மநாபன் உடல் பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக் கோவில், சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி(50). அதே பகுதியில் வீட்டின் பின்புறம் ரைஸ்மில் வைத்து நடத்தி வரும் இவர் கடந்த 11 வருடங்களுக்கு முன்னர் பெருந்துறையை அடுத்துள்ள துடுப்பதி பகுதியை சேர்ந்த மைதிலி(32) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு கார்த்தி(10) மற்றும் வைஷ்ணவி(8) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 6 மாதங்களாக துடுப்பதியில் உள்ள மைதிலியின் தாயார் வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்று வருகின்றனர். இவர்களது வீட்டின் அருகிலேயே சுப்பிரமணியத்தின் தாயார் பொன்னம்மாள்(70) தனியே வசித்து வருகிறார்.
உடல்நிலை சரியில்லாத நிலையில் இருந்த பொன்னம்மாள் நேற்று காலை 11 மணியளவில் வீட்டில் இருந்து கவுந்தப்பாடி மருத்துவமனைக்கு சென்று விட்டு மீண்டும் மாலை 4 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது மகனின் வீடு திறந்த நிலையில் கிடப்பதை கண்டு சந்தேகமடைந்து உள்ளே சென்று பார்த்தார்.
அங்கு வீட்டின் ஹாலில் சுப்பிரமணியம் தரையிலும், மனைவி மைதிலி அருகில் இருந்த கட்டில் மீதும் இறந்து பிணமாக கிடந்தனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போடவே, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்,
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் இருவரின் உடலையும் கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டார்.
அப்போது வீட்டில் மைதிலி எழுதிய கடிதம் கிடைத்தது.
அந்த கடிதத்தில் “ எனது கணவர் சுப்பிரமணி தனது தொழில் விரிவாக்கத்திற்காக நசியனூரில் உள்ள ஒரு வங்கியில் 90 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அந்த கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் கடந்த சில நாட்களாகவே மிகுந்த மன உளைச்சலுடன் வீட்டில் இருந்து வந்தார்.
இது தொடர்பாக அவரிடம் நான் கேட்ட போது, எங்கள் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு என்னை தகாத வார்த்தைகளால் அவர் திட்டினார். இதனால் ஆத்திரமடைந்த நான் அருகில் கிடந்த கரண்டியால் அவரை தாக்கியதில் வீட்டின் ஹாலில் மயங்கி விழுந்தார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை கண்ட நான், மயக்கம் தெளிந்து எழுந்தால் மீண்டும் என்னிடம் சண்டையிடுவார் என நினைத்து அவரது கழுத்தில் கால் வைத்து மிதித்ததில் அவர் இறந்து போனார்.
இதனால் அதிர்ச்சியடைந்த நான், இனிமேல் வாழத்தகுதியில்லை என நினைத்து எனது உயிரை மாய்த்துக் கொள்கிறேன்” இவ்வாறு எழுதியிருந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஈரோடு எஸ்பி சிவக்குமார் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கோவை சிறப்பு தடவியல் நிபுணர்கள் கொண்ட குழுவினர் தடயங்களை சேகரித்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணவரை மனைவி தான் கொலை செய்துள்ளார் என்று முதலில் போலீசார் எண்ணிணாலும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
மனைவி மட்டும் கணவரை அடித்தால் திருப்பி கணவரும் தாக்கியிருப்பார் இதனால் மனைவி மட்டும் தனியாக கணவரை கொல்ல வாய்ப்பில்லை என்று போலீசார் நினைக்கிறார்கள்.
ஆகவே முன்பகை காரணமாக கணவன்- மனைவியை கொன்று விட்டு மனைவியே கணவரை கொன்று கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டிருப்பதாக கொலையாளிகள் திட்டமிட்டு நாடகமாடி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதனால் கணவன்- மனைவியை கொலை செய்த கொலையாளிகள் யார்? எதற்காக கொன்றார்கள்? என்ற புதிய கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
மேலும் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டதாக கருதப்படும் மைதிலி அவர்தான் கைப்பட கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டாரா?
