என் மலர்
செய்திகள்

சூளை பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி
ஈரோடு:
ஈரோடு சத்திரோடு சூளை பஸ் நிறுத்தம் பாரதி நகர் அருகே கடந்த 2-ந் தேதி ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக எதிரே வந்த ஒரு அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார். வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் விபத்தில் இறந்தவர் ஈரோடு முத்தாம் பாளையத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி இளையராஜா (28) என்பதும் இவருக்கு திருமணமாகி மீனா என்ற மனைவியும் உள்ளார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த இளையராஜாவின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். பிறகு பிரேத பரிசோதனைக்கு பிறகு இளையராஜா உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews






