என் மலர்tooltip icon

    ஈரோடு

    பண்ணாரி கோவில் அருகே இன்று முன்னாள் சென்ற லாரி மீது மினிலாரி மோதியது. இதில் டிரைவர் நசுங்கி பலியானார். மற்றொரு டிரைவர் படுகாயம் அடைந்தார்.

    சத்தியமங்கலம்:

    கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் நோக்கி ஒரு மினிலாரி சென்று கொண்டிருந்தது. லாரியை கோவையை சேர்ந்த சந்தோஷ் (வயது 23) என்பவர் ஓட்டி சென்றார். அருகில் மற்றொரு டிரைவரான பல்லடத்தை சேர்ந்த கருப்புசாமி அமர்ந்திருந்தார்.

    இன்று அதிகாலை மினிலாரி ஈரோடு மாவட்டம் பண்ணாரி கோவில் அருகே வந்தபோது முன்னால் ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.

    இதில் எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரி மீது மினிலாரி மோதியது. இதில் மினிலாரியின் முன்பகுதி நொருங்கியது.

    மினிலாரியில் இருந்த மாற்று டிரைவர் கருப்புசாமி சம்பவ இடத்திலேயே இடிபாட்டுக்குள் சிக்கி உடல் நசுங்கி பலியானார். வண்டியை ஓட்டி வந்த டிரைவர் சந்தோசும் படுகாயம் அடைந்தார். அவரை அந்த வழியாக வந்த மற்ற வாகன ஓட்டிகள் மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சத்தியமங்கலம் போலீசார் கருப்புசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோட்டில் மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் இருந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு லேஅவுட் வி.வி.சி.ஆர் நகரைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 39). இவருக்கு திருமணமாகி மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

    இதனால் மனவேதனையில் இருந்த ஜெகதீஷ் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் விரக்தியில் இருந்த ஜெகதீஷ் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு கொண்டார்.

    அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஜெகதீஸ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோட்டில் கண்ணாடி துண்டால் கழுத்தை அறுத்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் மாரப்ப 3-வது வீதியில் பீரோ பட்டறை தொழிற்சாலை உள்ளது.

    இங்கு 15-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் 6 பேர் வெளியூர்களை சேர்ந்தவர்கள். இவர்கள் அங்கு தனி அறை எடுத்து தங்கி உள்ளனர்.

    அங்கு தங்கி பணிபுரிந்த ஊழியரில் ஒருவர் குமரி மாவட்டம் தக்கலை முத்தலை குறிச்சியை சேர்ந்த பூபேஸ் (வயது 52).

    இந்த நிலையில் இன்று காலை பூபேஸ் தனது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    அவரது கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது அருகே கண்ணாடி துண்டு ஒன்று கிடந்தது. இந்த கண்ணாடி துண்டால்தான் அவரது கழுத்து அறுக்கப்பட்டு உள்ளது.

    இது பற்றி ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் தலைமையில் போலீசார் விரைந்தனர். அங்கு மர்மமாக இறந்து கிடந்த பூபேஸ் உடலை பார்வையிட்டனர். பிறகு அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையை பூபேஸ் கண்ணாடி துண்டால் தனது கழுத்தை தானே அறுத்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    மேலும் அவரது சாவில் மர்மம் ஏதும் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இறந்து கிடந்த இடத்தில் கைரேகை நிபுணர் வரவழைக்கபட்டு ரேகைகளை பதிவு செய்தார்.

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே இன்று காலை தனியார் கம்பெனி பஸ்சை சிறைபிடித்து போராட்டம் நடந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் பகுதியில் இருந்து தினமும் காலை நேரங்களில் பெருந்துறையில் செயல்படும் தனியார் கம்பெனிக்கு ஆண்கள் மற்றும் பெண்களை வேலைக்கு அழைத்துச் செல்ல பஸ் வந்து செல்லும்.