அது அவரது கையெழுத்து தானா? என்று தீவிர விசாரணை நடத்துகிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள முகாசிப்புதூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.சலவண பவா தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு பேசினார்.
நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வர என்ன தகுதி இருக்கிறது? இதுவரை தமிழக மக்களுக்காக என்ன சேவை செய்துள்ளார்? தமிழக அரசை குறை கூறும் இவருக்கு அரசியல் பற்றி என்ன தெரியும்? விஜயகாந்தின் அரசியல் நிலைமை அனைவருக்கும் தெரியும். அதுபோலத்தான் கமல்ஹாசனும் இருக்கிற இடம் தெரியாமல் போய் விடுவார்.

ரஜினிகாந்துக்கு தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையை பற்றி பேச தகுதியில்லை. இவரெல்லாம் அரசியலுக்கு வந்து தமிழக மக்களுக்கு என்ன நன்மை செய்ய போகிறார்? ஒன்று மட்டும் சொல்கிறேன். தமிழகத்தில் உள்ள அனைத்து நடிகர்களும் ஒன்று சேர்ந்து அரசியலுக்கு வந்தாலும் அதிமுகவை ஒருவராலும் அசைக்க முடியாது.
கடந்த அதிமுக ஆட்சியில் அம்மா வகுத்த நலத்திட்ட உதவிகள் கிராமம் வாரியாக சென்றடைந்துள்ளது. அந்த அளவிற்கு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் அதிமுக வேரூன்றி விட்டது. பொதுமக்களின் தேவை அறிந்து பல்வேறு சலுகைகள் வழங்கிய எம்ஜிஆர், ஜெயலலிதாவின் வழியில் தற்போது அதிமுக வை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழி நடத்தி வருகிறார்.
வரும் காலங்களில் தமிழக மக்களுக்கு பல நல்ல திட்டங்களை வழங்கி அதிமுக அரசு 100 ஆண்டு காலம் தமிழகத்தில் ஆட்சி புரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பவானி ஒன்றிய செயலாளர் தங்கவேல், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜான் மாணிக்கம்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எம்.பி.பாலசுப்பரமணியன் மற்றும் அம்மாபேட்டை ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். #tamilnews
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). இவர் புகழூர் காகித ஆலையில் ஒப்பந்த ஊழியராக பணி புரிந்தார்.
இவரது மாமியார் வீடு ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே உள்ள கொளத்துப்பாளையத்தில் உள்ளது.
ரமேஷ் மற்றும் அவரது தந்தை பழனிசாமி (70). ரமேஷின் பெரியம்மா சுந்தரம்மாள் (70) ஆகிய 3 பேரும் ஒரு காரில் மாமியார் வீட்டுக்கு வந்தனர்.
பிறகு நேற்று மாலை கரூருக்கு காரில் திரும்பி சென்று கொண்டிருந்தனர். ஈரோடு மாவட்ட எல்லையான சாலைப்புதூரை தாண்டி நொய்யல் வெள்ளைபாலம் பக்கம் சென்றபோது எதிரே கரூரில் இருந்து தேங்காய் மட்டைகள் ஏற்றி கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.
கார் அருகே வரும்போது திடீரென லாரியின் வலது புற டயர் திடீரென வெடித்தது. இதில் லாரி தறிகெட்டு ஓடி கார் மீது மோதியது. இதில் கார் நொறுங்கியது.
உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து காரின் இடிபாட்டுக்குள் சிக்கி தவித்த 3 பேரையும் மீட்டு ஆம்புலன்சு மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் வழியிலேயே சுந்தரம்மாள் பரிதாபமாக இறந்தார். கொடுமுடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட ரமேசை மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ரமேசும் பரிதாபமாக இறந்தார்.
ரமேசின் தந்தை பழனிசாமி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். கொடுமுடி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் பலியான ரமேசுக்கு ஜெயசுதா (40) என்ற மனைவியும் 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கணவர் உடலை பார்த்து அவர் கதறி அழுத காட்சி மிகவம் உருக்கமாக இருந்தது. #tamilnews