    இந்த கம்பெனியில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு கம்பெனி வாகனங்களை இயக்குவதற்காக எண்ணமங்கலம் பகுதியிலிருந்து 5 பேர் பணியில் சேர்ந்துள்ளனர். பின்பு பணியிலிருந்து வேறொரு நிறுவனத்திற்கு சென்றுவிட்டதாக தெரியவருகிறது.

    இந்த 5 பேரின் ஓட்டுநர் உரிமத்தை பெருந்துறையில் செயல்படும் தனியார் நிறுவனம் திருப்பி அவர்களிடத்தில் கொடுக்க மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து இன்று காலை அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் பகுதியில் அந்த 5 பேருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பஸ்சை சிறை பிடித்தனர். இதனை அறிந்த வெள்ளித்திருப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த 5 பேரின் குடும்பத்தாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பின்பு பெருந்துறையில் செயல்படும் தனியார் கம்பெனி நிறுவனத்தில் அந்தியூர் இன்ஸ்பெக்டர் ரவி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் அவர்களது ஓட்டுனர் உரிமத்தை வெள்ளித்திருப்பூர் போலீஸ் நிலையத்தில் கொண்டுவந்து ஒப்படைப்பதாக தெரிவித்ததையடுத்து பஸ்சை விடுவித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
    பண்ணாரி கோவில் அருகே இன்று முன்னாள் சென்ற லாரி மீது மினிலாரி மோதிய விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்தியமங்கலம்:

    கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் நோக்கி ஒரு மினிலாரி சென்று கொண்டிருந்தது. லாரியை கோவையை சேர்ந்த சந்தோஷ் (வயது 23) என்பவர் ஓட்டி சென்றார். அருகில் மற்றொரு டிரைவரான பல்லடத்தை சேர்ந்த கருப்புசாமி அமர்ந்திருந்தார்.

    இன்று அதிகாலை மினிலாரி ஈரோடு மாவட்டம் பண்ணாரி கோவில் அருகே வந்தபோது முன்னால் ஒரு லாரி சென்று கொண்டிருந்தது.

    இதில் எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரி மீது மினிலாரி மோதியது. இதில் மினிலாரியின் முன்பகுதி நொருங்கியது.

    மினிலாரியில் இருந்த மாற்று டிரைவர் கருப்புசாமி சம்பவ இடத்திலேயே இடிபாட்டுக்குள் சிக்கி உடல் நசுங்கி பலியானார். வண்டியை ஓட்டி வந்த டிரைவர் சந்தோசும் படுகாயம் அடைந்தார். அவரை அந்த வழியாக வந்த மற்ற வாகன ஓட்டிகள் மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சத்தியமங்கலம் போலீசார் கருப்புசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி அருகே விபத்தில் வங்கி ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 31) ஒரு வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

    இவரது மனைவி பூரணி (34). இவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவர்களின் மகன் விஜய் (8).

    இவர்கள் 3 பேரும் கடந்த 3-ந் தேதி மோட்டார் சைக்கிளில் ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள ஒரு உறவினர் வீட்டுக்கு வந்தனர்.

    பிறகு 3 பேரும் ஊருக்கு மோட்டார் சைக்களில் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

    கோபி அருகே உள்ள ஒத்தக்குதிரை பஸ் நிறுத்தம் அருகே வந்த போது எதிரே வந்த ஒரு கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் வந்த கந்தசாமி உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    மேலும் அவர்கள் மீது மோதிய கார் நிலை குலைந்து தலைகுப்புற கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் மேலும் காரில் வந்த சதாசிவம், ராஜு, இவரது மனைவி சரஸ்வதி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    இவர்கள் 6 பேரையும் அக்கம்-பக்கத்தினர் மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பிறகு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி வங்கி ஊழியர் கந்தசாமி பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பழுதான ரோடுகளை சீரமைக்க வலியுறுத்தி ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் குண்டும் குழியுமான சாலைகள் சீரமைக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும். பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும்.

    டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கோரியும் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கவனத்தை ஈர்க்கும் வகையில் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சு.முத்துசாமி முன்னிலையில் மாநகர செயலாளர் சுப்பிரமணியம் தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ் எல் டி சச்சிதானந்தம், அவைத் தலைவர் குமார் முருகேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.இ. பிரகாஷ், கொள்கை பரப்பு இணை செயலாளர் சந்திரகுமார் மாவட்ட பொருளாளர் பி.கே பழனிச்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், பகுதி செயலாளர்கள் ராமச்சந்திரன் செல்வராஜ் தலைமை கழக பேச்சாளர் இளைய கோபால் முன்னாள் நகர செயலாளர் பொன்னுச்சாமி வக்கீல்ரமேஷ், கேபிள் செந்தில்குமார், சுரேஷ் குமார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோ‌ஷங்களை எழுப்பினர் .
    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே கோவில் சிலைகளை தூக்கி வீசியவரை போலீசார் கைது செய்து மாவட்ட கிளை ஜெயலில் அடைக்கப்பட்டார்.
    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அருகே உள்ள அரக்கன்கோட்டையில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்குள் நள்ளிரவு நேரத்தில் கள்ளியங்காட்டை சேர்ந்த லாரி டிரைவர் சம்பத்குமார் (40) உள்பட 3 பேர் நுழைந்தனர்.

    அங்கு அவர்கள் மது குடித்ததாக கூறப்படுகிறது. பிறகு அங்கிருந்த 2 சிலைகளை சம்பத்குமார் பெயர்த்து அருகே உள்ள வயல்வெளியில் வீசிவிட்டு சென்றார். மறுநாள் தனது வண்டியை எடுக்க சம்பத்குமார் வந்த போது பொதுமக்கள் அவரை கையும் களவுமாக பிடித்தனர். பிறகு பொதுமக்கள் அவரை பங்களாபுதூர் போலீசில் ஒப்படைத்தனர்.

    கோவில் சிலைகளை சேதப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் மாவட்ட கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
    ஈரோடு அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின்படி சத்தியமங்கலம் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் பங்களாபுதூர் போலீசார் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் செல்லிபாளையம் என்ற பகுதியில் இருவர் கஞ்சா விற்பதாக தெரியவருகிறது.

    அதனை தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி (வயது 31) பிடித்து விசாரித்ததில் மூர்த்தியும் இவரது மனைவி கனகா (வயது 28) இருவரும் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.

    அதனையடுத்து மூர்த்தியிடம் இருந்து 250.கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    இதனை தொடர்ந்து கணவருடன் சேர்ந்து கஞ்சா விற்று வந்ததாக சொல்லப்படும் கனகா தலைமறைவாகி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் பகுதியில் மின்கசிவு காரணமாக கோழி பண்ணை எரிந்து நாசமானது.
    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் கொளுஞ்சி காடு பகுதியை சேர்ந்தவர் பொன்னம்பலம் (35). இவர் அப்பகுதியில் பிராய்லர் கோழி பண்ணை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு சுமார் 11 மணியளவில் பொன்னம்பலம் கோழிப்பண்ணைக்கு பிராய்லர் கோழி குஞ்சுகள் லோடு வந்தது. அவர் அந்த கோழி குஞ்சுகளை இறக்கி பண்ணைக்குள் வைத்தார்.

    அதனை தொடர்ந்து கோழி குஞ்சுகளை தனது பண்ணையில் இறக்கி விட்டு வெளியில் சென்ற சிறிது நேரத்தில் திடீரென தீ பற்றி கோழிப்பண்ணை எரிந்தது.

    சத்தியமங்கலம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயயை அணைத்தனர். ஆனால் கோழிப்பண்ணை முழுவதுமே எரிந்து தேசமானது.

    இதில் சுமார் 3000 பிராய்லர் கோழிக் குஞ்சுகள் தீக்கிரையானதாக பண்ணை உரிமையாளர் பொன்னம்பலம் தெரிவித்தார்.



    ஜெயிலில் சாப்பாடு கிடைக்கும் என்பதால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதானேன் என்று மில்தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
    ஈரோடு :

    சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு, ஈரோடு ரெயில் நிலையத்துக்கும், பஸ் நிலையத்துக்கும் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கப்போவதாகவும் கூறினார். மேலும் தன்னை ஜம்மு காஷ்மீரில் இருந்து தளபதி அனுப்பி வைத்திருப்பதாகவும், முடிந்தால் காப்பாற்றிக்கொள்ளுங்கள் எனவும், தன்னுடைய பெயர் இப்ராஹிம் எனவும் தெரிவித்து விட்டு தொடர்பை துண்டித்துவிட்டார்.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ஏராளமான போலீசார் ஈரோடு ரெயில் நிலையத்தில் குவிக்கப்பட்டனர். மேலும் ஈரோடு ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் உஷார்படுத்தப்பட்டனர். ஈரோடு ரெயில் நிலையம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ரெயில்வே நுழைவு வாயில் பகுதியில் மெட்டல் டிடெக்டர் மூலமாக பயணிகளின் உடைமைகளை போலீசார் சோதனையிட்டனர். எனினும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் புரளி என்றாலும், ஈரோடு ரெயில் நிலையம் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஈரோடு போலீசார், சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் அழைப்பை ஆய்வு செய்தனர். அப்போது அந்த எண், ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த லிங்கராஜ் (வயது 45) என்பவருடையது என்று தெரியவந்தது.

    போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியபோது, கடந்த 1-ந்தேதி மதுபோதையில் லிங்கராஜ் தன்னுடைய செல்போனை தொலைத்து விட்டதாக தெரிவித்தார். பின்னர் அந்த செல்போன் எண்ணின் சிக்னலை வைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் இருக்கும் இடத்தை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அவர் ஈரோடு ரெயில் நிலையத்தில் ஒரு மறைவான இடத்தில் இருப்பது தெரிய வந்தது.

    உடனே போலீசார் விரைந்து சென்று அந்த நபரை பிடித்து, தனி இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சங்கர் நகர் பகுதியை சேர்ந்த மில்தொழிலாளி சந்தோஷ் (41) என்பதும், அவர் தான் லிங்கராஜ் தவறவிட்ட செல்போனில் இருந்து சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரிய வந்தது. இதுதொடர்பாக சந்தோசை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் சந்தோஷ் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    எனக்கு திருமணம் ஆகி 2 மனைவிகள் உள்ளனர். அவர்கள் 2 பேரும் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டனர். இப்போது என்னுடன் யாரும் இல்லை. இதனால் நான் சிறுமுகை பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலை செய்து வந்தேன். அங்கு வேலைப்பளு அதிகமாக இருந்ததால் வேலையை விட்டுவிட்டேன். வாழ்க்கையில் வெறுப்படைந்த நான், சாப்பிட வழியில்லாததால் ஏதாவது செய்து ஜெயிலுக்கு சென்றால் தவறாமல் சாப்பாடு கிடைக்கும் என்ற எண்ணத்தில் 100 எண்ணை தொடர்பு கொண்டு ஈரோடு ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர் செய்து ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.
    பவானி அருகே டையிங் கம்பெனி தொழிலாளி திடீர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி:

    சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 57). இவர் கடந்த 3 நாட்களாக காடையாம்பட்டி பகுதியில் உள்ள தனியார் டையிங் கம்பெனியில் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார்

    இந்நிலையில் நேற்று மாலை சுமார் 5, மணி அளவில் நெஞ்சு வலிப்பதாக அருகில் வேலை செய்பவர்களிடம் தெரிவித்துள்ளார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை பவானி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

    ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் இச்சம்பவம் குறித்து பவானி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரஸ்வதி விசாரணை நடத்தி வருகிறார்.

    ×